<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttps://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d-1252006748194282283', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

ஜெயமோகன் நேர்காணல்

“ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன?!” -
சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில்
படங்கள் : தி.விஜய்
விகடன் தடம், 2016-AUG-01

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன். நீண்டதொரு வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு அப்போதுதான் ஊர் திரும்பி இருந்தார். அன்று மாலையே மீண்டும் ஒரு பயணமாம். நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது, உற்சாகமாக இருந்தார். இளங்காலை நேரம் அது. தேநீர் பருகியபடி, நேர்காணலுக்கான சம்பிரதாயங்களின்றி இயல்பாக உரையாடலுக்குள் நுழைந்தோம். சினிமா, கலை, இலக்கியம், அரசியல், மதம், வரலாறு என நீண்டுசென்ற கேள்விகளும் பதில்களும்...

‘‘ஒரு பக்கம் தமிழ் எழுத்தாளர்கள் என்றாலே குடி, கலகம், ஒழுங்கின்மை, மிகக்குறைவாக எழுதுவது என்று ஒரு தோற்றம் உண்டு. அதற்கு மாறாக நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள். திட்டமிட்ட நேர ஒழுங்குடன் இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது?’’

‘‘நீங்கள் குறிப்பிடுகிற இலக்கியவாதிகளின் முகத்திற்கு ஒரு கலாசாரப் பின்னணி உண்டு. அறுபது, எழுபது காலகட்டம் வெறுமையும் விரக்தியும் நிறைந்த காலம். சுதந்திர இந்தியாவின் மீதான நம்பிக்கைகள் குலைந்திருந்த காலம் அது. கடுமையான வேலையில்லா திண்டாட்டம், அனைத்து அரசியல் நம்பிக்கைகளும் தோற்றுப்போகும் நிலை. அப்போதுதான் நக்சல்பாரி இயக்கம் தோன்றியது. இப்படியாக அந்தச் சோர்வு காலத்தை பிரதி பலிப்பதாகத்தான் அன்றைய இலக்கியம் இருந்தது.

மேலும், தமிழில் இலக்கியத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. வாசிப்பவர்களும் குறைவு. ஒரு கதையை எழுதினால், அது பிரசுரமாக இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும் நிலையெல்லாம் இருந்தது. ஆக, ஒருவர் தனது வாழ்க்கையிலேயே 15 கதைகள்தான் எழுத முடியும். அரசியல் ரீதியான சோர்வு, யாரும் கவனிக்கவில்லை என்கிற விரக்தி ஆகியவற்றைத்தான் அன்றைய இலக்கியவாதிகள் பிரதிபலித்தார்கள்.

ஆனால், உலகளவில் முக்கியமான மாஸ்டர் எழுத்தாளர்கள் யாருமே இப்படி இருந்தவர்கள் கிடையாது. வரலாற்றை மாற்றியமைத்த படைப்பாளிகள் எல்லோருமே சலிக்காமல் பல வருடங்கள் உழைத்தவர்கள். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், தாகூர் இவர்களோடு தமிழில் எழுதியவர்களை ஒப்பிட்டால், மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முன்மாதிரிகள் மேற்கண்ட  மாஸ்டர் எழுத்தாளர்களே ஒழிய, சோர்வு காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. நான் எழுதவரும்போது அந்தச் சோர்வு காலம் முடிந்திருந்தது. எனக்குத் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த சோர்வு இருந்தது. அரசியல் சார்ந்த சோர்வு இருந்தது. ஆனால், நான் அவற்றிலிருந்து ஒரு தீவிரத்தையும் ஊக்கத்தையுமே உணர்ந்தேன். என்னுடைய முன்னுதாரணம் டால்ஸ்டாயோ தஸ்தாயெவ்ஸ்கியோதானே தவிர, வருடத்திற்கு இரண்டு மூன்று கதை, கவிதைகள் எழுதுகிறவர்கள் அல்ல!’’

‘‘தமிழில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்களோ, `வெண்முரசு’ போன்ற பெரிய படைப்புகளை எழுதுகிறீர்களே?’’

‘‘இது எத்தனை பேருக்குச் சென்று சேரும்... எத்தனை பேர் படிப்பார்கள்... அது என்னவிதமான மாற்றங்களை உருவாக்கும் என்கிற கணக்குகளோடு எழுதினால், என்னால் எதுவும் எழுதவே முடியாது. மோனியர் மோனியர்-வில்லியம்ஸ் என்ற ஜெர்மானிய அறிஞர் 36 வருடங்கள் சமஸ்கிருத அகராதிக்காக உழைத்திருக்கிறார். ஆனால், அதை முடிப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். அதற்கான புகழோ, பணமோ, அங்கீகாரமோ, எதுவுமே அவருக்கு வாழும்போது கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் அதை ஏன் செய்தார் என்றால், அதன் மூலம் கிடைக்கின்ற நிறைவு. ஆக, எந்த ஒரு படைப்பின் மீதும் அது தருகிற நிறைவுதான் முக்கியமே தவிர, உடனடியாக அது எத்தனை பேரைச் சென்று சேர்கிறது என்பதே அல்ல.

`வெண்முரசு’ எழுதத் தொடங்கும்போது, நான் எனது எட்டு நண்பர்களிடம் பேசினேன். ‘கடைசி வரை நீங்கள் எட்டு பேரும் வெண்முரசை முழுவதுமாக வாசிக்க வேண்டும்’ என்ற உறுதிமொழியை வாங்கினேன். இந்தக் குறைந்தபட்ச மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன். ஆனால், இன்று `வெண்முரசை’ ஐம்பதாயிரம் பேர் படிக்கிறார்கள்.

அப்புறம் வரலாற்றுரீதியாக நீங்கள் கவனித்துப் பார்த்தால், வாசிக்கப்படக்கூடிய பக்கங்களும் அளவும் கூடுகிறதே தவிர குறையவில்லை. `சிலப்பதிகார’த்தை நீட்டி அடித்தால், அறுபது பக்கங்கள்தான் வரும். `கம்பராமாயணம்’, `பொன்னியின் செல்வனி’ல் பாதிதான் வரும். எப்பொழுது அச்சு இயந்திரம் வந்ததோ, அப்போதே நீங்கள் நீளநீளமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அச்சில் இருந்து இணைய ஊடகத்திற்கு வரும்போது இன்னும் அதிக வாசிப்பிற்குத்தான் வருகிறீர்களே தவிர, வாசிப்புக் குறையவில்லை.

 `ஹாரி பாட்டர்’ போன்ற சிறுவர்களுக்கான கதைப்புத்தகம் இவ்வளவு விற்கும் என்று 20 வருடங்களுக்கு முன்பு உங்களால் சொல்லியிருக்க முடியுமா? சிறுவர்களுக்கு 200 பக்கமே அதிகம் என்பார்கள். ஆனால், 700 பக்கங்களுடன் புத்தகம் விற்கிறது. ஆக, வாசிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாசிப்புக்கு ஏற்றவாறு வாசிப்பு ஊடகத்தை, தகுதியானதாக நாம்தான் மாற்ற வேண்டும்.’’

‘‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுதல் என்ற கருத்தை நீங்கள் முன்வைத்தபோது, ‘அது தமிழ்மொழியை அழிக்கும் யோசனை’ என்று கடும் எதிர்ப்பு எழுந்ததே?’’


‘‘அறிந்தோ அறியாமலோ எல்லோரின் மொழியாகவும் ஆங்கிலம் ஆகிவிட்டது. ஃபிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் நம்மைவிட ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு அதிகம். ஆனால், அவர்களுக்கும் உயர்கல்விக்கு ஆங்கிலம்தான் பயன்படுகிறது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் ரோமன் லிபிதான் பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களுக்கான ஒரு முக்கியமான செளகர்யம். இரண்டு லிபிகளை மனதில் வைத்துக்கொண்டு படிக்கவேண்டி வரும்போது, ஏதாவது ஒன்று மேலாதிக்கம் பெறும். இன்னொன்று மறக்கப்படும் என்பது நடைமுறை எதார்த்தம். எல்லோருக்கும் ஒரே லிபியாக இருந்தால் படிக்க எளிமையாக இருக்குமே என்பது ஒரு யோசனை. இன்றைக்கு ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்பதைக்கூட தமிங்கிலீஷில் எஸ்.எம்.எஸ் அனுப்பும் தலைமுறை இது.

ஆங்கில லிபிக்கு பழக்கப்படும் சமூகத்திற்கு நாளையே நாம் `வெண்முரசை’ ஆங்கில லிபியில் தரவேண்டி வரலாம். தமிழ் லிபி அறிந்தவர்கள் மட்டுமே வாசிக்க முடியும் என்கிறபட்சத்தில், அது வாசிக்காமல் போகக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

தமிழின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த ‘சென்டிமென்ட்ஸ்’ இருக்காது. பிராமி, வட்டெழுத்து, இன்றைய தமிழ் லிபி என மாறி மாறித்தான் தமிழ்மொழி வந்திருக்கிறது. பிராமியில் இருந்து வட்டெழுத்திற்கோ, வட்டெழுத்திலிருந்து தற்கால எழுத்துருவிற்கோ மாறும்போது, தமிழ் அழிந்துவிடவில்லையே. எழுத்துரு என்பது ஓர் அடையாளம்தான்!”

‘‘திரைப்படங்களுக்குத் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். கமல், ஷங்கர், பாலா, வசந்தபாலன், மணி ரத்னம் போன்றவர்களுடனான உங்களது அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்...’’

‘‘நான் சினிமாவிற்கு எழுதுவதை ஒரு தொழில் என்றுதான் கருதுகிறேன்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் என்னுடைய திறன்சார்ந்த பங்களிப்பை வழங்கியது போலவே, சினிமாவிலும் அவர்கள் எதிர்பார்க்கிற பங்களிப்பை வழங்கி, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி ஒரு சினிமாவின் பிரதான பங்களிப்பாளனாக என்னை நான் நினைத்துக்கொண்டதே இல்லை. இன்றைக்கும் தமிழ் சினிமா என்பது இயக்குநரின் சினிமாதான். ஓர் இயக்குநருக்கு புகைப்படக் கலைஞர், கலை இயக்குநர் போன்றோர் எப்படி உதவி செய்கிறார்களோ, அதுபோல நானும் எழுத்தின் வாயிலாக உதவிசெய்கிறேன், அவ்வளவுதான். நான் பணியாற்றிய எல்லாப் படங்களும் இயக்குநர்களின் படங்கள்தானே தவிர, என்னுடைய படம் அல்ல!”

``எழுத்தாளர் என்ற வகையில் சினிமா உங்களுக்கு எந்த வகையில்  உதவியாக இருக்கிறது?”

“ஓர் எழுத்தாளரின் முக்கியமான காலம் என்பது, எழுதுவதற்கான துடிப்பும் முதிர்ச்சியுமான நாற்பதிலிருந்து அறுபது வயது வரைதான். பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத் தேவைக்காக கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். அப்படியே உழைத்தாலும் போதுமான வருமானமும் இருக்காது. ஆனால், சினிமா என்னைப் பெரிய அளவில் இந்த நிலையிலிருந்து விடுதலை செய்தது. என் நேரம் முழுக்க என்னிடம் இருக்கிறது. சினிமா தந்த பணமும் சுதந்திரமும் இல்லையென்றால், நான் இவ்வளவு தூரம் இயங்கி இருக்க முடியாது. சினிமா என்னைப் பொறுத்தவரை நல்ல தொழில்!’’    

‘‘ஆனால், நீங்கள் வசனம் எழுதியதில் ஒப்பீட்டளவில் மலையாளப் படங்கள் அளவிற்கு தமிழ்ப்படங்கள் வெற்றிபெறவில்லையே... ஏன்?’’

‘‘ஒட்டுமொத்தமாக அப்படித் தோன்றலாம். ஆனால், ‘நான் கடவுள்’, ‘அங்காடித்தெரு’, ‘நீர்ப்பறவை’, ‘ஆறு மெழுகுவர்த்திகள்’, ‘பாபநாசம்’ இவையெல்லாம் வெற்றிப் படங்கள்தான். ஒன்பது படங்கள் எழுதியிருக்கிறேன். ஐந்து படங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன என்றால், இது நல்ல எண்ணிக்கைதான். மேலும், நான் எழுதுகிற படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் கமர்ஷியல் படங்களும் அல்ல. எல்லாமே பரிசோதனை முயற்சிப் படங்கள்தான் (Experimental Films). அந்தப் படங்களுக்கான வெற்றி சதவிகிதம் இவ்வளவுதான் வரும்.’’

‘‘கமலுடன் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள். உங்களுக்கும் அவருக்கும் இடையில் பல முரண்பாடான விஷயங்கள் உள்ளன. அவர் தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடியவர். ஆனால், நீங்கள் பெரியார் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர். இப்படிப்பட்ட முரண்பாடுகள் குறித்து உரையாடுவீர்களா?’’

‘‘கமல் சுவாரஸ்யமான மனிதர். விவாதம் செய்யக்கூடிவர்கள் சூழ இருப்பதை விரும்புவார். பெரியார் என்ற பெயரைக் கேட்டதுமே திட்டுகிற பிராமணர்கள்கூட அவரது நண்பர்கள் குழுவில் இருப்பார்கள். ஒருவகையில் விவாதங்களுக்காகத்தான் இப்படி ஒரு நண்பர் குழுவையே அவர் உருவாக்குகிறார். இப்படியான விவாதங்களின் வழியாகத்தான் அவர் தனக்கான கருத்துகளைத் தொகுத்துக்கொள்கிறார்.

ஓர் உரையாடலில் ‘பெரியாரிஸ்ட்டுகள் யாருமே குறிப்பிடும்படியான படைப்பாளிகள் இல்லை’ என்று ஒரு நண்பர் சொன்னார். ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து சுந்தர ராமசாமி வரை பல படைப்பாளிகளை ட்ரிக்கர் செய்தவர் பெரியார், படைப்பாளிகளைத் தூண்டிவிடுவதே ஒரு படைப்புச் செயல்பாடுதான்’ என்று கமல் பதிலளித்தார். இந்தக் கருத்தை விவாதங்களின் வழியாகத்தான் அவர் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்ததும் சந்தோஷமடைகிறார். கமல் என்ற நாயகனின் அந்தரங்கக் கருத்துலகம் அது. அங்கு அவர் இயல்பான கமலாக இருப்பார்.’’

‘‘இந்து தத்துவ மரபு குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். பெரியாரிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட்டுகளும் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது என்று சொல்வதை மறுத்து, ஒருங்கிணைந்த அளவில் இந்தியா முழுக்க அதற்கான அடையாளங்கள் உள்ளன என்று எழுதிவருகிறீர்கள். இந்து தத்துவ மரபு என்று நீங்கள் முன்வைப்பதற்கும் இந்து என்று அடையாளப்படுத்தப்படும் ஓர் ஏழை விவசாயிக்கும் நடைமுறை வாழ்க்கையில் என்ன தொடர்பு இருக்கிறது?’’

‘‘நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஒரு தேசம் இது. இதில் ஆயிரக்கணக்கான கடவுள்களும் நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகளும் இருந்திருக்கின்றன. இவற்றிற்கான மையம் சார்ந்த ஒரு தொகுப்பு முயற்சி ஆரம்பிக்கிறது. அந்த முயற்சி பல ஆயிரம் வருடங்கள் நடந்த பிறகுதான் ரிக் வேதமே உருவாகியது. ஏனென்றால், ரிக் வேதமே பல கடவுள்களை உள்ளே கொண்டு வந்து `பிரம்மம்’ என்கிற கருத்தோடு முடிச்சுப் போடுகிற முயற்சியில்தான் ஈடுபட்டது. அதன் பிறகு இந்தத் தொகுப்புச் செயல்பாடு இன்று வரை நடந்துகொண்டேதான் இருக்கிறது. உயர் தத்துவ உலகம், பெருந்தெய்வ உலகம், நாட்டார் வழிபாட்டு உலகம் என்ற மூன்றடுக்குக் கட்டுமானத்தைக்கொண்டது இந்து மதம்.

முதலாவது - வேதாந்தம், பிரம்மம், மறுபிறவி, ஊழ்வினை போன்றவை. இரண்டாவது - விஷ்ணு, சிவன் போன்ற பெருந்தெய்வங்கள். மூன்றாவது - குல தெய்வங்கள், குல அடையாளங்கள். சாதாரணமாகப் பார்க்கும்போது, இந்திய அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு மூன்றாவது அடுக்கான குலதெய்வங்களோடுதான் நெருக்கம் அதிகம் என்று தோன்றும். அதனாலேயே இந்து மதத் தத்துவங்களுக்கும் பெரும்பாலான இந்துக்களுக்கும் தொடர்பு இல்லை என்று தோன்றலாம்.

 ஆனால்,  பெரும்பாலான இந்துக்களின் குலதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. இது மிக முக்கியமான விஷயம். நீங்கள் எவ்வளவு கீழே இறங்கிப் பார்த்தாலும், வெளியில் இருந்து பார்ப்பதற்கு நாட்டார்தன்மை மட்டுமே இருப்பதாகத் தோன்றும். கொஞ்சம் நெருங்கி அணுகினால், அங்கே இந்து மதத்தின் சாரம் என்று சொல்லக்கூடிய தத்துவத் தாக்கம் இருக்கும். தெருவோரமாக இருக்கும் மாரியம்மனைக்கூட `பரபிரும்ம ரூபினி’ என்றுதான் சொல்கிறார்கள். `பரபிரும்மம்’ என்று சொல்வதே இந்து தத்துவ மரபின் தாக்கம்தான்!”

``சாதரண மக்களும், `பரபிரும்ம ரூபினி’ என்று சொல்கிறார்களா, என்ன?’’

``எனக்குத் தெரிந்து 400 வருடங்களாக உள்ள எல்லா துதிகளிலும் இந்த வார்த்தை இருக்கிறது. எல்லா நாட்டார் தெய்வங்களுக்கும் கதைகள் இருக்கின்றன. சுடலை, மாயாண்டி என்று எந்த தெய்வத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் கதைகளில் பொதுவான சில அம்சங்கள் இருக்கின்றன.

 அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது சாகசம் செய்து மாண்டிருப்பார்கள். ஆனால், இறப்புக்குப் பின் சிவனைச் சந்தித்து வரம் பெறுவார்கள். இப்படி நாட்டார் கதைகளுக்குள்ளும் சிவன் வந்துவிடுகிறார். சுடலையே `ஆறு சாஸ்திரங்கள் அறிந்தவர்’ என்றே சொல்லப்படுகிறது. ஊழ்வினை, மறுபிறப்பு, பெயரற்ற ஒரு பெருங்கடவுளோடு நாட்டார் தெய்வங்களுக்கு உள்ள தொடர்பு என்பதான மூன்று கருத்துகளும் எல்லா நாட்டார் பழங்குடி வழிபாட்டிலும் இருக்கிறது. இது வில்லுப்பாடல்களின் தேசம். 300 வருடங்களாக வாய்மொழியாகத் தொடர்ந்துவருகிறது. வில்லுப்பாட்டைச் சாதாரண மக்கள்தான் பாடுகிறார்கள். ஆனால், அந்தப் பாடல் ஒரு கட்டத்தில் இந்து தத்துவ மரபில் இணைவதை நீங்கள் பார்க்க முடியும்!”

``வில்லுப்பாடல்களைப் பாடுகிறவர்கள் தாழ்த்தப்பட்ட அல்லது இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பாடலை எழுத்து வடிவுக்கு மாற்றிய வைதீக நம்பிக்கையுடைவர்கள்தான் பாடலுக்குள் பெருந்தெய்வங்களைச் சேர்த்திருக்க வேண்டும் என்று ஒரு பார்வை உள்ளதே? மேலும், சிவகாசி காலண்டர்கள் கிராமங்களுக்குள் பரவலாக பெருந்தெவங்களைக் கொண்டுசேர்த்தன என்கிற பார்வையும் உண்டே?’’

``நீங்கள் இந்து மதத்துக்கும் சிறுதெய்வ வழிபாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று நம்ப ஆசைப்படலாம். ஆனால், உண்மை அதுவல்ல. ஆறுமுகப்பெருமாள் நாடார், கன்னியாகுமரியைச் சேர்ந்த படிப்பாளி. அவரை `நாட்டுப்புறப் பாடல்க ளின் உ.வே.சா’ என்று சொல்லலாம். 1920, 30-களில் அவர்தான் ஏட்டுச் சுவடிகளிலிருந்தும் வாய்மொழியிலிருந்தும் பாடல்களைச் சேகரித்தார். திருநீறு, சிவனைச் சந்திப்பது, வரம் பெறுவது போன்ற அம்சங்கள் அந்தக் காலகட்டப் பாடல்களிலேயே வலுவாக உள்ளன. அதற்கும் முன்பே இதில் பெருந்தெய்வக் கலப்பு நடந்திருக்கலாம் என்று சொல்லத் தரவுகள் தேவை!”

``தமிழகத்தின் குக்கிராமப் பகுதிகளில் வாழும் சாமான்ய மனிதனுக்கு இந்து மதத் தத்துவம் சார்ந்த பெரிய புரிதல்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே?’’

``இது உங்கள் மனப்பதிவுதான். இந்து மதத்தில் பறையர்கள் அடித்தட்டுச் சாதிதான். ஆனால், பறையர் சமூகத்தைச் சேர்ந்த வள்ளுவர்கள் அளவிற்கு இந்து மத சாராம்சமான புராணங்களை, கதைகளைத் தெரிந்தவர்கள் மிகக்குறைவே. 6-ம் நூற்றாண்டு, 7-ம் நூற்றாண்டு வரை பிராமணர்களுக்குப் பதிலாக அவர்கள்தான் பூஜைசெய்து வந்தார்கள். பின்னர் வள்ளுவர்கள் வீழ்ச்சியடைந்தார்கள். பிராமணர்கள் பூஜை செய்யத் தொடங்கினார்கள். இதற்கு வெளியில் இருக்கிறவர்கள் யார் என்று பார்த்தால், தோடர்கள், பளியர்கள் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால், அவர்களது வழிபாட்டு முறைகளிலும்கூட இந்து மதத்தின் சாயல் இருக்கத்தான் செய்யும்.

கிராமங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... மகாபாரதத்தின் இரண்டு கதைகளாவது தெரியாத கிராமத்து மனிதர்களை நான் பார்த்ததே இல்லை. இந்து மதத்துடன் எந்தத் தொடர்புமற்றவர் என்று நீங்கள் குறிப்பிடும் ஒருவரை அழைத்து, அவரிடம் `மகாபாரதக் கூத்து பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டால் ஒரு பட்டியலே சொல்வார். அ.கா.பெருமாள் `நாட்டுப்புறக்கலைகள்’ என்று ஒரு பெரிய புத்தகம் போட்டிருக்கிறார். அதில் பெரும்பாலான கலைகள் மகாபாரதத் தொடர்புள்ளவை!”

‘‘அப்படியானால் இந்து மதப் பரவலாக்கத்தில் மகாபாரதத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று சொல்லலாமா?”

“நிச்சயமாக. மகாபாரதம் மட்டுமல்ல, ராமாயணத்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது!”

‘‘பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மகாபாரதம் சார்ந்து ஏராளமான சீரியல் தொடர்கள், திரைப்படங்கள் எனப் பல்வேறு வழிகளில் அது தீவிரப் பரவலாக்கம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. நீங்கள் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வெண்முரசு’ எழுதிவருகிறீர்கள். இம்முயற்சி எந்த வகையில் அவற்றிலிருந்து வேறுபட்டது?”

``ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் எந்தக் கலை வடிவம் தோன்றினாலும் அதன் முதல் வெளிப்பாடு மகாபாரதமாக இருக்கிறது. தெருக்கூத்து, நாடகம் என அனைத்தின் முதல் வெளிப்பாடும் மகாபாரதம்தான். சமூக, அரசியல் நாடகங்கள் வருகிற வரை எல்லாம் மகாபாரதம்தான். ஊமைப் படங்கள், பேசும் படங்களின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் அனைத்திலும் மகாபாரதம்தான். தொலைக்காட்சி இங்கே வந்த உடனே, முதலில் மகாபாரதம்தான் வந்தது. அப்பொழுது பி.ஜே.பி-க்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதே. மகாபாரத டெலிவிஷன் தொடர்களிலே சோப்ராவின் தொடர்தான் மிகச்சிறந்த ஒன்று. அது உருவாக்கிய மகாபாரத அலை, சாதாரண அலை அல்ல. சோப்ராவை பி.ஜே.பி உறுப்பினர் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மகாபாரதம் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டுக்கொண்டே இருப்பதன் காரணம், அதன் டி.ஆர்.பி ரேட்டிங்தான்.யானையின் வாலைப் பிடித்துக்கொண்டு இவர்கள் போகிறார்களே தவிர, யானையை இவர்கள் வழிநடத்தவில்லை.

இதை அரசியலாகப் பார்ப்பது குறுக்கல்வாதம்தான். மகாபாரதத்தில், மனித வாழ்வின் நுண்ணுணர்வுகளுக்கான தளம் இருக்கிறது. அதுதான் முக்கியக் காரணம். நிச்சயமின்மை, தவிர்க்க முடியாத வீழ்ச்சி இவை இரண்டும்தான் மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஜெயமோகன் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. என்ன ஆனாலும் நான் வயதாகி இறந்துவிடுவேன் என்பதில் மாற்றமே இல்லை. இந்த இரண்டு விஷயங்களைப் பேசும் காவியங்கள் ஒருபோதும் அழியாது.

என்றைக்காவது ஐரோப்பா, கிரேக்கத் தொன்மங்களை விட்டுவிடுமா என்ன? ஹெர்குலிஸ் இல்லாத ஒருகாலம் அவர்களுக்கு வருமா என்ன? வரவே வராது. அதுபோலத்தான் மகாபாரதமும் இங்கே இருந்துகொண்டே இருக்கும். பி.ஜே.பி இன்றிருக்கிறது; நாளை போகும். அவ்வளவு ஏன்... இந்த நாவல் வெளியான காலத்தில் பி.ஜே.பி ஆட்சியில் இருந்தது என்று `வெண்முரசி’ல் அடிக்குறிப்பு கொடுக்கவேண்டிய காலம் வரும். ஐந்து வருடம், பத்து வருடம் ஆட்சியிலிருந்துவிட்டுப் போகும் ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன? இலக்கியம் என்பது பெரியது. காலம் தாண்டி செல்லக்கூடியது. எனது ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலைப் படித்துவிட்டு லெனின் என்பவர் யார் என்று விக்கிபீடியாவில் பார்த்து அறிந்துகொண்டதாக வாசகர்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். வரலாறு ரொம்பச் சிறியது. இலக்கியம் பெரியது!”

`` `தமிழ்க் கலாசாரம் குறித்துப் பேசும்போது தமிழர்களை மலையாளிகளோடு ஒப்பிட்டு தாழ்வாகப் பேசும் வழக்கம் ஜெயமோகனிடம் உள்ளது’ என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, நீங்கள் தனிப்பட்ட முறையில் தமிழர், மலையாளி என்ற அடையாளச் சிக்கலை உணர்கிறீர்களா?’’

``ஒரு சமூகத்தைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடிய பொறுப்பும் தகுதியும் எழுத்தாளனுக்கு உண்டு. ஜெயமோகன்  விமர்சனத்தை முன்வைத்தால், `மலையாளி’ என்பீர்கள். சுந்தர ராமசாமி முன்வைத்தால், `பார்ப்பனர்’ என்று சொல்வீர்கள். எனக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. எனக்கு விமர்சனம் இருந்தால், நான் சொல்வேன்.

அப்புறம் நான் மலையாளப் பின்னணி கொண்டவன் என்பதாலேயே, நான் தமிழர்களை, அவர்களது பண்பாட்டைப் புகழ்ந்து பேச வேண்டும் என்கிற தன்னுணர்வோடேயே இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டுகிறவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காது.

`தமிழர்கள் என்னைத் தப்பாக நினைப்பார்களோ’ என்ற மனநிலையோடு நான் பேசினால்தான், எனக்கு அடையாள நெருக்கடி இருப்பதாக அர்த்தம். இன்னொரு முக்கியமான விஷயம், இங்கே தமிழகத்தில் சிலர் சொல்வதைப்போலவே, கேரளாவில் `ஜெயமோகன் தமிழர்களோடு ஒப்பிட்டு மலையாளிகளை மட்டம்தட்டுகிறார்’ என்றும் சிலர் எழுதுகிறார்கள்.

நான் மலையாளி என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. மேலும் தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் இலக்கியத்தின் ஒரு நீட்சியாகத்தான் மலையாளத்தைப் பார்க்க வேண்டும். மலையாளத்தை தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது என்று ஒரு சிந்தனைப் பள்ளி கேரளாவில் உண்டு. `எம்.கோவிந்தன் மரபு’ என்று சொல்வார்கள். எம்.கோவிந்தனின் மாணவர்தான் ஆற்றூர் ரவிவர்மா, ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவன்தான் நான்.

இன்னொரு விஷயம், என்னை மலையாளி என்று விமர்சிக்கக்கூடியவர்கள் யாரும் இலக்கியவாதிகள் கிடையாது. ஒரு கூட்டத்தில் என்னைப் பார்த்து ‘மலையாளத்து ஆளு இங்க வந்து எழுதுறான்’ என்று ஒருவர் சொன்னபோது கூட்டத்தில் இருந்த அ.மார்க்ஸ் எழுந்து ‘ஜெயமோகன் எழுதும் ஒவ்வொரு வரியையும் நான் மறுப்பேன். ஆனால் தமிழன், மலையாளி என்கிற வாதத்தை இங்கே பேசாதீர்கள்’ என்று தன் கண்டனத்தைப் பதிவுசெய்தார். அக்கினிபுத்திரன் ஒருமுறை இதேபோல என்னைச் சொன்னபோது, அங்கிருந்த பார்வையாளர்களே அதற்கு எதிர்வினை செய்தார்கள். தீவிர இலக்கிய வெளியில் என்னை ஒருபோதும் ஒருவரும் மலையாளி என்று சொன்னதில்லை. நான் கடுமையாக விமர்சித்து எழுதியவர்கள்கூட அப்படிச் சொன்னதில்லை. ஒன்றையுமே படிக்காமல் புதிதாக உள்ளே வருகிறவர்கள், முகநூலில் சிலர் அப்படி எழுதித் திரிகிறார்கள். அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.’’

``மொழி சார்ந்த, சாதியம் சார்ந்த சாராம்ச அடையாளப்படுத்துதல்களைத் தவறு என்று சொல்லும் நீங்களே, ‘பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தவர்கள் தெலுங்கர்கள்’ என்று எழுதியிருக்கிறீர்களே? ஆனால், சமகாலத்தில் அரசியல் களத்தில் பார்ப்பன எதிர்ப்பை முன்வைப்பவர்களில் கி.வீரமணி, கொளத்தூர்மணி, வே.ஆனைமுத்து, சுப.வீரபாண்டியன், ஓவியா என யாரும் தெலுங்கர் கிடையாது. அதேபோல், அறிவுத் தளத்தில் பார்ப்பன எதிர்ப்பை முன்வைக்கும் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா,  தொ.பரமசிவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் தெலுங்கர்கள் கிடையாதே. உங்களை மலையாளி என்று சாராம்சப்படுத்துவதை விமர்சிக்கும் நீங்கள், தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்துவது என்ன நியாயம்?’’

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பை முன்வைத்தவர்கள் எல்லோரும் தெலுங்கர்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், பிராமண எதிர்ப்புக்குப் பின்னே இருக்கும் ஓர் உளவியல் மிகவும் முக்கியமானது. பிரிட்டிஷார் இங்கு வரும்போது இங்கு பெரும்பாலும் தெலுங்கர்
களிடமே நிலம் இருந்தது. இன்றைக்கும்கூட ஒரு சர்வே எடுத்தால், கணிசமான பகுதி தெலுங்கர்களிடம்தான் இருக்கும். சென்னை போன்ற பல இடங்களில் ரியல் எஸ்டேட் அவர்களிடம்தான் உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கியமான அதிகாரிகளாகவும் நிர்வாகிகளாகவும் இருந்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். குறிப்பாக நிலப் பட்டா வழங்கும் தாசில்தார்களாக பிராமணர்களே இருந்தார்கள். 1910-ம் ஆண்டுக்குப் பிறகு வந்த நிலச்சீர்திருத்த சட்டங்களில் பெரிய அடி வாங்கியவர்கள் தெலுங்கர்கள். அதற்கு முன்பு தமிழகத்தில் நிலம் தனியுடைமை கிடையாது. ரயத்துவாரி முறை வந்தபோது ஒருவருக்கு நிலம் பட்டாபோட்டு கொடுக்கக்கூடிய உரிமை தாசில்தாருக்கு வழங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தெலுங்கர்களின் கைகளிலிருந்த நிலம் பல்வேறு ஜாதிகளின் கைக்குப் போனதற்கும் தெலுங்கர்களின் பெரிய அளவிலான வீழச்சிக்கும் பிராமணர்கள் காரணமாக இருந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு தெலுங்கர்களுக்கு இருக்கிறது. இந்த வெறுப்பு, திராவிட இயக்கத்திற்குள் பிராமணிய எதிர்ப்பு உளவியலாக உள்ளே வருகிறது. இயல்பிலேயே திராவிட இயக்கத்தவர்களுக்கு பிராமண வெறுப்பை அவர்களது குடும்பப் பின்னணி கொடுத்தது. அதை அவர்கள் அரசியலாக மாற்றிக்கொண்டார்கள்.

`உங்களுக்கு நிகழ்ந்த இழப்பை வரலாறாக முன்வையுங்கள், முற்போக்காக மாற்றாதீர்கள்’ என்கிறேன் நான்.  தீண்டாமைக்கு ஆளான ஒரு தலித், பிராமண எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. `உங்களுடைய நிலத்தைப் பறித்தவன் என்கிற கோபத்தை, வெறுப்பை முற்போக்கு என்ற பெயரில் முன்வைக்காதீர்கள்’ என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பிராமண வெறுப்புக்குப் பின்னே நிலமிழந்த வெள்ளாளர்கள், முதலியார்கள், தெலுங்கு சாதிகளின் வன்மம் முக்கியப் பங்காற்றுகிறது. தெலுங்கர்கள் பொருளாதாரரீதியாக ஏமாற்றப்பட்டார்களா... மோசடி செய்யப்பட்டார்களா... அவர்களுக்கு நடந்தது நியாயமா...  என்பதெல்லாம் வேறு கேள்வி. ஆனால், இதை முற்போக்காக முன்வைக்காதீர்கள். அதை அரசியலாக தலித்துகளின் தலையில் சுமத்தாதீர்கள். `என்னுடைய கோபத்துக்காக நீயும் சேர்ந்து சண்டைபோடு’ என்று சொல்லாதீர்கள். பெரியார் உட்பட பலரிடமும் இந்த உளவியல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். இது ஒரு வரலாற்று உண்மை.

இன்னும் சொல்லப்போனால் என்னுடைய குடும்பப் பின்னணி சார்ந்து எனக்கும்கூட மிகக் கடுமையான பிராமணிய எதிர்ப்பு இருக்கிறது. ஏனென்றால், திருவாங்கூரில் பெரும்பாலான நிலங்கள் நாயர்களின் கைகளில் இருந்தன. வேலுத்தம்பி தளவாய் கலவரத்திற்குப் பிறகு பிரிட்டிஷாரால் பெரிய அளவில் நாயர்கள் பதவிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்கள். நாயர்கள் இழந்த பதவிகள் அனைத்திலும் பெரும்பாலும் தெலுங்கு பிராமணர்களும், தமிழ் பிராமணர்களும் வந்தார்கள். ஆக,  பிராமணர்களின் மீதான வெறுப்பு நாயர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அதற்காக எனது தனிப்பட்ட பிராமண வெறுப்பை நான் அரசியலாக்கக் கூடாது. பிராமணர்கள் எந்த அளவிற்கு வரலாற்றில் சாதியக் கொடுமைகளைச் செய்திருக்கிறார்களோ, அதைவிடப் பலமடங்கு நாயர்கள் செய்திருக்கிறார்கள்.

பிராமணர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காக, தெலுங்கு நாயக்கர்களோ, மலையாள நாயர்களோ செய்த கொடுமைகள் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா என்ன? அனைத்து குற்றங்களையும் பிராமணன் தலையில் போட்டுவிட்டு, வரலாற்றில் தான் தப்பிவிட நினைக்கும் உத்தியை விமர்சிக்கத்தான் வேண்டும்.’’

``வைக்கம் போராட்டத்தைப் பற்றி நீங்கள் எழுதும்போது, `பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரில் ஒருவர்தானே தவிர, அவருக்கு அதில் முக்கியமான பங்கு கிடையாது’ என்றும் `அப்பொழுது தமிழக அரசியல் வரலாற்றில் அவருக்கு என்று குறிப்பிடத் தகுந்த இடம் இல்லை, கேரள வரலாற்றிலும் அவர் குறித்த பெரிய பதிவுகளும் இல்லை’ என்பதாக எழுதியிருந்தீர்கள். ஆனால், உங்கள் கட்டுரைக்கு ஆதாரபூர்வமாகப் பல எதிர்ப்புகள் வந்தனவே?’’

``அவர்கள் எழுதியது வேறு; நான் சொல்லவந்தது வேறு. தமிழக அரசு பாடநூல்களில் `Periyar launched Vaikom struggle and he made it successful’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தமிழில், `பெரியார் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார், தொடங்கி நடத்தினார்’ என்றுதான் பதிவுசெய்யப்பட்டுவருகிறது. இது வரலாற்றுத் திரிபு. நான் சொல்லவருவது ‘பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தொடங்கவில்லை; நடத்தவில்லை; முடிக்கவில்லை’ என்பதுதான். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது. அதில் சந்தேகமே இல்லை. அன்று தமிழகத்திலிருந்து போராட்டத்தில் பங்குபெற்ற எம்.பெருமாள் நாயுடு, கோவை அய்யாமுத்து உள்ளிட்ட மூன்று தலைவர்களில் முக்கியமானவர் பெரியார்.

வைக்கம் போராட்டத்துக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. வைக்கம் போராட்டத்துக்கு 75 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈழவர்கள் போராட முயன்றனர். பிறகு, டி.கே.மாதவன் வைக்கத்துக்குள் நுழைவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார். தமிழகத்துக்கு வரும் காந்தியைப் போராட்டக்குழுவினர் சந்திக்கிறார்கள். காந்தி, ‘ஈழவர்கள் மட்டுமல்லாமல் அங்குள்ள உயர்சாதிக்காரர்களும் சேர்ந்து போராடினால்தான் போராட்டம் வெற்றிபெறும்’ என்று சொல்கிறார். மேலும், `கோயில் நுழைவுப் போராட்டமாக மட்டும் முன்னெடுத்தால், வெறும் மதப் பிரச்னையாகவும் ஆகமப் பிரச்னையாகவும் மட்டுமே பார்க்கப்படும். பொதுப் பாதையில் நடப்பதற்கான உரிமைப் பிரச்னையாக முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் சிவில் பிரச்னையாகி, பிரச்னை வெள்ளைக்காரனிடம் போகும்’ என்கிறார். வெள்ளைக்காரனிடம் போனால்தான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவர் காந்தி.

இப்படியாக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு போவதற்காக மூன்று செய்திப் பத்திரி்கைகள் தொடங்கப்பட்டன. அது ஒரு பெரிய அலையை உருவாக்கியது.

போலீஸ், அடிதடி எனத் தீவிரமாகப் போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் எம்.பி.நாயுடு போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பின் கோவை அய்யாமுத்து கலந்துகொள்கிறார். அதன் பிறகுதான் பெரியார் போய்க் கலந்துகொள்கிறார். சிறைக்குச் செல்கிறார். அடுத்தகட்டமாக ஒரு பிரச்னை வருகிறது. வெளியூர்க்காரர்கள் கேரளாவிற்குள் வந்து பிரச்னை பண்ணுகிறார்கள் என்பதாக சர்ச்சை எழுகிறது. அப்போது காந்தி, ‘இனி வெளியில் இருந்து யாரும் சென்று போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம். வைக்கத்தில் இருப்பவர்கள், அங்கேயே தங்கி இருப்பவர்கள் மட்டும் போராடலாம்’ என்று சொல்கிறார். அடுத்து இன்னொரு சிக்கலும் எழுகிறது. இந்து மதத்தை அழிப்பதற்காக மாற்று மதத்தினர் செய்யும் போராட்டம் இது என்பதாக பிரசாரம் செய்யப்படுகிறது. `ஜார்ச் ஜோசப் போன்றோர் போராட்டத்திலிருந்து வெளியேற வேண்டும்’ என்று காந்தி சொல்கிறார். பெரியார் இங்கு முரண்படுகிறார். `இது எப்படி இந்துக்களின் தனிப்பட்ட மதப் பிரச்னையாக இருக்க முடியும்? இது சிவில் பிரச்னை’ என்கிறார். ‘இல்லை நமக்குப் போராட்டத்தின் வெற்றிதான் முக்கியம்’ என்கிறார் காந்தி. பெரியார் அங்கிருந்து திரும்பிவிடுகிறார். போராட்டம் தொடர்ந்து ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நடக்கிறது.

பெருமழையால் இடையில் போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது. போராட்டம் சோர்வு நிலையடைந்து முடிவுறப்போகும் தருவாயில் போலீஸ் ஒரு தாக்குதலை நடத்துகிறது. அப்பொழுது அத்தாக்குதலின் உண்மைநிலையைப் பார்க்கும் பிட் என்ற வெள்ளை அதிகாரி, அதை பிரிட்டிஷ் தலைமைக்கு எடுத்துச் சொல்கிறான். பிரிட்டிஷ் அரசால், ‘இது அடிப்படை உரிமைக்கான போராட்டம். இதற்கு எதிராக இனி போலீஸ் வராது’ என்று அறிவிக்கப்படுகிறது. பிறகுதான் திருவிதாங்கூர் அரசு பணிந்து வருகிறது. பிட் முன்னிலையில்தான் தேவதாஸ் காந்தி, ராஜாஜி கையெழுத்திட  போராட்டம் முடிவுக்கு வருகிறது. வைக்கம் தெருக்களில் நடமாட உரிமை, நான்கு வாயில் வழியாகவும் சென்று வழிபடும் உரிமை, ராஜகோபுரம் மட்டும் பிராமணர்களுக்குரியது என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் உண்மையான வரலாறு. இந்தப் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டார் என்பதை நான் மறுக்கவில்லை. கேரள பாடப்புத்தகத்தில் அவர் இடம்பெற்றிருக்கிறார். அவருக்கு அங்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மை. ஆனால், போராட்டத்தை அவர் தொடங்கவில்லை, அவர் வழிநடத்தவில்லை, அவர் முடித்துவைக்கவில்லை. ஆக, வைக்கம் போராட்டம் குறித்து நாம் பேசும்போது இந்த முழுமையான சித்திரத்தை வழங்க வேண்டும்.

 வைக்கம் போராட்டத்தின் முக்கிய தளபதியான கே.பி.கேசவமேனனைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால், வீரமணி போன்றவர்கள் எழுதவில்லை.  `கேரளத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்க ஆளில்லாத நிலையில் பெரியாரை அழைத்தார்கள்’ என்கிற சித்திரத்தை வீரமணி போன்றவர்கள் தருகிறார்கள். இதைத்தான் நான் விமர்சித்தேன்!”

``நித்ய சைதன்ய யதி ஆசிரமம் ஆரம்பித்தபோது, பெரியாரைப் பார்த்து அவர் விபூதி எடுத்துக் கொடுத்து ஆசி வழங்கியதாக எழுதியிருக்கிறீர்கள். அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?’’

``நித்ய சைதன்ய யதியே தன் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். ஆசிரமம் ஆரம்பிக்கும்போது அல்ல, துறவு பூணும்போது. பெரியாரிடம் அன்று பலர் வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றிருப்பார்கள். அதில் யதியும் ஒருவர். நாம் இப்பொழுது அறியும் யதி அல்ல அவர். பெரியாரின் பார்வையில் அந்நிகழ்வு அவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்காது. ஒரு 27 வயது இளைஞன் வந்து ஆசி வாங்கிச் செல்கிறான் என்பதாக இருந்திருக்கும். பெரியாருக்கு அவர் நித்ய சைதன்ய யதி என்று தெரியாது.’’

``ஒன்றுபட்ட இந்தியா என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறீர்கள். தேசிய இனப் போராட்டங்களை `இந்தியாவைப் பிளக்க நினைக்கும் சதி’ என்றும் விமர்சிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் முன்வைக்கும் ஒன்றுபட்ட இந்தியா என்னும் அமைப்பால் இன்னும் மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பிரச்னையையே தீர்க்க முடியவில்லையே? மொழிவாரியான தேசிய இனங்களின் பிரச்னைகளை முக்கியமற்றவை என்றா கருதுகிறீர்கள்?’’

``இந்தியா ஒன்றாக இருப்பதற்கான மிக வலுவான காரணம், ரொம்ப காலமாகவே இது ஒன்றாக இருக்கிறது என்பதுதான். உதாரணமாக, இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிகமாக வாழ்ந்துவருகிறார்கள். ஒரு சின்னப் பிரிவினை எவ்வளவு ரத்தம் கேட்கும் என்பது நமக்குத் தெரியும். தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள், ஒருவேளை தனித் தமிழ்நாடு அமைத்துவிட்டால், இங்குள்ள தெலுங்கர்களை வெளியேற்றினால், அது எவ்வளவு பெரிய அளவில் அகதிப் பிரச்னையை உருவாக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த ஃபெடரல் அமைப்பிலேயே இவ்வளவு வெறியை உருவாக்குபவர்கள், இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

நதிநீர்ப் பிரச்னை இருக்கிறது என்பது உண்மை. இது எந்த அளவிற்கு மாநில அளவிற்குள் இருக்கிறதோ, அதே அளவில் மாவட்ட அளவிற்குள்ளும் இருக்கிறதே! பேச்சிப்பாறை தண்ணீரை திருநெல்வேலிக்கு கொடுப்பதா, இல்லையா என்பதுதான் கன்னியாகுமரியின் பெரிய பிரச்னை. மீன்பிடி, மின்சார உற்பத்தி, நீர்வளம் என தமிழகத்துக்குப் பெரிய அளவில் பங்காற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, பதிலாக என்ன கிடைக்கிறது? ஆக, இந்தியாவில் ஏன் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்கிற கேள்வியைவிட தமிழகத்துக்குள் ஏன் கன்னியாகுமரி மாவட்டம் இருக்க வேண்டும் என்பது இன்னும் வலுவான கேள்வியாக இருக்கிறது.

சரி... தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரித்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம். அப்பொழுது என்ன செய்வீர்கள்? கர்நாடகாவோடு போர் புரிவீர்களா? பேச்சுவார்த்தைதானே நடத்துவீர்கள்? அதை இப்போது நடத்துங்கள். ஓர் அமைப்பாக நாம் இருக்கும்போதே தீர்வுகாண முடியாத பிரச்னையை, தனித்தனி நாடுகளாக பிரிந்த பின் எப்படித் தீர்ப்பீர்கள்? சரி... யாரைத் தேசிய இனம் என்று சொல்வது... எப்படி அதை வரையறுப்பது?  

சங்ககாலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டும்தான் தமிழர்களாக இருக்க முடியும் என்றால், பாணர், பறையர், கடம்பர், துடியர் தவிர எல்லோரையும் வெளியேற்ற வேண்டுமே? ஒன்றாக இருந்தால் ஒன்றாக இருக்கலாம். பிரிந்தால், மேலும் மேலும் பிரிந்துகொண்டே இருக்கவேண்டியதுதான்.’’

`` `ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை  தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’

``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.

1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது?

இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது.

இலங்கை அரசு, தமிழர்களை  மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

அரசு தனக்கு எதிரான போரை, போராகத்தான் பார்க்கும். புலிகள் பெரும் போரைத் தொடங்கினார்கள், அவர்கள் போரை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். காந்தி ஏன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரைத் தொடங்கவில்லை? ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்குமென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தின் வாளை அதன் உறையிலிருந்து உருவவிடக் கூடாது என்பதில் காந்தி தெளிவாக இருந்தார். புலிகளின் முதன்மையான தவறு, அவ்வளவு வலிமையற்ற மக்களை ஆயுதத்தோடு அரசுக்கு எதிராகக் கொண்டு நிறுத்தியது. இதை ஏற்றுக்கொண்டுதான் நாம் மேலும் இதுகுறித்துப் பேச முடியும்.

மேலும், ‘இலங்கையில் அறவழிப் போராட்டங்கள் நடந்து, அதற்குப் பிறகும் அடக்குமுறை தொடர்ந்ததால்தான் ஆயுதப் போராட்டம் வந்தது’ என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. செல்வநாயகம் போன்றவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் என்பது குறைந்தகாலம்தான். நீண்டகாலம் அங்கு ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. அதனால், குமரன் பத்மநாபா போன்ற ஆயுதத் தரகர்கள் பலன் பெற்றார்கள் என்பதுதான் உண்மை. இது பெரும் உரையாடலாகத் தொடரவேண்டிய விஷயம்!”

``அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற இசங்களின் அறிமுகம் வாயிலாக தமிழ்ச்சூழலில் நடந்திருக்கும் முக்கிய மாற்றமாக எதைப்  பார்க்கிறீர்கள்? எந்த அளவில் புதிய படைப்புகள் உருவாக இவை உதவியிருக்கின்றன?’’

``இவையெல்லாம் படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான கொள்கைகளே தவிர, படைப்புகளை உருவாக்குவதற்கான கொள்கைகள் அல்ல. நவீனத்துவம்,  பின்நவீனத்துவம் என்பதெல்லாம் ஒரு காலகட்டத்தின் போக்குகளைக் குறிக்கக்கூடிய வார்த்தைகள்.

நவீனத்துவம் - பின்நவீனத்துவம் என்பது அறுதியிட்டுச் சொல்லக்கூடிய எல்லைப் பிரிவுகளோடெல்லாம் இல்லை. தோராயமான ஒரு புரிதல்தான். நவீன காலத்தைச் சேர்ந்த நமது அப்பாக்களுக்கு அறிவியலின் மீது, பெரிய அமைப்புகளின் மீது நம்பிக்கை இருந்ததைப் பார்க்கிறோம். பின்நவீன காலத்தில் வாழும் நாம் அறிவியலை, பெரிய பெரிய அமைப்புகளின் ஊழல்களை, சுரண்டல்களைப் பார்க்கிறோம். இவற்றின் மீது நம்பிக்கையற்றிருக்கிறோம். இந்தக் காலகட்டம் சார்ந்த புரிதல்கள் படைப்புகளின் வாசிப்பிற்கு அவற்றைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும்  சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்றவை ஒரு படைப்பின் அழகியலைக் குறிக்கக்கூடிய வார்த்தைகள். செவ்வியல் என்றால் என்ன என்பதை அறிந்தவர், கம்பராமாயணத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதில் ஒரு மிகைப் புனைவுக்காட்சி வரும்போது, `இது எதார்த்தமில்லையே’ என்று செவ்வியல் அறிந்தவர் கேட்க மாட்டார். ஒரு யதார்த்தவாதப் படைப்பில் ஏராளமான தகவல்கள் இருக்கும். ‘கதையைச் சொல். எதற்கு இவ்வளவு தகவல்கள்?’ என்று கேட்கக் கூடாது. கோட்பாட்டுப் பயிற்சிகள் படைப்புகளை அணுகவும் புரிந்து கொள்ளவும் உதவும். தமிழில் கோட்பாடுகள் குறித்து அதிகம் பேசியவர்கள், அதைப் புனைவோடு இணைத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள்.

 தமிழில் பின்நவீனம் குறித்துப் பேசியவர்கள், அதை தலித்தியத்தோடு இணைத்தார்கள். `தலித்துகள் பின்நவீனத்தை எழுதுவதுதான் சரியாக இருக்கும்’ என்றார்கள். ஆனால், தலித்துகள் எழுத வந்தபோது யதார்த்தத்தைத்தான் எழுதினார்கள். ஏனென்றால், தலித் வாழ்க்கையில் ஒருவர் ஃபேன்டசி கலந்து எழுதினால் என்னாகும்? ஏற்கெனவே அது நம்ப முடியாததாக இருக்கிறது. அதில் ஃபேன்டசி கலந்தால், முழுதுமாக நம்பவே முடியாத ஒன்றாக மாறிவிடும். உள்ளது உள்ளபடி எழுதுவதுதான் அதற்குச் சரியான வடிவமாக இருக்கும்.’’

``தமிழவன், சாரு நிவேதிதா,  எம்.ஜி.சுரேஷ் போன்றோர் தங்களது நாவல்களைப் பின்நவீன நாவல் என்றும், அவர்களுடையது பின்நவீன எழுத்து முறை என்றும் சொல்கிறார்களே...’’

``அது ஒரு விற்பனை உத்தியாகக்கூட இருக்கலாமே? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதிலும்கூட சாரு நிவேதிதா மட்டும்தான் ஓரளவு க்ரியேட்டிவான ஆள். மற்ற இருவர் குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை.’’

 ``சாரு நிவேதிதா ஒரு காலகட்டத்தில் உங்களை கடுமையாக விமர்சித்திருகிறார். ஆனால், தற்போது அண்ணன்-தம்பி என்கிற அளவிற்கு அவரது குரல் மாறியிருக்கிறது. இந்த முரணையும் உறவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``(சிரிக்கிறார்) சாரு - ஜெயமோகன் சண்டை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் ஒருபோதும் அவரோடு சண்டை போட்டது இல்லை. ஒரே ஒரு நகைச்சுவைக் கட்டுரை மட்டும் எழுதினேன். மற்றபடி இதுவரை அவரை விமர்சித்து எதுவும் நெகட்டிவாக எழுதியது இல்லை. அவருடைய இந்த மாற்றம் குறித்து அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.’’

``தொடர்ந்து பெண் எழுத்தாளர்கள் குறித்து நீங்கள் எழுதுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. சமகாலத்தில் நம்பிக்கைத் தரும்படியாக ஒரு பெண் எழுத்தாளர்கூட இல்லை என்கிறீர்களா?’’

``எனக்கு லீனா மணிமேகலை பிடித்தமான கவிஞர்தான். கண்டிப்பாக ஒன்றிரண்டு பேர் எழுதத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்களின் ஆர்வமே பெரிய அளவில் எழுத வேண்டும் என்பது அல்ல. கவனத்தைக் கவர வேண்டும். அதன் வாயிலாக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றுவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஒருவரின் வெற்றி மற்றவர்களைத் தவறாக வழிநடத்திவிடுகிறது. `குட்டி ரேவதி என்ன எழுதிவிட்டார்? சுமாராகத்தான் எழுதுகிறார். ஆனால் அமெரிக்காவெல்லாம் போகிறார். லண்டனில் கூப்பிடுகிறார்கள். ஆக நாமும் அவரைப்போல ஆக வேண்டும்!’ என்பதாகத்தான் யோசிக்கிறார்கள். எழுத்துக்குப் பின்னால் ஒரு கனவு இருக்கிறது; தவம் இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணனை எடுத்துக்கொண்டால், அவர் எழுத்தாளராக உருவாவதற்காக எடுத்துக்கொண்ட இருபத்து ஐந்து ஆண்டு கால உழைப்பு, வாசித்த புத்தகங்கள் என எவ்வளவு இருக்கின்றன? ஆனால், பெண் எழுத்தாளர்கள் அதைச் சுலபமாக அடைய நினைக்கிறார்கள்!”

`` ‘விகடன் தடம்’ முதல் இதழில் சிறுகதைவெளி குறித்த கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் பல சிறுகதை எழுத்தாளர்களின் பெயர் விடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. பிரபஞ்சன், ஜி.முருகன், யூமா வாசுகி போன்றவர்களின் பெயர்கள். அதேபோல் குறிப்பாக ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா என இடதுசாரி முகாம்களில் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தனவே?’’

``முதலில் அது ஒரு பெயர்ப் பட்டியல் அல்ல. சிறுகதை வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்தில் குறிப்பிட்ட போக்கை உருவாக்கியவர்கள் அல்லது அந்தப் போக்கை முன்னெடுத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல கதைகளை எழுதிய எல்லோரின் பெயர்களையும் பட்டியலிட வேண்டும் என்கிற முயற்சியை நான் அதில் செய்யவில்லை.

நீங்கள் குறிப்பிடக்கூடிய பெயர்களைக் குறித்து பார்த்தோமானால், ச.தமிழ்ச்செல்வன் மொத்தமே மூன்று அல்லது நான்கு நல்ல கதைகளைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், நான் குறிப்பிட்டிருக்கிறவர்களைப் பார்த்தீர்களானால், `They are lived for Short Stories!’. அது பெரிய விஷயமல்லவா? யூமா வாசுகி எத்தனை கதைகளை எழுதியிருக்கிறார்? 5 அல்லது 10 கதைகள் எழுதியிருப்பார். எனக்கு நினைவிலிருப்பதே அவரது இரண்டு கதைகள்தான். எனது நெருங்கிய நண்பர்தான் பவா செல்லதுரை. அவர் பெயரையும் அதில் நான் சேர்க்கவில்லையே?

இலக்கியத்துக்கு இந்த கறார்த்தன்மை வேண்டும். அப்புறம் ஆதவன் தீட்சண்யா பெயரைச் சொன்னீர்கள். பத்திரிகைகளில் பிரசுரிக்கும் தகுதியுடைய கதைகளைக்கூட அவர் இன்னும் எழுதவில்லை. அவர் ஒரு தலித் எழுத்தாளராக தன்னை க்ளெய்ம் பண்ணிக்கொள்வதனாலேயே, அவரை அங்கீகரிக்க வேண்டும்மென்பது இல்லை. He is not writer at all. அவருக்கு எழுத்தே வரவில்லை.

வண்ணதாசன் போன்றோர் தனது வாழ்க்கையையே சிறுகதைக்காக செலவழிக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது வருடத்திற்கு ஒன்றிரண்டு சிறுகதை எழுதுகிறவர்களையும் தன் வாழ்நாளையே சிறுகதைக்காகத் தருகிறவர்களையும் ஒரே வரிசையில் வைக்க முடியாது. ஏற்றுக்கொள்வதில் அல்ல; நிராகரிப்பில்தான் மதிப்பீடே இருக்கிறது. உண்மையில், இந்தப் பட்டியலைக்கூட இன்னும் கறாராகப் போட்டிருக்க வேண்டும். ஆனால், ஓரளவேனும் தொடர்ந்து பங்களித்தவர்களின் பெயர்கள் இருக்கட்டுமே என்று சேர்த்துக்கொண்டேன்.’’

``ஈழத்து எழுத்தாளர்களில் ஷோபா சக்தியை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். ஷோபா சக்திக்குப் பின்னர் சமகாலத்தில் சயந்தன், குணா கவியழகன், தமிழ்நதி, யோ.கர்ணன் போன்ற பல புதிய  ஈழத்துப் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள்.  அவர்களைப் பற்றிய உங்களது பார்வை என்ன?’’

``என்னுடைய வாசிப்பைப் பொறுத்த அளவில் ஈழம் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகள் இரண்டுபேர்தான். ஒருவர் அ.முத்துலிங்கம், மற்றொருவர் ஷோபாசக்தி. அதில் சந்தேகமே இல்லை. முந்தைய எழுத்தாளர்களில் மு.தளையசிங்கத்தைச் சொல்லலாம். நாவல்களில் சயந்தனின் ‘ஆதிரை’ கிளாசிக் என்று சொல்கிற அளவிலான முக்கியப் படைப்பு. யோ.கர்ணன் படைப்புகளை வாசிக்க முடிகிறது, அவ்வளவுதான். இலக்கியப் பட்டியலில் சேர்க்கிற அளவிற்கு முக்கியமானவராகச் சொல்ல முடியவில்லை. தமிழ்நதி, வாஸந்தி லெவலில்தான் எழுதுகிறார். வாஸந்தி எழுதியதைவிட முக்கியமான எதையும் தமிழ்நதி எழுதிவிடவில்லை. அதனால் அவரை முக்கியமான எழுத்தாளராக நான் கருதவில்லை. சட்டநாதன், ரஞ்சன்குமார் போன்றோர் நல்ல எழுத்தாளர்களாக உருவாகியிருக்கவேண்டியவர்கள். புலம்பெயர்ந்ததில், கடுமையான உழைப்பில் சோர்வடைந்துவிட்டார்கள்.’’

`` `கனடா இலக்கியத் தோட்ட விருது ஜெயமோகனுக்கு நெருக்கமானவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது’ என்று ஒரு பேச்சு இருக்கிறது. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?’’

``கனடா இலக்கியத் தோட்ட விருது மட்டுமல்ல; தமிழில் கொடுக்கக்கூடிய பெரும்பாலான முக்கிய விருதுகள் எல்லாமே, நான் சொன்ன பிறகுதான் கொடுப்பார்கள். ஏனென்று கேட்டால், தமிழில் வேறு எந்த எழுத்தாளர் இன்று எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எல்லோரையும் வாசித்து அதில் முக்கியமானவர்களை முன்வைக்கிறார்... அதுவும் கறாராக யார் முன்வைக்கிறார்? நான் யாரையும் விருதுக்கு பரிந்துரைப்பது இல்லை. நான் வாசிக்கிறேன். எனது வலைதளத்தில் நன்றாக எழுதுகிற புதியவர்களை சுட்டிக்காட்டி கவனப்படுத்துகிறேன். விருது வழங்குகிறவர்கள் அதை கவனிக்கிறார்கள்; அவ்வளவுதான். நாளை நீங்கள் யாருக்காவது விருது தருவதாக இருந்தாலும், அது நான் சுட்டிக்காட்டிய எழுத்தாளருக்காகத்தான் இருக்கும்!”

``பத்மஸ்ரீ விருதை மறுத்தபோது அதற்குக் காரணமாக, உங்களை விமர்சிப்பவர்களைச் சுட்டியிருந்தீர்கள். அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியச்சூழல் உண்மையிலேயே பிரச்னைக்குரியதாக இருக்கிறதா, என்ன?’’

``அது அப்போது எமோஷனலாக எடுத்த ஒரு முடிவுதான். அரசு போன்ற பெரிய அமைப்புகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்கிற எனது எண்ணம்தான் அதற்கான காரணம். வாங்கியிருக்கலாம். பின்னால் விருது என்பது ஒரு பளுவாகிவிடும்.’’

``விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை ஒரு பெரிய அமைப்பாக மாற்றுவதாகவும் அதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுவது உண்மையா?’’

``அவ்வளவு பெரிய திட்டம் ஏதும் இல்லை. அதில் யார் முக்கியம், யார் முக்கியம் இல்லை என்கிற மனக் கசப்புகள் எளிமையாக உள்நுழைந்துவிடும். ஒருவேளை அப்படி அமைத்தாலும் கொஞ்ச நாளைக்கு சுவாரஸ்யமாக இருக்கும். பிறகு சோர்வு வந்துவிடும். முக்கியமாக பலருக்கும் கல்யாணமாகிவிடும் (சிரிக்கிறார்).  தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோமே... ஏதாவது செய்யலாமே என்கிற ஓர் எண்ணத்தில்தான் `விஷ்ணுபுரம் விருது’ கொடுத்துவருகிறோம். அதுவும்கூட சாகித்ய அகாடமி வழங்கப்படாத எழுத்தாளர்களுக்குக் கொடுத்து வருகிறோம். அவ்வளவுதான். மற்றபடி  பெரிய அஜெண்டா ஒன்றும் இல்லை. ஒரு சிறிய அளவிலான டிரஸ்ட் ஆரம்பித்து நன்கொடைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசித்து வருகிறோம்.’’

``காந்தி, அம்பேத்கர், மற்றும் பெரியாரிடம் இருந்து  இன்றைய இளம் தலைமுறை உள்வாங்கிக்கொள்ள வேண்டியவை என்று நீங்கள் கருதுகிற விஷயங்கள் எவை?’’

``எதிர்த் தரப்போடு மாற்றுக் கருத்துக்களை உரையாட எப்போதும் திறந்த மனத்துடன் தயாராக இருப்பது - இது காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று. இரண்டாவது, நுகர்வுக்கு எதிரான மாற்றுச் சிந்தனை. மூன்று, படிப்படியான சமூக மாற்றம் என்கிற பார்வை. அதனால்தான் அவர் போராட்டங்களோடு பிரசாரம் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

அம்பேத்கரிடம் நாம் உள்வாங்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘தத்துவம் அறத்தோடு பிணைந்திருக்க வேண்டும்’ என்கிற பிடிவாதம். ‘மேலான அறத்தை உருவாக்காதது மேலான தத்துவமாக இருக்க முடியாது’ என்று நம்பியவர் அம்பேத்கர். இந்திய அரசியல் சட்டத்தின் பல பகுதிகளை நான் கண்கலங்கி வாசித்திருக்கிறேன். பெரிய உயரத்தில் நின்று ஒரு ஞானியாக இருந்து அவர் அதை உருவாக்கியிருக்கிறார். `இந்திய வேதம்’ என்று சொல்லக்கூடிய அளவில் மதிப்புடையது அது. இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு 25 வருடங்களுக்குப் பிறகுதான் சுவிட்சர்லாந்து தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போதுதான் இந்திய சட்டம் குறித்த பெருமைகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

பெரியார் பற்றிய எனது விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியை நோக்கிய கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்திருக்கக் கூடாது என்பதுதான். நாளைக்கு பிராமணர்கள், எதற்காக விமர்சிக்கப்பட்டார்களோ, அந்தத்  தன்மைகள் அத்தனையையும் இழந்து பிராமணியம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழும் ஒரு காலம் வந்தாலும், பெரியாரின் விமர்சனம் அங்கேயே நின்று கொண்டிருக்கும். அதை அவர் செய்திருக்கக் கூடாது என்கிறேன். அதேசமயம், அவரது சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கான குரல் முக்கியமானது. மேலான ஆன்மிகம் என்கிற நிலைக்குக் கீழே உள்ள சடங்குகள், ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகளில் நிலவும் மூடநம்பிக்கை களின் மீது அவர் முன்வைத்த விமர்சனங்கள் முக்கியமானவை. அவரது பகுத்தறிவுப் பார்வை முக்கியமானது. அவர் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தவாதி!”

``எழுத்துக்கு இடையில் எப்படி உங்களை  ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?’’

``பயணம் எனக்குப் பெரிய ரிலாக்ஸ். அப்புறம் இசை கேட்பது.’’

``என்ன மாதிரியான இசை உங்களுக்குப் பிடிக்கும்?’’

``ஹிந்துஸ்தானி விரும்பிக் கேட்பேன். கர்நாடக சங்கீதம் நான்கைந்து வருடங்கள்தான் கேட்க முடியும். பிறகு சலித்துவிடும்.’’

``தமிழ்த்திரை இசை கேட்பதுண்டா?’’

``நிறைய கேட்பேன். தமிழ், மலையாளம் என அனைத்தையும் கேட்பதுண்டு. திரையிசைப் பாடல்களில் இருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால், மூன்று நிமிடங்களில் பாடல் முடிந்துவிடும். ஹிந்துஸ்தானி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீளும். நண்பர்கள் நாற்பது ஐம்பது பேர் விடிய விடியக் கேட்போம். சில சமயம், பகல், இரவு, மறுநாள் பகல் என்று தொடர்ந்து 56 மணிநேரமெல்லாம்கூட இசை கேட்டிருக்கிறோம். இசை கேட்கும்போது எனக்குள் பல காட்சிப் படிமங்கள் எழும். பெரும்பாலும் அவை நிலக் காட்சிப் படிமங்களாக இருக்கும். இளையராஜாகூட அப்படித்தான் சொல்வார்!”

``இளையராஜாவுடனான உங்கள் உறவு பற்றிச் சொல்லுங்களேன்...’’

``அவர் மிக எளிமையான மனிதர். தனிப்பட்ட முறையில் பல பாடல்களை நான் கேட்டுக் கொண்டதற்காகப்  பாடிக்காட்டியி ருக்கிறார். நிறைய புத்தகம் வாசிப்பார். அவரிடம் ஒரு நூலகம் இருக்கிறது. அங்கு யாரையும் அனுமதிக்க மாட்டார் என்பார்கள். ஆனால், நான் ஒருநாள் சகஜமாக அந்தப் புத்தகங்களைப் பார்வையிட்டபோது, ‘இதைத் தொட்டா சாருக்கு கோபம் வரும்’ என்றார் ராஜா சாரின் உதவியாளர். ஆனால், அப்போது அங்கே வந்த இளையராஜா, ‘உங்க `விஷ்ணுபுரம்’ வாங்கிவெச்சிருக்கேன் பாருங்க’ என்று இயல்பாகப் பேசத் தொடங்கினார். அதுதான் அவர். அவரைப் பற்றி வெளியில் இருக்கும்  எதிர்மறையான பிம்பத்துக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பொதுவாகவே சாதாரண மக்களுக்கு வி.ஐ.பி-கள் மீது ஈர்ப்பு இருப்பதைப் போலவே, சின்ன ஈகோவும் இருக்கிறது. ராஜாவின் பாடல்களைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், சில நிமிடங்களிலேயே ‘இது அந்த ராகம்தானே, இது இந்த ராகம்தானே’ என்று தங்களை மேதையாகக் காட்டிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதுமாதிரியான போலித்தனங்கள் அவரை எரிச்சலடையச் செய்யும். பொதுவெளியில் அவரது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். அவருக்கான உலகம் வேறு!”

``ஜெயமோகன் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’

``ஒருவர் எப்படி வரலாற்றில் நினைவுகூரப்படுவார் என்று முன்பே சொல்லவே முடியாது. ஆனாலும்... `இந்திய தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர்’ என்று அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.’

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சுஜாதா சிறுகதைகள்

clicksujatha.com என்ற ஒரு காலத்தில் இயங்கிய தளத்தில் இருந்து எப்போதோ சேமித்து வைத்த சுஜாதாவின் சிறுகதைகள்:

+++

அப்பா அன்புள்ள அப்பா
சிறுகதை சுஜாதா

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.
"எங்கே வந்தே" என்றார்.
"உனக்கு உடம்பு சரியில்லைன்னு" என்று மழுப்பினேன்.
"நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து

விட்டார்கள்.சாப்ட்டியா?"என்றார்" எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?"
"என்னப்பா வேணும் உனக்கு"
"உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ-" பல்லில்லாத சிரிப்பில்

சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.
நர்ஸ் வந்து "தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்பஇன்டெலிஜெண்ட்" என்றதற்கு "நான் அவனை விட

இன்டெலிஜெண்ட்" என்றார்.
பேப்பர் பேனா எடுத்து வரச்சொல்லி "உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்" என்று வம்சாவழியைச்

சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நு‘று ரூபாய்

சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம் பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். "பழைய விஷயங்கள்

எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால்கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன

என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்"
"அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?"
"தெரியும் .ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக்

காப்பாற்றாமலா போவீர்கள்?"
"ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?"
"வேணட்‘ம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ உனக்கு

எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும்.

நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ" என்றார்.
பெங்களூர் திரும்பிவந்து ஒரு வாரத்துககுள் மறுபடி žரியஸ் என்னனனனறு தந்தி வந்தது.
என்.எஸ் பஸ்ஸ’ல்" என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?"
"எங்கப்பா žரியஸா இருக்கார்ப்பா"
"ஓ அப்டிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா"
ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில்

பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட் சொட்டெனறு ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில்

ஆக்ஸ’ஜனும் ஆஸ்பத்திரி வாசைனயும் வயிற்றைக் கவ்வியது.
கண்ணைக் கொட்டிக்கொட்டிக் கண்­ரை அடக்கிக்கொண்டு "அப்பா அப்பா" என்கிறேன்.
கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. "நான்தான் வந்திருக்கிறேன்" என்று கையைப் பற்றுகிறேன்.
பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது.கையை மெல்லத் து‘க்கி முக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார்.

தோற்கிறார்.
"நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி"
படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல்

தனியாகக் கார் ஓட்டிக்கெண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸ’ப்ளினால் கலக்கியவர் "நல்ல ஆபிஸர்தான்

ஆனா கொஞ்சம் முன் கோபிங்க"
இவரா அணைக் கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக்கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்?"என் வில் பவரை

டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது" இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டு விட்டு காஙகிரசில்

சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா?"ஐ வாஸ் கிரேஸ’ தட் டைம்"
மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார். "பெட்ஸோர் வந்துரும்

பாருங்க"
ஸ்டாஃப் வந்து பக்கத்து•ககு ஒரு ஊசி கொடுத்து "நீங்கதான் ரைட்டர்ங்களா?" என்கிறார். நான் ஆஸபத்திரியைத் திகைத்துப்

போய்ப் பார்க்கிறேன்.
ஆஸபத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதீயிருக் கிறார்கள். டாக்டர்கள்

எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.
"ஒரு ஸ’டி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?"
"முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார், ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ"
"ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹ’ம் ஆன் எ ஹெவி டோஸ் ஆஃப் லாஸ’க்ஸ்" எல்லா டாக்டர்களுமே

திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள் தான், ஆனால் ராத்திரி• முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன்.

து‘க்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம்

முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப்போய் இரை தேடச் செல்கின்றன.

இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா?

கிட்டப்போய்க் கேட்கிறேன்.
"என்னப்பா?"
"போதும்ப்பா என்னை விட்டுருப்பா" என்று மெல்லச் சொல்கிறார்.வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது. If I had

strength enough to hold a pen. I would write how easy and pleasant it is to die.
பொய்!
ஆனால் இவர் அவஸ்தைப் பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில்

கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்துவைத்ததா?

ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப்

பாடுபட்டதா? பிரபநதத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?
காலை ஐந்து மணிக்கும்பிக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது

கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் "பைபிளில் பல

இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்க ளுக்கும் அதற்கும்

வித்தியாசமே தெரிவதில்லை" பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.
ஆஸபத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லரை கொடுக்காதவர்களை யெல்லாம்

விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். "இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு

சொல்லமுடியாது.இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்ததைத் தட்டி "நாக்கை நீட்டுங்கோ" மெல்ல

நாக்கை நீட்டுகிறார்.
"பேர் சொல்லுங்கோ"
"žனிவாசரா.."
"அஃபேஸ’யா அத்தரோ சிலிரோஸ’ஸ் .ஹ’ இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி"
புதுசாக பல்மனரி இடீமா உன்று சேர்ந்து கொண்டு அவரை வீழ்த்தியது.
சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார் உடன் அப்போது இருந்த சித்தி "கண்

வழியா உசிர் போச்சு "என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று

கொண்டு அவர் மார்பைக் கண்­ரால் நனைத்தோம்..வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக்

கொண்டுவைத்தார்கள்.
நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் "வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி

காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்" என்று முழுமையாக எரித்தோம்.
காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம்.இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம்.

"மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?"
உறவுக் காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

பிராமண போஜனம் செய்விக்காதவர்களை யெல்லாம் சிரித்துக்கொணடே கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞசித்து ஹ’ரண்யம்! அப்பா மரணத்தைப்

பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது "அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸ“ஸ் டு எக்ஸ’ஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை

மறுபடி படி"
"Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist".
ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் பதினோராம் நாள்.. பிரேதத்தின் தாகமும் தாபமும் திருவதற்காக அதன்

ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த "ஒத்தன்" என்னைப்பார்த்து சிரித்து "நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில

நன்னா இருக்கு ஸார் அடுத்ததடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்"
சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி

வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுச நு‘த்தந்தாதியும சரம ஸ்லோகமும்

சொல்லிவிட்டு"எனக்கினி வருத்தமில்லை" இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.
"அவ்வளவு தாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த

ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ".
சுபஸ்வீகாரம். எல்லோ‘ரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பதுபேர்

காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷவு‘ல்ட்டியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர் கதைக்கு டைட்டில்

கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன். Ask Rangarajan about Bionics

ஓவர்žஸ் பாங்கில் மிசையில்லாத என்னைப் பார்தது சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் 'எய்தர்

ஆர் சர்வைவர்' அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது.

(முற்றும்)

Author's Note on this story
This is not a story. It is an article I wrote immediately after the death of my father When it was published in `Kumudam` many people pointed out its short story

structure When describing a real poignant incident like this the writer's craft comes in in the selection of incidents and non emotional narration. Incidentally the short

story "நிஜத்தைத் தேடி" was re-published in Kungumam weekly and was selected as the best story of the month by "இலக்கிய சிந்தனை" a literary forum

which holds its meeting rain or shine, every month for more rhan twenty five years now. Ironically when the story was published first time twenty years back it wasn't noticed.

==========================================================================


அரிசி
சிறுகதை சுஜாதா

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள

மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்ட வசமாக, முன்

பட்டியலைச் சார்ந்தவர்.'தேமேனு' சென்று கொண்டிருநத என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று

ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து 'ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு' என்று

சொன்னார்.

A Broken cycle depicting the accident scene என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு.

மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ்டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம்

உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை

மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்"அப்படியா? மாத்திட்டாப் போச்சு" என்றேன்

அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார்.அங்கிருந்து பேசினார் "கிட்டு நீங்க வாங்கிட்டு

வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா"

"அது எங்க கிடைக்கும்?"
"ஜே,ஸ’, ரோடு போகணும்"
சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க"
"அதெப்படிஙக முளுக்க பார்க்காம சொல்லிட முடியாதே"
"முளுக்கப் பாருங்களேன்"
அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்தப் பட்டறையை விட்டு வெளியே வந்தேன்.திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி

போடப்பட்டு பரபரவென்று முன் சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப்

பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நு‘று அதற்கு ஐம்பது

என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார்.கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன குறைந்து போய்விடும் ? வெட்டி வம்பில்

மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது.மில்கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து.போக்கு வரத்து

கணிசமாக இருந்தது.எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன.அருகே ஒரு

ஓட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலிபீடத்துக்குத் திரும்புகையில் அந்த விபத்தைப் பார்ததேன்.

ஒரு கிழவன் செள்ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் 'லொடக்கா லொடக்கா'என்று சப்தமிட்டுக் கொண்டு வந்து

கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு 'மெட்டடார்' வேன் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல்

,பார்க்காமல்,நிறுத்தாமல், முட்டாள்தன மாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான்.அதன் டிரைவருக்கு

ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை . டம் என்று சப்தம் கேட்டது அப்புறம் நான் கிழவனைப் பார்க்கவில்லை. என்

வயிற்றில் பந்து சுருண்டு கொண்டது.

பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. ஆனால்

அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது . இருந்தும் மெல்ல நெருங்கினேன். வேன் நின்றிருந்தது.கிழவன் மேல் சுத்தமாக

ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.

கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான்.அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து

கொண்டிருந்தது வாய் திறந்திருந்தது.உடல் ஒரு வித நடுக்கம் போல் ஆடிக் கொண்டிருந்தது அவன் உயிர் விரைவில் பிரிந்து

கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி

நடந்துகொண்டோம்? சொல்கிறேன்.

"டிரைவர் எங்கய்யா?"
"அதோ உக்காந்துக்கிட்டிருக்காரு"
"நான் இல்லிங்க டிரைவர்"
"ஆசாமி இறந்துக்கிட்டிருக்கான் து‘க்குங்க"
"தூக்காதிங்க! போலிஸ் வரட்டும்"
"அந்த ஆட்டோவை நிறுத்துய்யா"
நிறுத்தப் பட்ட ஆட்டோ கூட்ட வளையத்தை முத்தமிட்டுவிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது அருகே கடந்த பி.டி.எஸ்

பஸ்ஸ’ன் ஜன்னல் பூரா முகங்கள்!"பிரசன்னா žக்கிரம் வந்து பாரு!" என்று பஸ்ஸ’ன் உள் ஒரு அழைப்புக் கேட்டது.

"போலிஸ் வரட்டும் அது வரைக்கும் ஒண்ணும் செய்யக் கூடாது"
"டெலிபோன் செய்யுங்களேன்"
"ஸார் நீங்கதான் போய் செய்யுங்களேன்"
"எனக்கு அர்ஜண்டா வேலை இருக்கு.போலிஸ் வந்துருவாங்க"
இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்றுக் கொப்புளங்கள்

வெடித்தன.

"ஆள் யாருஙக"
"யாருக்குத் தெரியும்"
"கூட ஒருத்தரும் வரலியா"
"நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஓட்டலுக்குப் போய் போன் பண்ணிடுங்க" என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார்.

நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.அங்கே உற்சாகமாக எல்லோரும் டிபன் பண்ணிக்

கொண்டிருந்தார்கள்
"டெலிபோன் செய்யணும்"
"எழுபத்தஞ்சு பைசா"
"தர்றேன்"
"முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி டி கூடாது"
"இல்லை . போலிசுக்கு போன் செய்யணும். ஒரு ஆக்ஸ’டெண்ட்"
"பண்ணிக்கங்க"
"டைரக்டரி வேணும்.அவசர போலிஸ் உதவிக்கு என்ன நம்பர் செய்யணும்?"
"தெரியாது"
"டைரக்டரி இல்லையா?"
"இல்லை!"
"அந்தாளு இறந்துகிட்டு இருக்கான்"
"ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-"
"என்ன?"
"இதில மட்டும் மாட்டிக்காதிங்க"
"எதில?"

"ஆக்ஸ’டெண்ட் கேஸ’ல நான் ஒரு முறை ,இந்த மாதிரி ஆகஸ’டெண்ட் கேஸ்தான், வழில கிடக்கான்.கார்ல எடுத்திட்டு

ஆஸபத்திரிக்குப் போனேன்.'அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ். விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்

போ'ன்னாங்க.விக்டோரியா எவ்வளவு து‘ரம்?- அங்கே போனேன் ."அங்க போனா 'போலிஸ்காரங்க இல்லாம எப்படி நீ பாடிய

மட்டும கொண்டு வரலாம்'னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க அதுக்கப்புறம் அங்க போன் பண்ணி

இங்க போன் பண்ணி போலிஸ் வந்தாங்க

முதல்லயே என்மேல ஏறினாங்க'எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத்

திட்டினாங்க அவங்க ஆஸபத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள் போய்ட்டான்' டெட் ஆன் அரைவல்'னு முடிச்சுடடு

கையெழுத்துப் போட்டு கிடங்குங்குக்கு அனுப்பிச்சுட்டாங்க."கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி

ஆறு மாசம் இழுத்து அடிச்சாங்க கோர்ட்டுககு .சம்மன்ஸ் வரும் அங்கே போவேன் இன்ஸபெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல்

வரமாட்டாரு ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கீல் ஒத்திப் போட்டுருவாரு "அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக

மொத்தம் என்ககு ஆன செலவை கணக்குப் பண்ணிப் பார்ததேன். கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா அதோட நின்னுச்சா கேஸ் ?

என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துககு நானே காரணம்ஙகற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை

விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில் என்

பொறுப்பை என் கடமையை செஞ்சதுக்கு"

"நான் பிரமிப்புடன்கேட்டுக் கொண்டிருந்துவிட்டு "யாராவது போலிசுக்கு போன் செய்ய வேண்டாமா" என்றேன்

"நீங்க தாராளமா போன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க .எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்"
"நம்பர் தெரியலையே"
"நு‘று பண்ணுங்க"
நான் போலிஸ•க்கு டெலிபோன் செய்துவிட்டு திரும்ப அங்கே சென்றேன்
ஏற்கெனவே இரண்டு டிராஃபிக் போலிஸ் ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தாரகள் நான்

சென்றதும்
"இவர்தாங்க " என்றார் ஒருவர் என்னை சுட்டிக்காட்டி
"போலிசுக்கு சொல்லிட்டேன்" என்றேன்
"போலிஸ் வந்தாச்சு .பக்கத்தில்தானே சேஷாத்ரிபுரம் போலிஸ் ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்துட்டார் டிரைவரு"
போலிஸ் இன்ஸபெக்டர என்னைப் பார்தது "கொஞ்சம் வாங்க" என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன்.
"நீங்க இந்த ஆக்ஸ’டெண்ட்டை பார்த்திங்களா?"
" ம்.. பார்த்தேன்"
"உங்க பேரு?" அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது.என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன ."எதுக்கு?"
" எதுக்கா?..விட்ன்ஸ் ஸார்! சாட்சி. நீங்க பார்க்கலை?"
"அது வந்து ... பார்ததேன் து‘ரத்தில இருந்து சரியாப் பார்க்கலை"
"இப்பதான் பார்ததேன்னு சொன்னிங்க? அட்ரஸ் சொல்லுங்க"
"அட்ரஸ் வந்து.. நான் ஊருக்குப் புதுசுங்க"
"ஊருக்குப் புதுசா? பங்களுர்ல தங்கறவர்தானே?"
"அதாவது மெட்றாஸ்காரன் நான்"
" சரி. இங்க வேலை செய்யறவரா?"
" இல்லை.. இன்ஃபாக்ட் நான் இன்னிக்கு பிருந்தாவன்ல திரும்பிடறேன்"
அவர் நான் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை.என்னை வருத்தத்துடன் பார்த்துச் சிரித்தார் "ஏன் ஸார் சாட்சி சொல்றதுக்கு

அவ்வளவு பயமா?"
"பயம்னு இல்லிங்க. வந்து நான் ஊர்லயே இல்லாம இருந்தா எப்படி சாட்சி சொல்ல முடியும் இதோ இவர் கூடப் பார்த்தார்"
"அய்யோ நான் பார்க்கலை இப்பத்தான் வரேன்"
"யாராவது பாத்தவங்க சாட்சி சொல்ல வரமாட்டிங்களா? யாராவது?

கூட்டம் மெல்லக் கலைந்தது
நான் ஒரு சின்ன சமாதான முயற்சியாக"ப்ளீஸ் லுக் இன்ஸபெக்டர் ! தி ஃபாக்ட் இஸ் திஸ்! என்னால சாட்சிக்கு வரமுடியும்

எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது.சந்தோஷமா வருவேன். ஆனா வெளியூர்க்காரன்.. அதனால மெட்றாஸ்ல இருந்தா

எப்படி.." இன்ஸபெக்டர் கோபததுடன் "போய்யா! மெட்றாஸ் போய்யா இங்க ஏன் நிக்கறே ! போ" என்றார்.கிழவனின் அருகில்

சென்றார் அவன் இது நேரத்தில் இறந்திருந்தான் நான் சற்று þநெரம் நின்றேன். மெதுவாக அருகில் இருப்பவரிடம்"மெட்றாஸ்ல

இருந்து வந்து எப்படி சாட்சி சொல்ல முடியும் சொல்லுஙக"
"அதானே! ஆவுறதில்லை அது" என்று அனுதாபித்தார்
திரும்ப மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தேன் அவர் என் காரின் அக்கக்கான பாகங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்
"கிளட்சு ப்ளேட்டு கூட தேஞ்சிருக்கு மாத்திரலாமா" என்றார்
"செய்யுங்க"
"இன்ஜினை டவுன் பண்ணணும் மூணு நாளாகும்"
"செய்யுங்க. எஸ்டிமேட் கொடுத்துடுங்க"
"மொத்தம் முன்னு‘த்தம்பது, எல்லாத்துககும் பில் கொடுத்துர்றேன்" "சரி"
"உங்க அட்ரஸ் சொல்லுங்க"
சொன்னேன்
"எத்தனை வருசமா அந்த ஃபாக்டரில இருக்கிங்க"
"ஒம்பது வருஷமா"
"புதன் கிழமை வந்துருங்க"
"சரி" என்று வெளியே வந்தேன்
இப்போது அந்த காவி வர்ண வேனைக் காணவில்லை. கூட்டம் விலகியிருந்தது ஒன்றிரண்டு பேர்களே இருந்தனர்.

போலிஸ்காரர்களையும் காணோம். நான் விபத்து நடந்த இடத்தை மறுபடி கடக்க வேண்டியிருந்தது கிழவன் கிடந்த

இடத்தில் அடையாளமாக உறைந்த ரத்தத்திட்டு இருந்தது. சைக்கிள் கிடந்தது. ஏறக்குறைய கிழவனின் வயசிருக்கும் போல்

புராதன சைக்கிள். அதன் ஹாண்டில் பாரில் ஒரு அழுக்குப்பை மாட்டியிருந்தது அதில் கிழவன் அரை கிலோ அரிசி வாங்கி

வைத்திருந்தான் போலும். அந்த அரிசி சாலையில் சிதறியிருந்தது. பாதி அரிசி ரத்தத்தில் இருந்தது இரண்டு சிறுவர்கள் ரத்தம்

படாத அரிசி மணிகளை ஆர்வத்துடன் அள்ளி டிராயர் பைக்குள் அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

(முற்றும்)

This is one of my much discussed stories.Written more than a decade ago When I was in Bangalore, this was translated into many Indian languages . The incident happened in front of me almost in full. But a true incident like this is not sufficient theme for a short story Traffic accidents occur every day in every town.Old men on bicycles die every day .That is mot enough .Only when I saw the two little boys picking up the scattrerd grains of rice it suddienly transformed into a truly effective theme for a short story.The implied message in this is wantonly left unsaid.Just imagine how the effect of the shock ending could be destroyed if I had added one more sentence like :- என்னே இந்த சமூகத்தின் கொடுமை!"

==========================================================================


இரண்டணா

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான

நெளிநெளிகள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில்

கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை து‘க்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு

வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்

இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று

அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் žரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர்

கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் Sketch by artist இலநதைப்பழம் லேக்கா உருணடை

கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர்

கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு

புளிப்பு மிட்டாய் தருவார் . வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில்

தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி

அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு

பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ

பார்த்துக்கொண்டு வாங்கலாம். ரங்கராஜாவில் 'காப்டன் மார்வல் 'படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி

நிலையத்தில் அவர்சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற

பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம் விகடன் பத்திரிகை நீல நிறத்தில்

அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல

சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி

பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!

அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய்

வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள்.

ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு

வந்து "மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்" என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக்

காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான். ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில்

இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு

கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார்

நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும கண்ணெதிரே ,இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில்

பனை விசிறிக்கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை žமெண்ணை

எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்

"என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா

வேப்பெண்ணையா " என்றார்

அப்போதுதான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து "என்ன எண்ணை பாட்டி?"

"உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா

நல்லெண்ணைதாண்டா"

மீண்டும் ஓடிப்போய் " ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா"

"நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா" நான்

மீண்டும் ஓடி வந்து சொல்ல" ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு

வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு" இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா"

"நீ சொல்லவே இல்லையே பாட்டி" என்றேன் நியாயம் தானே "காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான்

ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச்

சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே

கொட்டிடப்போறே " இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல்

வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது

ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முடடியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்துதான் அரையர்

கடைக்கு போக முடியும் கூட்டம கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது . மத்தளம் அவ்வப்போது உருமியது

பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள்

அவளைவிட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக து‘க்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம வரைந்து அதில்

பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத்

துண்டு என்று பலவித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க
"வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை , மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன் " ஒரு கீரி

ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து "பயப்படாத பக்கத்ல வந்து குந்து"

என்று என்னை அழைத்தான் அந்த பரட்டைததலை சிறுமி சின்ன பல்வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்

ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம்

தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்
"கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து

ஆட்டுவேன் ... இது என்ன?" என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்
"ஒரணா"
"என்னது ஒக்காளியா" என்று கேட்க சபையில் சிரிப்பு
"நெருப்பில அரதம்வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாருமபார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா

இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?" என்று

கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி "பாழும் வவுத்துக்காக!"
"நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷ’யாயிருச்சுன்னு ஒரணா

ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப்புள்ளையை பந்தாடப் போþற்ன்" எல்லாரும் பலமா

கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித்தான்

நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கியமானேன் "தகிரியமுள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க" என்று கேட்க ஒரு

சிறுவன் முன்னால்வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன்முன் விரல்களை என்னவோ பண்ண அவன்

சட்டென்று து‘ங்கிப்போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் "யார் வூட்டுப் புள்ளையோ இது" என்றான்

தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை

வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது த என்று அதை

அதட்டினான் உள்ளுணர்வில் அஙகிருந்து விலகவேண்டும என்றுதான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல

ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தைவிட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப்போனது அந்த பைஜாமா

சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன்மேல லாவகமாக நடந்தாள்

அதன்பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம்

பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது "யார் பெத்தபுள்ளையோ இதை

எழுப்பவாணாமா?"

"வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா" என்று சொன்னபோது சபையோர் மெல்ல

எழுநதிருக்க "ஏய்!" என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் "பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு

வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு" என்று கையில் அந்த பேனைக்கத்தியை

எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது "இதான் உனக்காகும்

ராத்தரி" அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக்

காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட

இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது

ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன்போல நடந்து வந்தேன் வீட்டின் அருகில் வந்தபோதுதான் நிஜ உலகத்து

நிதர்சனங்கள் எனக்கு உரைக்க "எங்கே இரண்டணா" என்பதுமட்டுமின்றி எங்கே கிண்ணி? கிண்ணியையும் வைத்துவிட்டு

வந்துவிட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்" ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல

வச்சுட்டு பாடம் படிக்கபோ" என்‘றள் மீண்டும தெருக்கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக்காரன் சாமக்கிரியைகளை

கவர்நதுகொண்டு சென்றிருக்க வேண்டும விறிச்சோடியருந்தது தெரு. போய்விட்டான்

நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம்எதிரொலிததது சப்தம்

வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போடடிருக்க

மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தைககாரன் அருகில் சென்þற்ன அந்தப்பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன்

பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்

வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும்

என்பதுபோல்
"வா தம்பி"
"நான் வந்து கீழ சித்திரைவீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது"
"தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒருகண்டிசன்
"என்ன
"எங்கூட வரியா வித்தைகாட்ட லர்ல்குடி பிச்சாண்டாரகோவில் இந்தபக்கம் குளித்தலை அந்தப்பக்கம் புதுக்கோட்டை

வரைக்கும போகலாம்" என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்

"ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா" என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் "என்

கிண்ணியை கொடு" " கொடுக்கறேன் கொடுக்கறேன் " அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப்போது

நீட்டி நீட்டி கொடுப்பதுபோல் கொடுதது கையை இழுத்துக கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான்

"கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ்

அலகாபாத் கல்கத்தா " நான் வீட்டுக்கு திரும்பும்போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் "வரல்ல? வரப்ப

ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா" என்றாள் நான் ஓடிவந்து அவசரமாக என் உண்டியலை உடைதது எட்டு காலணா சேர்த்து

அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன், *****

பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில்

எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு

கையால்புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழனறு சுழன்று ஆட.... எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க

மாட்டேன் .

===============================

இடது ஓரத்தில் - சிறுகதை

அறையில் மங்கலான வெளிச்சம். அதன் நடுவில் ஒரு கட்டில். அந்தக் கட்டிலில் அவள் படுத்திருக்கிறாள். படுத்திருக்கிறாள் என்று சொல்வது தப்பு. மார்பில் கத்தியால் குத்தப் பட்டுத் துவண்டு கிடக்கிறாள்.அவள் அணிந்திருக்கும் நீல நிறப் புடவை கலைந்திருக்கிறது அருகில் அவள் கணவன் குனிந்த தலையுடன் வாயைக் கைக்குட்டையால் மூடிக்கொண்டு சோக உருவமாக நிற்கிறான்.போலிஸ் இன்ஸபெக்டர் கையிலுள்ள நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

போலிஸ் புகைப்படக் காரர் தன் உதவியாளருடன் எதிர்ச்சுவரில் பதிந்திருக்கும் விரல் அடையாளங்களை ஆராய்ந்து

கொண்டிருக்கிறார். இடது ஓரத்தில்...

ராகவனுக்கு மிக அவசரமாக 180 ரூபாய் பணம் தேவையாக இருந்தது. மிக மிக அவசரம்! இதோ நாளைக்கே ஊரிலிருந்து

தம்பியிடமிருந்து மணி ஆர்டர் வந்துவிடும்.இன்று சாயங்காலம் எடுத்து நாளைக் காலை திருப்பி விடலாம். இதில் என்ன,

முன்னே போட்டு பின்னே புரட்டுகிற சமாசாரம்.

இந்த நம்பிக்கையில் ஆபிஸ் பணம் ருபாய் நு‘ற்றெண்பதை எடுத்து அந்த நீல நிறப் புடவையை வாங்கிவிட்டான்.பளபளக்கும்

அதன் அழகில் மயங்கி அவன் மனைவி மோகனமாய்ச் சிரித்தபோது நு‘ற்றெண்பது என்ன ,ஆரத்து எண்ணு‘று ருபாய் கூடக்

கையாடலாமே என்று தோன்றியது.

மாலை இருவரும் சினிமாவுக்குப் போனபோது எதிரே வந்த ஸர்தார்ஜியைப் பார்த்ததும் சுரீர் என்றது ராகவனுக்கு.

ஸர்தார்ஜி..குருநானக்.. குருநானக்கின் பிறந்த தினம்.. நாளைக்குத் தபால் ஆபிஸ் விடுமுறை.

நாளைக்கு மணி ஆர்டர் வராது. ஆபிசில் கையாடிய பணத்தைத் திருப்பி வைக்க முடியாது. ஐயையோ!

சினிமாவில் மனம் எப்படிச் செல்லும் ராகவனுக்கு?
எதிரே விசாலமான திரையில் அவனை வேலையைவிட்டு நிக்கிவிட்டதையும் சிறையிலே அடைப்பதையும் படமாகக்

காட்டுவது போலிருந்தது! நகத்தைக் கடித்துக்கொண்டான்.
மனைவி "ஏன் ஒரு மாதிரியாக இருக்ககிறீர்கள்" என்றாள், ராகவன் பதில் பேசவில்லை.
இடைவேளயின் போது குளிர்பானம் குடித்ததும் சற்று அமைதி ஏற்பட்டது. சாதாரணமாக ஆபிசில் இருபதாம் தேதிக்குப் பிறகு

திடீர்ச் செலவுகள் வருவது கிடையாது.மானேஜர் பணம் எதும் கேட்கமாட்டார்.இன்றைக்குத் தேதி இருபத்திரண்டு. முதல் தேதி

வரை எப்படியும் சமாளித்து விடலாம். ராகவனுக்கு கொஞ்சம் தைரியம் ஏற்பட்டது.
முதல் தேதியன்றுதான் சம்பளம் கொடுக்குமுன் மேனேஜர் போனமாதக் கண்ககைச் சரி பார்ப்பார் ஆனால் அதற்குள் மணி

ஆர்டர் வந்துவிடும் இதோ நாளை மறுநாள் வந்துவிடும்! பயப்படாதே நிச்சயமாக பயப்படாதே என்று சொல்லிக் கொண்டான்.
ரகவனின் துரதிரஷ்டம் மறுதினமோ அதற்கு மறுதினமோ மணிஆர்டர் வரவில்லை. மூன்றாவது தினம் கடிதம்தான் வந்தது.
"அண்ணா இந்தத் தடவை நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும் உனக்காக அனுப்பப் பணம் வைத்திருந்தது உண்மை.

ஆனால் அதற்குள் அம்மாவுக்கு கடும் ஜூரம் வந்து அந்த மைஸ’ன் இந்த மைஸ’ன் என்று மருநதுக்கும் டாக்டருக்கும்

செலவாகிவிட்டது அம்மா பிழைத்தது உன் பணத்தால்தான். மன்னித்துக் கொள் மனனித்துக்கொள்."
ராகவன் பதறினான்.
மன்னிப்பு யாருக்கடா வேண்டும்? பாவி, பணம் வேண்டும் பணம். இல்லாவிட்டால் வேலை போய்விடும். சிறை வாசம் கூட

நேருமே.இப்போது என்ன செய்வேன் முதல் தேதி மேனேஜர் கணக்குப் பார்ககும் போது உதைக்குமே இருப்பது ஆறு நாள்

வேண்டியது நு‘ற்றெண்பது ரூபாய்.
டென்ஸ’ங் எவரெஸ்ட்சிகரத்தை எட்டிப் பிடிக்கக் கிளம்பியதுபோல் ராகவன் ரூபாய் புரட்டக் கிளம்பினான்.நான்கு

முக்கியமான நபர்களைக் கடன் கேட்க எண்ணினான். அதில் இரண்டுபேர் இவன் போன சமயம் வீட்டில்

இல்லை.மூன்றாமவன் ரூபாய் என்றதும் பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டதுபோல் இடி இடி யென்று சிரித்து விட்டு இல்லை

என்பதற்கு அத்தாட்சியாகத் தான் குடிக்கும் சிகரெட் 'ப்ராண்டை'க்காட்டினான் (அந்த வகை சிகரெட் ,மட்டத்திலும்

மட்டமாம்!). நான்காவது நண்பன் இவன் கேட்க வாயெடுப்பதற்குள் தானே கேட்டுவிட்டான் ராகவனை. அலுததுப்போய்

வீட்டுக்கு வந்ததில் அந்த எண்ணம் உதயமாயிற்று. மனைவியின் சங்கிலியைக் கேட்டோ அல்லது திருடியோ எடுத்துச்

சென்று விற்றால்? சே! புடவையை வாங்கிக் கொடுத்து விட்டு சங்கிலியைப் பறிப்பதாவது! முட்டாள்தனம் .வேறு என்ன

செய்வது?
தன் அறையில் வந்து உட்கார்ந்து செய்தித்தாளைப் புரட்டினான், உடனே துள்ளினான்.
அந்த இடத்தில்
அந்த வினாடியில்
அவனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது
செயதித் தாளின் நடுப்பக்ததில் அவன் பார்த்த செய்தி!
'ஆசிரியருக்கு கடிதங்களில் இரண்டாவது கடிதம் தான் அவனைத் துள்ளவைத்தது.
அந்தக் கடிதத்தில்-
"ஐயா
நமது நாட்டின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான ஜஸ்வந்த் கடந்த மாதம் 13ம் தேதி தன் 53 வது வயதில் மாரடைப்பால்

காலமானது யாவரும் அறிந்ததே ஜஸ்வந்த் ஒரு முதல் தர சித்திரக்காரர். அவர் சித்திரங்களில் உஎள்ள உண்மைத்தன்மை

எவரையும் கவரும் ஜஸ்வந்த் தன் இளமைப் பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தினார். அப்போது அவர் தமது

ஓவியங்கள் பலவற்றை மிகவும் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். அப்படி அவர் விற்றவை இதற்போது யார் யாரிடம்

இருக்கிறது என்று கண்டு பிடிக்க முயன்றோம் தோல்வி அடைந்தோம் .அவற்றை எல்லாம் சேகரித்து ஒரு 'ஜஸ்வந்த் நினைவு

மலர்' வெளியிட வேணடும என்பதே எங்கள் ஆசை.
உங்கள் வாசகர்கள் யாரேனும ஜஸ்வந்தின் ஓவியங்கள் வைத்திருந்து அதை அவர்கள் விற்கத் தயாராக இருந்தால் நாங்கள்

மிக மகிழ்சசியுடன் ஏற்றுக் கொள்வோம். நன்கொடையாக வழங்கினாலும் சரி அல்லது விலைகேட்டாலும் வாங்கிக்

கொள்கிறோம்.
பி ஜானகிராம்.
செயலாளர் ஜஸ்வந்த் கழகம், சென்னை 6

கடிதத்தைப் படித்ததும் ராகவன் கூடத்துக்கு ஓடினான். ஆம் அவன் எப்பொழுதோ பத்து ரூபாய்க்கு வாங்கின ஜஸவந்தின்

படம் ஒன்று அங்கே மாட்டப் பட்டிருந்நதது. அதைக் கழற்றி ஒரு செய்திததாளால் மூடிச் சுற்றிக்கொண்டான்.
மாடி வீட்டிற்கு ஓடினான் .அங்கே டெலிபோன் டைரக்டரி இருந்தது. அதிலிருந்து ஜஸவந்த் கழகத்தின் விலாசத்தை

தெரிந்துகொண்டு உடனே புறப்பட்டான்.
நுஙகம் பாக்கத்தில் அந்த வீட்டின் கதவைத்தட்டும போது ராகவனுக்கு கை நடுங்கியது பதற்றத்தால்.
திறந்தவர் ஒரு கண்ணாடி போட்ட வயதானர்.பிரித்துக் காட்டிய சித்திரத்தில் அந்த மனிதர் ஆழ்ந்துவிட்டார். அவர்

கண்களில்நீர் தளும்பியது. செக் புஸ்தகத்தை எடுத்து "எவ்வளவு வேண்டும்" என்று கேட்டார்.
"இருநு‘று ரூபாய்" என்றான் ராகவன்.
செக் எழுதிக கொடுத்து விட்டு "மிக்க நன்றி இந்த சித்திரத்தை நான் மாதக்கணக்காகத் தேடிக்கொண்டிருகிறேன்" எனறார்

ஜானகிராம்.
செக்கை பையில் போட்டுக் கொண்டு தப்பினேன் என்று சுதந்தரமாக மூச்சுவிட்டான் ராகவன் . பாங்கில் மாற்றிப் பணத்தை

எடுத்த இடத்தில் திருப்பினான்.
இனி இந்த மாதிரி வேலையில் இறங்குவதில்லை என்று பளார்பளார் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.
சில மாதங்களுக்குப்பிறகு ஜஸ்வந்த் ஞாபகார்த்த மலரின் ஒரு பிரதி ராகவனுக்கு வந்தது. அதில் அவன் விற்ற சித்திரம்

அழகாக அச்சடிக்கப் பட்டிருந்தது.
அந்த சித்திரத்தில் -
அறையில் மங்கலான வெளிச்சம். அதன் நடுவில் ஒரு கட்டில். அந்தக் கட்டிலில் அவள் படுத்திருக்கிறாள். படுத்திருக்கிறாள்

என்று சொல்வது தப்பு. மார்பில் கத்தியால் குத்தப் பட்டுத் துவண்டு கிடக்கிறாள்.அவள் அணிந்திருக்கும் நீல நிறப் புடவை

கலைந்திருக்கிகறது அருகில் அவள் கணவன் குனிந்த தலையுடன் வாயைக் கைக்குட்டையால் மூடிக்கொண்டு சோக

உருவமாக நிற்கிறான்.போலிஸ் இன்ஸபெக்டர் கையிலுள்ள நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

போலிஸ் புகைப்படக் காரர் தன் உதவியாளருடன் எதிர்ச்சுவரில் பதிந்திருக்கும் விரல் அடையாளங்களை ஆராய்ந்து

கொண்டிருக்கிறார். இடது ஓரத்தில்...
சாய்வாக ஜஸ்வந்த் என்று கையெழுத்து காணப்படுகிறது

(முற்றும்)

Author's note on this story

I have written more than 150 short stories till now.Many readers ask me which was my first published story. It was in a magazine called `Sivaji` and the year was 1953

when I was 18. I dont have a copy nor do I remember its content.Then there was a long gap I did my graduation , got a job and was posted to Delhi During those

worldly pursuits, I didnt write at all. In Delhi one day a friend showed me a short story he had written. It was bad. I rewrote it for him. He sent it in his name and it got

published in `Kumudam` I realised for the first time that I had some talent. I wrote some of my own and sent them to `Kumudam` A few got rejected and at last the

first one was published.It was August 23.1962 issue of `Kumudam`. Nothing earth-shaking happened It was an ordinary story and is given here just to show that good

writers need not always have to arrive with a bang like Arundhati Roy! Perhaps this story can be analysed for some of its early indictors like short sentences. the

desire to be clever and the desire to be slightly different from the usual rut Officially this is my first published story.


==========================================================================



ஜில்லு
சிறுகதை சுஜாதா

ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தில் ஒரே ஒரு மேகம் கருப்புத் தீற்றலாகத் தெரிந்தது.ஆத்மா கதவைச் சார்த்தினான்

.வரப்போகிறது. தெரிந்துவிட்டது.அவர்கள் கணக்குப்படி சாயங்காலம் மழை வந்து விடும். அதற்குள் புறப்பட்டுவிட வேண்டும்.
திரும்பினான். நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்."žக்கிரம் நித்யா!" "எதை எடுத்துக்கறது எதை

விடறது?"
"மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க" "அவசியமானதுங்கறது எது?"
அந்த கேள்விக்கு இந்த சந்தர்ப்பத்தில் 'மூச்சு' என்பதைத் தவிர ஆத்மாவிடம் வேறு பதில் இல்லை . தோருவின் வால்ட்டன்

ஞாபகம்வந்தது.ஒன்றுமே தேவையில்லைதான் ,எல்லாமே புதுசாக அமைத்துக் கொள்ளலாம்.
ஆத்மா ஹாலைச் சுற்றிலும் நிதானமாகப் பார்த்தான்.பதினைந்து வருஷ மண வாழ்க்கையின் சேகரிப்புகள்.அவ்வப்போது

சந்தோஷம்,செய்தி,அறிவு,இதம் தந்த எத்தனை சாமான்கள்!ஸ்டீரியோவின் ஸ்பீக்கர்கள் இடம் வலமாக மௌனமாக நின்று

கொண்டிருந்தன . உடன் இணைத்த காஸட் டெக் ப்ளேயர் ஒலி பெருக்கி.வண்ண ஜாக்கெட்டுகளில் உறைந்திருக்கும் மணிக்

கணக்கான சங்கீதம். பீத்தோவன், பாஹ், ஹரிபிரசாத் சௌரஸ்யா எல்லாமே இப்போது தேவையில்லைதான்.அருகே

டைப்ரைட்டர் இருந்தது, ம்ஹூம் வேண்டாம். கவிதை அடிப்பதற்கு இதுவா சமயம்? அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன

எதையாவது எடுத்துச் செல்லலாம். எதை? தொல்காப்பிய ஆராய்சசி, முக்கூடற்பள்ளு? பாண்டி நாட்டுத் திருப்பதிகள்?

புதுக்கவிதை-நாலு கட்டுரைகள்?தமிழர் நாட்டுப்புற இயல் ஆய்வு? பாலையும் வாழையும்? பைபிள் ? திருக்குறள்?
எதை? எல்லாமே இப்போது சப்தங்கள்,வெறும் சப்தங்கள்.
"குண்டுகள் எறிந்து
கூரைகள் எரித்து
பெண்டுபிள்ளை வயோதிகரைக்
கொன்று குவிப்பது
அன்றாடப் பொழுதுபோக்கு!"
"பாஸ்டர்ட்ஸ்!"என்று யாரையோ திட்டினான்.
"என்ன புஸ்தகம் எடுத்துக்கணும்"
"ஏதாவது எடுத்துக்கலாம் பிரயாணத்தில படிக்கறதுக்கு"
"என்ன, žக்கிரம் சொல்லுங்க"
ஆத்மா மறுபடி அந்த அலமாரியை வருடினான்."இது போதும்!"என்று 'ராணி' இதழைப் பெடடியின் மேல் போட்டான்.
"நகைப் பெட்டிகளை என்ன பண்றது?"
"எல்லாத்தையும் போட்டுண்டுவா.அங்க போனா வித்து மரவள்ளிக் கிழங்கு வாங்கலாம்" நித்யா அவனைக் கலவரத்துடன்

பார்த்தாள்.
"ஆளுக்கு மூணு செட்டு துணி வெச்சிருக்கேன்.குமாருக்கு ஸ்வெட்டர் எடுத்துக்கிட்டிருக்கேன்" "இது என்ன பெரிசா?"
"நம்ம கல்யாண போட்டோ ஆல்பம் இதை விட்டுப் போக மனசு வரலை"
ஆத்மா அதைப் பிரித்தான்.ஒல்லி ஆத்மா.பொம்மை போல் நித்யா. மனசுக்குள் புன்னகை விரிந்தது."உன்னை நான் முதல்ல

தொட்ட போது நடுங்கியது".
நித்யா கவனிக்காமல் "பூட்டு போறலை.மொத்தமே நாலு பூட்டுத்தான் இருக்கு" "பூட்டா? எதுக்கு?"
"வீட்டைப் பூட்டிட்டுப் போகவேண்டாம்?"
ஆத்மா கை தட்டிச் சிரிதது "பைத்தியமே பூட்ட வேண்டாம். திருடறதுககு ஒரு ஆள் கிடையாது இந்த வீட்டில இருக்ற

அத்தனையும் ஃபரிஜ்,ரேடியோ, டிவி, புஸ்தகங்கள், கித்தார் நாற்காலி, யானை பொம்மை எல்லாமே இங்கதான் இங்கயேதான்

இருக்கப் போறது. நு‘று வருஷம் ஆனாலும் இங்கேதான் இருக்கப்போறது.ஆல்ஃபா கதிர்களிலும் பீட்டா துகள்களிலும்

ஜொலிச்சுண்டு"
நித்யா சற்று நேரம் மௌனமாக இருந்தாள்."ஆத்மா நாம் எங்க போறம்?"
"யாருக்குத் தெரியும்? அரபிக் கடல்ங்கறாங்க,மினிக்காய்ங்கறாங்க லட்சத் தீவுங்கறாங்க. காத்துக்கு எதிர்ப்பக்கம்

எங்கயாவது கூட்டிட்டுப் போவாங்க"
"முதலில் பம்பாய் போகணுமா?"
"பம்பாயா?அசடே! பம்பாய் காணாமப் போய்டுத்து.ஃபணால்!ப்ஷ்ஷ் ராட்சச நாய்க்குடை. இப்ப அங்க ஒருத்தரும்

இல்லை.மெட்றாஸ் போச்சு.
டெல்லி போச்சு கல்கத்தா போச்சு நாம ஏதோ இந்த ஊர்ல மாற்றலாகி வந்து சேர்ந்தோம்! தப்பிச்சோம்! மழை துரத்தத் துரத்த

ஓடிக்கிட்டே இருக்கலாம்! அதிர்ஷ்டம்!"
"அது அதிர்ஷ்டமா?" என்றாள் நித்யா.
"சரியான கேள்வி. பதில் தெரியலை. குமார் எங்கே-".
"வெளியில விளையாடிட்டு இருக்கான். குமார்?"
குமார் உற்சாகத்துடன உள்ளே வந்து "அப்பா அப்பா ஏ..ழு எலிகாப்டர். வந்து பாரேன்"என்றான் ஆத்மா மகனுடன் பால்கனிக்கு

வந்தான். படப்படப்பட என்று சிறகு சுற்றி ஸ்டெபிலைசரின் க்றீ...ச்சுடன் அந்த இயந்திரப் பூச்சிகள் மைதானத்தில்

இறங்குவதைப் பார்த்தான்.
"நித்யா, வந்துட்டாங்க žக்கிரம் பாக் பண்ணு"
"அப்பா நாம எலிகாப்டரில் போகப்போறமா?"
"ஆமாடா கண்ணு"
"எங்க போறோம்?"
"து‘..ரத்துககு"
"ஸ்கூல் லீவா?"
"இனிமே லீவுதான்"
"எப்ப வருவோம்?"
"திரும்பி வரமாட்டோம்"
"ஏன்?"
"ஏன்னா பாக்கிஸ்தான் இல்லை பாக்கிஸ்தான்? அவாளும் சைனாவும் சேர்ந்துண்டு நம்மோடு சண்டை போட்டுட்டு டபால்னு

நிறயப்பேர் செத்துப் போய்ட்டா! நாம இன்னும் செத்துப் போகலை-"
நித்யா உள்ளே இருநது "ரொம்ப காரியமா குழந்தைக்கு இதெல்லாம் சொல்லியே ஆகணுமா?"
"ஹ’ மஸ்ட் நோ நித்யா"
குமார் யோசித்து" அதுக்கு ஏன் ஊருக்குப் போறோம்" என்றான்.
"அவாள்ளாம் வெடிச்ச பட்டாசினால புகை நிறைய ஆய்டுத்து. அதில விஷம் நிறைய இருக்கு அது நம்மகிடட வந்துண்டிருக்கு"
"நாம அவாளை ஷ•ட் பண்ணலியா?"
"ம்! நாமும் ஷ•ட் பண்þ‘ம்.ஒரே தமாஷ். தீபாவளி மாதிரி வெடிச்சோம்.கராச்சி, ராவல்பிண்டி லாஹூர்,பீக்கிங்"
"ஏன் நிறுதிதிட்டோம்?"
"பட்டாசெல்லாம் தீர்ந்து போச்சு நிறுத்திட்டோம்"
"ஊருக்குப் போனதும் எனக்கும் வாங்கித்தாப்பா"
"என்னது?"
"ஆட்டம் பாம்"
ஆத்மா சிரித்தான்."நீதாண்டா தலைவன்"
"குமார் குமார் உன் சமானெல்லாம் எடுத்துண்டியா?"
" ஆச்சு அம்மா" என்று சிறிதாகத் தன் பள்ளிப் பையைக் காட்டினான். அதனுள் ஸ்லேட்டுக்குச்சி, ரப்பர், பம்பரக்

கயிறு,தீப்பெட்டி லேபல்கள்,ஸ்டாம்புகள் கண்ணாடிக் கோலி.
"இவ்வளவு தானா?"
"இவ்வளபுதாம்பா,ஜில்லுவுக்கு இடம் வேணும் இல்லையா?"
"என்னது? ஜில்லுவா?"
தன் பெய்ர உச்சரிக்கப் படடதை உணரந்து கடடில் அடியில் படுத்திருந்த ஜில்லு திடீர் என்று காதுகளை உயர்த்திக்கொண்டு

வெளியே வந்து குமாரிடம் வந்த வாலை ஆட்டியது.
"ஜில்லு ஷேக்காண்ட்" ஒரு காலைத் து‘க்கியது.
"ஜில்லு நட நட"
இரண்டு கால்களில் நின்று நாலு தப்படி நடந்து காட்டியது.
சின்ன நாய். பொம்மைபோல் கன்னங்கரேல் என்று கண்களுடன் சடைசடையாக வாசனையாக ஒரு சந்தோஷப் பந்தாக.
குமார் அதை தொம்சம் பண்ணினான். காதைப் பிடித்து இழுத்துக் கட்டிக் கொண்டு புரண்டு காலை வாரிவிட்டு குழந்தை

செய்த அத்தனை ஹ’ம்சைகளை சட்டை செய்யாமல் அவனுடனேயே ஒட்டிக்கொண்டது. இரண்டு குழந்தைகள்.
"ஜில்லுஜில்லுஜில்லு.. அப்பா நாம ஜில்லுவையும் கூட்டிப்போறமில்லை"
"இல்லை கண்ணா விடடுட்டுப் போறம்"
"பொய் ! அம்மா கூட்டிடடுப் போலாம்னு சொன்னாளே"
"அம்மாதான் பொய் சொன்னா.இதபார் குமார், அந்த எலிகாப்டர்ல மனுஷாளுக்கே இடம் இல்லை ஜில்லுவை உள்ள

விடமாட்டா"
குமார் உடனே அழ ஆரம்பித்தான் நாயைக் கட்டிக் கொண்டான் "நான் வரலை."
"நீ வந்துதான் ஆகணும் இங்கே ஒருத்தரும் இருக்க மாட்டா"
"நானும் ஜில்லுவும் வீட்டில இருக்கோம் நீ போய்ட்டுவா"
நித்யா வந்து"என்ன சண்டை" என்றாள் குமார் ஏன் அழறே"
"அப்பா ஜில்லு வேணடாங்கறார்"
"யார் சொன்னா? ஜில்லுவை கூட்டிண்டுதான் போகப்போறோம் நீ உள்ளபோடா கண்ணா"
குமார் தீர்மானமின்றி கண்ணைத் துடைத்துக் கொண்டு நாயைக் கவலையுடன் அள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.

ஆத்மா மைதானத்தில் இப்போதே க்யு வரிசை அமைவதைப் பார்த்தான். ஏழ ஹெலிகாப்டர்களும் இளைப்பாறிக்

கொண்டிருந்தன.
"எதுக்காகப் பொய் சொல்ற? குழந்தை கிட்ட நாயை அனுதிக்கமாட்டான்னு தெரியும். இல்லையா"
"அதை அவன் கிட்ட எதுக்கு சொல்லணும்? கடைžல சமாதானப் படுத்தி அழைச்சுட்டு போகலாம்னு பார்த்தேன் நீங்க போட்டு

உடைச்சுட்டிங்க"
" இல்லை நித்யா இந்த ஏமாற்றத்துக் கெல்லாம் அவனைத் தயார்ப்படுத்தணும்.சும்மா கனவுகளை சப்ளை செய்துக்கிட்டே

இருக்கக் கூடாது.இன்றைய உலகம் என்னன்னு தெரிஞ்சுக்கணும்.நெஞ்சில் உறுதி வரணும்"
"ஆ..மாம் ஏழுவயசில இதெல்லாம் தேவையாக்கும்? இத பாருங்க,அவன் இன்னும் குழந்தை. நாயை வுட்டுட்டுப் போறம்னு

தெரிஞ்சா தாங்க மாட்டான்.அது மேல அவனுக்கு உசிரு ஜுரம் வந்துரும்.கடைசில சொல்லி எப்படியாவது சரிக்கட்டிடலாம்..

நாயைக் கூட்டிட்டுப் போறம்னே சொல்லுங்க"
இன்னும் இரண்டு மணி நேரம்.
அறைக்குள்ளிருந்து "ஜில்லு பயப்படாதே.. நான் அழைச்சுட்டுப் போறேன் உன்னை விடமாட்டேன். விடாட்டா அவாளை ஷ•ட்

பண்ணிடலாம்"
நித்யா திடீர் என்று "இப்படி செஞ்சா என்ன?"எனறாள்.
"என்ன?"
"பொட்டில இடம் இருக்கு பேசாம ஒரு துண்டில சுத்தி.."
"ம்ஹும் கத்திக் கத்தி செத்துப் போய்டும்."
"கைல ஒரு கூடை வெச்சக்கலாமில்லையா?"
"இதபார் நித்யா அனாவசியமா காம்ப்ளிக்கேட் பண்ணாதே.விட்டுட்டுப் போயிரலாம்.
சாப்பாட்டுக்குத் தவிக்கும். வெள்ளைக்காரனா இருந்தா சுடடுட்டுப் போய்டுவான்"
"எனக்குக் கூட இந்த சனியனை விட்டுட்டுப் போறதில இஷ்டமே இல்லை"
"என்ன செய்யறது? தேவடியா பசங்க அவசரப் பட்டு விபரீதம் பண்ணிட்டாங்களே?"
"ஆத்மா ப்ளீஸ்"
அவர்கள் கிளம்பும்போது மணி ஐந்து. அந்தக் கருமேகம் கொஞ்சம் பெரிசாகி இருந்தது.
ஆத்மாவும் நித்யாவும் குமாரும் வெளியே வந்து நின்றார்கள்.தனியான திறந்த வீட்டை, மல்லிகைப் பந்தலை, மாமரத்தை,

மகிழ மரத்தை, கதவருகில் நீலத்தில் ஆர் எஸ் ஆத்மா என்ற சிறிய பெயர்ப் பலகையை ஒரு முறை கடைசியாகப் பார்த்தான்.
"காஸை மூடினேனோ ஞாபகமில்லை!" என்றாள்.
"சட்! வா. காஸ் மூடினா என்ன திறந்தா என்ன"
ஒரு பெட்டி, ஒரு சிறிய கூடை
கூடை!
"ஏய் கூடைக்குள்ள என்ன?"
Jillu "நீங்க பேசாம வாங்க ஜில்லு தூங்கறது சமாளிச்சுரலாம்"
"இதபாரு, வம்பு வீண் வம்பு கூடையைத் திறந்து பார்ததா அசிங்கமாப் போய்டும்!வேண்டாம் வுட்டுரு" என்று கூடையைப்

பிடுஙகினான்.குமார் வீறிட ஆரம்பித்தான்.
"விடுஙகோ நான் சமாளிக்கிறேன்.அவா ஒண்ணும் செக் பண்றதில்லையாம்"
ராணுவத்தின் மூன்று டன் வண்டி ஒன்று வந்து நின்றது.
"கமான் க்விக் க்விக்" என்று ஒரு žருடைக் குரல் கேட்டது.
ஆத்மாவும் நித்யாவும் குமாரும பெட்டியும் கூடையுமாக ஏறிக்கொள்ள வண்டி புறப்பட ஆத்மா அந்த முகங்களைப்

பார்த்தான்.கவலை முகங்கள். எதிர்காலம் அறியாத முகங்கள். எங்கே போகிறோம் எங்கே நிற்போம் ,எந்த திசை, எந்த மண்

எதுவும் தெரியாமல்.. வண்டி ஆடி ஆடி மைதானத்தை நெருங்கியது. ஆத்மா கூடையை அடிக்கடி கவலையுடன் பார்த்துக்

கொண்டிருநதான்.
மைதானத்தில் இறங்கி மெல்ல நகரும் வரிசையில் ஒட்டிக் கொண்டார்கள்.ராணுவ உடையில் அதிகாரிகள் மேலும் கீழும்

நடந்து கொண்டிருந்தார்கள்.ஏழு ஹெலிகாட்ர்களிடமும் ஏழு வரிசைகள் இருந்தன. நகரத்தின அத்தனை பேரும்

வித்தியாசங்கள் இன்றி சற்றே தவிப்புடன் சற்றே அவசரத்துடன் அந்தப் புரியாத வாசலில் தடுமாறி ஏறிக்

கொண்டிருந்தார்கள் இளம் ராணுவ அதிகாரிகள் வயதானவர்களைத் து‘க்கி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நிற்பவர்கள்,

நடப்பவர்கள்,சக்கர நாற்காலிகள்,கைத்தடிகள்,ஏழைகள் குழந்தைகள் .. நகரம் முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில்

காலியாகிவிடும்.
ஆத்மாவும் நித்யாவும் குமாரும் மெல்ல மெல்ல அந்த இயந்திரப் பறவையை அணுக அணுக அவன் இதயம்

தவித்தது.எப்படியாவது உள்ளே சென்று ஏறிக்கொண்டு விட்டால்,கிளம்பி விட்டால் அப்புறம் அசட்டு சிரிப்பு சிரித்து

சமாளித்து விடலாம்.
அருகே அருகே
"ஒரு பெட்டிதானே" என்றார் அதிகாரி.
"ஒரு பொட்டி இந்தக் கூடை" அதன் மேல் துண்டு போட்டு மூடியிருந்தது.
ராணுவ அதிகாரி பெட்டியை குத்து மதிப்பாகத் து‘க்கிப்பார்த்து "போங்க உள்ளே žக்கிரம்"
"அப்பாடா"
நித்யா கூடையைத் து‘க்கிக் கொண்டாள்.அந்த சமயம் அதனுள் உறங்கிக் கொண்டிருந்த ஜில்லு கீச்சுக்குரலில் முனக

ஆரமபித்தது.
"žக்கிரம் ஏறு நித்யா"
இப்போது ஜில்லு ஸ்பஷ்டமாக ஊளையிட ஆரம்பித்தது.
"ஜஸ்ட் எ மினிட் மேடம்"
அதிகாரியின் உப அதிகாரி அவளிடமிருநது கூடையைப் பிடுஙகிக்கொண்டார்.சடுதியில் அதன் மேலிருந்த துணியை

விலக்கினார்.
"நாய்!" ஜில்லுவைப் பொறுக்கி மேஜைமேல் வைத்தார்.
"மைகாட் யார் நாய்யா இது"
ஆத்மா "ஆபிஸர் இட்ஸ் லைக் திஸ் என் பையன்.."
"ஏன்யா உங்களுக்குப் படிச்சு படிச்சு சொல்லலை? லவுட் ஸபீக்க்ரல சொல்லலை?வீடு வீடா வந்து சொல்லலை? மிக

அவசியமான பொருள்களை மட்டும் எடுத்துட்டு வரணும்னுட்டு.
நாய்! காட்! வாட் ஸ்டுபிடிட்டி ஐ ஸே"
"ஆபிசர் நான் சொல்றதைக் கேளுங்க்ஷக என் பையன்"
"லுக் மிஸ்டர உன்னோட வாதாடிக்கிட்டிருக்க நேரமில்லை.ஹெலிகாப்டர் புறப்பட்டாகணும்.
அத பாருங்க மேகம்..கதிரியக்க மழை வந்துகிட்டு இருக்கு. நாம எல்லோரும் சாவில இருந்து சிலமைல் து‘ரமே இருக்கோம

மனுஷஙகளுக்கே இடமில்லை. நாயைக் கூட்டி வரேங்கறியே! உனக்கு இப்ப சலுகை தந்தா அந்தளு பியானோ எடுத்துக்கிட்டு

வரேம்பான் இன்னொருத்தன் என் பசு மாட்டை ஏன் விடணும்பான் நாம எல்லாம் உயிர் வாழறதுக்கு ஓடிக்கிட்டு இருக்கோம்.

உங்களுக்கு எட்டு கிலோ சலுகை கொடுத்ததுக்கே ஸ’ ஓ என்னைக் காச்சறார். முடியாது நாயை அனுமதிக்க முடியாது"
"இது எங்க குழந்தை மாதிரி ஸார் " என்றாள் நித்யா.
"உள்ளபோங்க உள்ளபோங்க .நாய் கிடையாது. அடுததது அடுத்தது"
"படு பாவிப் பசங்களா" என்றான் ஆத்மா
"என்னது?"
"உங்களாலதானடா சண்டை வந்தது"
"பொறுப்பில்லாம அவசரப் பட்டு அவன் மேல அணுகுண்டைப் போட்டுட்டு அவன் திரும்பிப் போட்டு உங்க மாதிரி ராட்சசப்

பிரஜைகளோட அவசரப் போக்கினாலதானே,கொலை வெறியினாலதானே சண்டை வந்து நாங்க,ஒண்ணுமே தெரியாதவங்க

மாட்டிக்கிட்டு இறந்து போயி பிரிஞ்சு போயி இப்ப ஊர் ஊரா எல்லாத்தையும் துறந்து ஓட வேண்டியிருக்கு ப்ளடி மிலிட்டரி

ராஸ்கல்ஸ் !பாஸ்டர்ட்ஸ்"
ஆத்மாவின் கன்னத்தில் பளேர் என்று அறை விழுந்தது
"லுக் மிஸடர் ! நாங்க இல்லை காரணம். தலைவர்கள்தான்! ஹால் ஹ’ம் அப் ஐஸே"
ஆத்மா குண்டுக் கட்டாக து‘க்கப்ட்டு உள்ளே திணிக்கப் பட்டான் .நித்யாவும் ஏற்றப்பட்டு அவசர அவசரமாக மற்றவர்கள்

ஏற்றப்பட்டு இறதியில் ராணுவ அதிகாரிகள் ஏறிக் கொள்ள கதவு மூடப்பட்டு
மண்டைச் சிறகுகள் சுற்ற ஆரம்பித்து சுழற்சி அதிகமாகி ஹெலிகாப்டர்கள் ஒவ்வொன்றாக சாய்வுப் பாதையில் உயர்ந்தன.
"ஆத்மா வலிக்கிறதா?" என்றாள் நித்யா.ஏகப்பட்ட ஜனங்கள் அடைந்திருந்தார்கள். நித்யாவும் ஆத்மாவும் ஒரு ஓரத்தில் பதிய

நின்று கொணடு மேலே கிடைத்ததைப் பற்றிக் கொள்ள ஹெலிகாப்டர் மேலே மேலே செல்ல,வயிற்றுக்குள் பயப் பந்து

சுருட்டிக் கொள்ள "குமார் நாம் ஊருக்குப் போனதும் வேற நாய் வாங்கிக்கலாம் " என்றான் ஆத்மா.
"குமார்?"
"ஏய் குமார்! நித்யா குமார் எங்கே?"
"உங்க கூடத்தானே இருந்தான்"
"இல்லையே உன் கையைன்னா பிடிச்சிட்டிருந்தான்"
"குமார் ? குமார்! குமா ஆஆஆஆ ர்!"
நித்யாவின் அலறல் அந்த மெஷ’ன் படபடப்பில் கரைந்தது.
"அய்யா அய்யா என் மகன். என் மகனை விட்டுட்டோம். திறங்க. கதவை திறங்க" என்று ஆத்மா மோதினான். ஒரு வலுவான

கரம் அவனை அடித்து வீழ்த்திப் பிடித்தது.
ஹெலிகாப்டர்கள் வானத்தில் புள்ளிகளாக மறைய குமார் பெஞ்சின் அடியில் பதுங்கியிருந்தவன் ஜில்லுவைத் தடவிக்

கொடுத்துக்கொண்டே வெளியே வந்தான்.
"கவலைப்படாதே ஜில்லு.அப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டு வந்துருவா.நாம வீட்டுக்குப் போகலாம் வா"
சிறுவனும் நாயும் மெல்ல உற்சாகமாக நடந்து செல்ல யாருமில்லாத பிஸ்கட் கடையில் அடுக்கி வைத்திருந்த பிஸ்கட்களில்

நிறைய எடுத்துக்கொண்டு ஜில்லுவுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி நடக்கையில் வந்த மழையில்

சிறுவனும் நாயும் ஆனந்தமாக நனைந்தார்கள்.

(முற்றும்)

Author's Note on this story

Some of the predictions made in my science fiction stories have come true. It is sometimes gratifying and sometimes embarassing .This story written almost twenty

years ago has now come very close to reality. We wish and fervently pray this does not ever happen.

======================


குதிரை சிறுகதை - சுஜாதா

சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து "அடுத்த அமாவாசைக்கு

ஷ•ட்டிங்குக்கு வா" என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில்

பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!
"குதிரையா?" என்று வியப்புடன் கேட்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குச் சொல்கிறேன். முதலில் என்னைப் பற்றி. அப்புறம்

குதிரையைப் பற்றி.
என்பேர் கிஷ்ண சாமி அதை கிச்சாமி என்று சுருக்கி மனதில் ஒரு பிம்பம் ஏற்படுததிப் பாருங்கள். அதேதான் நான். தொழில்,

தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி

மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.
மனைவி, குழநதை ,மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை

முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.
குதிரை கடிக்கும் வரை!
Kuthirai குதிரையும் அவ்வளவு பிரசித்தமில்லாத ஜட்கா வண்டிக் குதிரைதான்.எங்கள் வீட்டிலிருந்து அஹமத் ஸ்டோர்ஸ்க்கு

போகும் வழியில் ஆஸ்பத்திரி இருக்கிறது.அதன் வாசலில் வழக்கம்போல் இளநீர் காலி பாட்டில்கள் எல்லாம் விற்கும்

இடத்துக்கு எதிரே ஒரு குதிரைலாயம் இருக்கிறது. பொதுவாக எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் எதிரில் இந்த லாயம் இருப்பதை

நீங்கள் கவனித் திருக்கலாம்.இந்த லாயங்களில் மற்றொன்றையும் கவனித்திருக்கலாம், திருச்சி தென்னு‘ர் போனலும்

பிட்ரகுண்டா போனலும். ஒரே அமைப்பு. உயரமான கருங்கல் கம்பங்கள் மேல் ஜாக்கிரதையாக ஓடு வேய்ந்திருக்கும். நடுவே

1938 ல் ஏதோ ஒரு உள்ளூர் நாயுடுவின் உபயத்தில் கட்டடப் பட்டது என்று அறிவித்து ஒரு தண்­ர்த் தொட்டி இருக்கும்.நகரச்

சந்தடியில் ஒரு சோம்பேறித் தீவாக கொஞ்சம் சேணம்,கொஞ்சம் லத்தி ஈரப்புல் கலந்து நாற்றமடிக்கும்.
வண்டிக் காரர்க்ள் சுகமாக எங்கேயோ கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒன்றிரண்டு குட்டிக் குதிரைகள்

தெனபடும்.அவை அழகாக இருக்கும். திடீர் என்று குதிரைக் குட்டி உற்சாகம் பெற்று வெறி பிடித்தாற்போல போக்கு வரத்தின்

ஊடே ஓடும். இந்த மாதிரித் தான் நான் சொல்லும் இடமும். அதைக் கடந்து செல்லும்போது லேசாக மழை பெய்ததால் சற்று

ஒதுங்கி குதிரைகளின் கிட்டே நடந்து போனேன்.சில குதிரைகள் என்னை சட்டை செய்யாமல் அவ்வப்போது உடம்பில்

எதிர்பாராத இடங்களைச் சிலிர்த்துக்கொண்டு தெய்வமே என்று வண்டிக்காரன் கொடுத்ததை மென்று கொண்டிருந்தன.

எல்லாமே கிழட்டுக் குதிரைகள். முதுகெலும்புகள் தெரிய தோள்பட்டையில் தழும்போடு கால்கள் ஜபேட் அடித்து குதிரையா

கழுதையா என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவுக்கு இருந்தன. அவற்றில் ஒன்று என் முழங்கையைக் கடித்துவிட்டது.
நான் நடந்து கெசாண்டே இருக்கும் போது முழங்கைப் பகுதியில் சுரீர் என்கிறதே என்று பார்த்தால் குதிரை கடித்து

முடித்துவிட்டு என்னைப் பார்த்தது. தொள தொள என்ற உதடுகளுடன் சிரித்தது. நான் 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்று முழங்கையைப்

பார்ததுக்கொணடு குதிரைக் காரனைத் தேடினால் காணவில்லை. ஒரே ஒரு பையன் எங்கோ பார்ததுக் கொண்டு நின்றான்.

மறுபடி கடித்துவிடப் போகிறதே என்று விலகி வந்து காலை வெளிச்சத்தில் காயத்தை ஆராய்ந்தேன். லேசாகப் பல்லுப்

பட்டிருந்தது.
அது ஒன்றும் நிகழவில்லைபோல் என் மேல் சுவாரசியம் விலகிப் போய் எதையோ மென்று கொண்டிருந்தது.என்னை யாரும்

பார்க்கவில்லை.'ச்சே' என்று பொதுப்படையாகத் திட்டிவிட்டு அடிக்கடி காயத்தைப் பார்த்துக் கொண்டே' டெட்டால்' போட்டு

அலம்பிக் களிம்பு தடவ வேண்டும் என்று எண்ணிய படி வீட்டுக்கு விரைந்தேன். என் மனைவி வாசலில் வேடிக்கை பார்த்துக்

கொண்டிருந்தாள்.கடைக்குப் போன கணவன் குதிரை கடித்து இத்தனை žக்கிரம் திரும்பி வருவான் என்று எதிர்

பார்க்கவில்லை.
"என்ன வந்துட்டிங்க? அகமத் ஸ்டோர் மூடியிருக்கா?"
"இல்லை வரவழியில.."
" என்ன ஆச்சு? என்ன கையில"
"உள்ள வாயேன் சொல்றேன்"
"என்ன ஆச்சு விழுந்திட்டிங்களா?"
"இல்லை ஆஸபத்திரிக்கு எதிர்ல கதிரை லாயம் இருக்கு பாரு அது வழியா நடக்கறபோது குதிரை கடிச்சுடுத்து"
"என்னது,குதிரையா?"
"ஆமாம்"
"கடிச்சுதா?" மாமனார் உள்ளே வர "அப்பா குதிரை எங்கயாவது கடிக்குமா?" என்று அவரிடம் கேள்வி.
"எதை"
"மனுஷாளைப்பா"
"சேச்சே"
"இதோ உங்க மாப்பிள்ளையைக் கடிச்சிருக்கு"
"அப்படியா, ஆச்சரியமா இருக்கே! என்ன மாப்பிளளை எதாவது அதைப்போய் žண்டனம் பண்ணேளா?"
Kuthirai2 "இல்லே ஸார் அந்தப் பக்கமா நடந்து போயிண்டிருந்தபோது லபக்குன்னு கவ்விடுத்து"
"குதிரை லாயத்துக் கெல்லாம் எங்க போறேன். கல்யாணி நீ எதாவது வண்டி கொண்டுவரச் சொன்னாயா?"
"இல்லைப்பா ஸ்டவ்வுத் திரி வாங்கிண்டு வர அகமத் ஸ்டோர்ஸ்க்கு அனுப்பிச்சேன். எதுக்கு நீங்க குதிரை கிட்டல்லாம்

போறேள்? அய்யோ நன்னாப்பல்லுப் பட்டிடிருக்கே. விஷப் பல்லா இருந்துடப் போறது. அப்பா அதைப் பாருங்க"
மாமனார் கிட்ட வந்து பார்த்து,"கன்னித்தான் போயிருக்கு. மாப்பிள்ளை நீங்க எதுக்கும் ராயர் கிட்டக் கொண்டு

காட்டிடுங்கோ. கல்யாணி, அழைச்சுண்டு போயிடு. ஜட்கா வண்டிக் குதிரையா"
"ஆமாம்"
சற்று யோசித்து"ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே" என்றார் ஜ.வ.குதிரைகளில் டாக்டர் பட்டம் வாங்கினவர் போல்.
"இந்தக் குதிரை கடிச்சுது ஸார் என்ன பண்ண?" என்றேன்.
"இவருக்கு மட்டு•ம எல்லாம் ஆகும்பா, கணக்கால் அளவுக்கு தண்­ர் போதும் இவருக்கு முழுகிப்போய்டுவார்.இப்படித்தான்

திருச்சினாப்பள்ளியில உய்யக் கொண்டான் வாய்க்கால்ல.."
"சரிதான் நீ ஆரம்பிக்காதே" என்று அதட்டினேன்.
"எதுக்கும் டாக்டர் ராவ் கிட்ட கொண்டு காட்டிடறது நல்லது" என்றாள். எனக்கும் காயத்தைப் பார்த்ததில் அபபடித்தான்

பட்டது.ஆனால் இதை டாக்டரிடம் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று கவலையாக இருந்தது.

நரஹரி ராவ் எங்கள் குடும்பத்து டாக்டர் . அறுபது வயசானாலும் நல்ல ப்ராக்டிஸ், நாங்கள் போனது காலை வேளையாக

இருந்தாலும் நல்ல கூட்டம்.குழந்தைகளும் தாய்மார்களும் க்ளார்க்ககுகளும் மப்ளர்காரர்களுமாக அடைத்துக் கொண்டு

காத்திருந்தார்கள்.சின்ன இடம் அதில் பாதி தடுத்து நரஹரிராவ் உள்ளே உட்கார்ந்துகொண்டு யாரையோ 'ஆ' சொல்லிக்

கொண்டிருப்பது பனிக் கண்ணாடியில் குழப்பமாகத் தெரிந்தது. எங்களுக்கு உட்கார இடம் இல்லை. அடுத்த முறை பையன்

வெளியே வந்தபோது கல்யாணி "இந்தாப்பா டாக்டர் கிட்ட சொல்லு அவசரமா பார்க்கணும்னு" என்றாள்.
"எல்லாருக்குந்தாம்மா அவசரம்"
"இல்லைப்பா இவரை குதிரை கடிச்சுடுத்துப்பா. ரத்தமா கொட்டறது பாரு "என்றாள்.
"கல்யாணி! என்ன சொன்னே? சரியாக் காதுல விழலை குதிரையா?"
"ஆமாம் மாமி. போயும் போயும் குதிரை கிட்ட கடி பட்டுண்டு வந்திருக்கார். என்னத்தைச் சொல்லி மாள?"
"குதிரை வளக்கறிங்களா?"
"அதுங்கிட்ட எதுக்குப் போனார்?
" எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.
"உள்ளே வாங்க கிச்சாமி" என்றார் டாக்டர். "என்ன குதிரை கிட்டல்லாம் போய் விளையாடிண்டு இந்த வயசில"
"டாக்டர் அது வந்து ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாப்பல நடந்து போயிண்டிருநதேனா.." என் கதையைத் தணிந்த குரலில்

சொன்னேன்." டாக்டர் அதுக்கு எதாவது விஷப் பல்லு இருக்குமா" என்றாள் கல்யாணி இடையே.
"தெரியலைம்மா. இருக்காதுதான். ஆனா கல்யாணி நானும் இதே மில்கார்னர்ல முப்பது வருஷமா ப்ராக்டிஸ்

பண்ணிண்டிருக்கேன்.குதிரை கடிச்ச கேஸை இப்பதான் முதல்ல பார்க்கறேன்" என்றார்.
"என்ன பண்றது டாக்டர்? ஆக்ஸ’டெண்ட்டுக்குன்னே பொறந்தவர் இவர்.ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கறேன்னு ஸ்கூட்டரை

ஸ்டாண்டில இருந்து எடுக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸ’டெண்ட் பண்ணிட்டார்.தொப்புன்னு போட்டுண்டு கீழே விழுந்தார்.

கால்ல பாருங்ஙகோ தழும்பு" டாக்டர காயத்தை கவனித்தார்.
"வலிக்கிறதா? இருங்க காட்டரைஸ் பண்ணிடறேன்" என்று குட்டியாக இருந்த ஸ்பிரிட் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு

அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தைப் பிரித்து அதன் பின் அட்டவணையில் குதிரை, குதிரைக் கடி என்று

தேடினார்.
"ம் ஹும் டெக்ஸ்ட் புக்லயே இல்லை. எதுக்கம் கவலை• படாதங்கோ žட்டு எழுதிக் கொடுக்கறேன். நேரா ஆஸபத்திரிக்குப்

போய் இன்ஜெக்ஷன் ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சுடுஙகோ இப்பவே"என்றார்.
"அந்த இன்ஜெக்ஷனை இஙகேயே போட்டுண்டடுடலாமே டாக்டர்"
"எங்க கிட்ட ஸ“ரலம் கிடையாது, ஆதுவும் இல்லாம டாக்டர் கோபி எல்லாம் தேர்ந்தவர். அவர் பார்த்து தேவைப்

பட்டுதுன்னாத்தான் ஊசி போட்டுக்கணும். இப்ப காட்டரைஸ் பண்ணி அனுப்பி•ச்சுர்றேன்" என்று சொல்லிவிட்டு கொஞ்ச

நேரம் சிரித்துவிட்டு "குதிரை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு"டாக்டர் கோபிக்கு லெட்டர் கொடுக்கறேன் உடனே போம்"

என்றார்.
ஆஸபத்திரியை நோக்கி நடக்கும்போது ஒரு மாடு கிழிசல் பனியனை மென்று கொண்டிருந்தது. "பாத்து வாங்கோ .இது வேற

கடிச்சு வெக்கப்போறது" என்றாள் கல்யாணி.
"என்ன கல்யாணி சொல்றே? வேணும்னுட்டா கடிச்சுப்பா?"
"வேணுமோ வேணாமோ நம்மாத்தில மட்டும்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. டாக்டர் சொன்னார் பாருங்கோ"
"எல்லாம் எனக்கும் கேட்டுது. அதபாரு குதிரை கடிக்காதுதான் என்னைக் கடிச்சுடுத்து என்ன பண்ணச் சொல்றே ? ஏன்

கடிச்சேன்னு வேணா விசாரிச்சுன்டு வரட்டுமா?"
"வேண்டாம். மறுபடியும் கடிச்சு வெக்கப் போறது. கடிக்கறதுன்னா அந்தப் பக்கம் ஏன் போகணும்?"
"குதிரை கடிக்கும்னு யாருக்குடி தெரியும் மூதேவி!"

நடுரோடில் எங்களை வேடிக்கை பார்கக கூட்ட•ம் கூடிவிடவே நாங்கள் கலைந்து நடந்தோம்.ஆஸபத்திரியில் டாக்டர்

கோபிநாத்தைத் தேடிக்கொண்டு சென்றேன்.நீண்ட பெஞ்சு போட்டு பலபேர் உட்கார்ந்திருந்தார்கள். கல்யாணி இங்கே வந்து

"குதிரை கடித்துவிட்டது" என்று இரைந்து கூறி சலுகை கேட்கப் போகிறாளே என்று பயமாக இருந்தது.ஆககால் கல்யாணி

பேசாமல்தான் உட்கார்ந்தாள்.அங்கே உட்கார்ந்திருந்தவர்களை விசாரித்ததில் பெரும்பாலோர் நாய்க்கடிக் காரர்கள் என்று

தெரிந்தது. அங்கங்கே ஒன்றிரண்டு எலி தேள் இருந்தன. எல்லாருடைய žட்டுகளிலும் நாய் நாய் என்றுதான்

எழுதியிருந்தது.அங்கே அருந்த சிப்பந்தி அவற்றை அடுக்கி வைக்கம் போது என் žட்டு வந்தபோது மட்டும மயங்கினான்.
"குதிரை! இங்க யாருப்பா கிருஷ்ணசாமி"
"கிருஷ்ணசாமி நான்தான் "என்றேன்.
"உங்க டிக்கெட்டில் தப்பா போட்டிருக்கு குதிரை ன்னு. கொஞ்சம் திருத்திக் கொடுக்கறிங்களா"
"இல்லை ஸார் என்னை குதிரைதான் கடிச்சிருக்கு"
இப்போது அத்தனை பேரும் திக்கித்துப் போய் என்னைப் பார்க்க, சிப்பந்தி உடனே உள்ளே போய் கோபிநாத்திடம் சொல்ல

"கூப்பிடு உள்ளே அவரை முதல்ல" என்றார்.
"வாங்க உக்காருங்க. ராயர் போன் பண்ணிச் சொன்னார். நீங்கதானா அது? குதிரை எங்கே கடிச்சுது உங்களை?"என்று

விசாரித்தார்.
"ஆஸ்பத்திரிக்கு எதித்தாப்பல ஸ்டாண்டு இல்லை? அங்கே"
"அதைக் கேக்கலை.உடம்பில எந்த பாகத்தில?"
நான் என் கைச்சட்டையை வழித்துக் காட்டினேன்."காட்டரைஸ் பண்ணாரா?"என்று
அலமாரியிலிருந்து தடியான புத்தகம் ஒன்றை எடுத்தார்.
"அந்தப் புஸ்தகத்தில் 'குதிரைக்கடி' கிடையாது டாக்டர்"என்றாள் கல்யாணி.
"எப்படிச் சொல்றிங்க?"
"டாக்டர் ராவ் பார்த்துட்டார்"
"மிஸடர் கிருஷ்ணசாமி ஒண்ணு பண்ணலாம் நான் குதிரை கடிச்ச கேஸை இதுவரை ட்ரீட் பண்ணதில்லை எதுக்கு ரிஸ்க்

எடுக்கணும். ஒரு ஷார்ட் கோர்ஸ் ஆரம்பபிச்சுர்றேன் ஸ்ப்க்யுட்டேனியஸ்ஸா.."
"டாக்டர் உயிருக்கு ஆபத்து எதும்ம இல்லையே?"
"சேச்சே பயப்படாதிங்கம்மா.மிஸ்டர் கிருஷ்ணசாமி எதுக்கும் ரெண்டு மூணுநாள் அந்தக் குதிரையை வாட்ச் பண்ணிக்கிட்டு

இருங்க.செத்து கித்து வெக்குதான்னு.
எந்தக் குதிரை கடிச்சுது ஞாபகம் இருக்குமோல்லியோ?"
"ம்" என்றேன் சந்தேகமாக
"மூணு நானைக்கு எதுக்குப் பார்க்கணும்" என்றாள் கல்யாணி.
"அதுக்கு வெறி கிறி எதாவது பிடிச்சிருந்தா செத்துப்போய்டும் . அது உயிரோட இருந்தா கவலைஇல்லை.எதுக்கும்

பயப்படடி‘திங்க ரிஸ்க் எடுத்துக்காம கோர்ஸை ஆரம்பிச்சுர்றþன். தினம் காலை இந்த வேளைக்கு வந்துடுங்க என்ன
?" "பகவானே என்ன þசொதனை பாத்திங்களா?" என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தாள் கல்யாணி.வந்ததும் அங்கே

உட்கார்ந்திருந்தவர்களிடம சட்டென்று பேச்சு நின்று போய் ஒரு சிலர் உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டு

பக்கத்தில் இருப்பவரிடம் என்னைக் காட்டிப் பேசுவதை கவனித்தேன்.
முதுகில் கூட அவர்களது பார்வை பட்டது. திடீரென்று திரும்பி'குதிரை கடிச்சா என்னய்யா?" என்று சத்தமாகக் கேட்க

நினைத்தேன்.
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போதே குதிரையை ஒரு நடை விசாரித்து விட வேண்டும் என்று கல்யாணி

சொன்னாள். எனக்கு அது தேவையாகப் படவில்லை. இருந்தும் அங்கே போனோம்.
"குதிரையை ஞாபகம் இருக்கோல்லியோ?" என்றாள்.
"இருக்கும்னு நெனைக்கிறேன்.நெத்தில டைமண்ட் ஷேப்பில வெள்ளையா ஒரு திட்டு இருந்ததா ஞாபகம்."

லாயத்துக்குப் போனபோது ஏறக்குறையக் காலியாக இருந்தது. சிறுவன் மட்டும் காலை ஆட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக்

கொண்டிருந்தான்.
"ஏம்பா எல்லாக் குதிரையும எங்கே?"
"எல்லாம் சவாரி போயிருக்குதுங்க. கொச்ம் இருங்க வந்துடும். பாடி கொடுத்துட்டாங்களா"
"பாடியா?"
"இவன் என்ன சொல்றான்" என்றாள் கல்யாணி.
"ஏம்பா இந்த அடத்தில எத்தனை குதிரை இருக்கு?"
"ஏங்க எதாவது எலக்சனா? குதிரைச் சின்னத்தில் நின்னறிங்களா? ஊர்கோலம் போகணுமா? எத்தனை குதிரை வேணும்?"
"ஒரே ஒரு குதிரைதாம்பா. நெத்தில டைமண் மாதிரி இருக்கும்"
"கரீம்பாய் குதிரையை சொல்றிங்க. இதோ இப்ப சவந்துடுங்க. கபர்ஸ்தான் போயிருக்குது"
"அது உயிரோட இருக்கில்லே?"
"இல்லாம,பின்ன?"
"நல்லது" என்று புறப்பட்டு வந்துவிட்டோம்.
"தினம் ஆஸ்பத்திரிக்கு வர வழியில ஒரு விசை குதிரையை விசாரிச்சுண்டு வந்துருங்கோ" என்றாள் கல்யாணி.
மறுதினம் ஆஸபத்திரிக்குப் போகிற வழியில் என்னைக் கடித்த குதிரையை மறுபடி சந்தித்தேன் அந்தப் பையன்தான் "

கரீம்பாய் கல் பூச்சானா? ஓ ஆத்மி ஆயா " என்றான்.
கரீம்பாய்க்கு காலையிலேயே கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்தது, "என்ன சாமி நம்ம சுல்தானைப் பத்தி

விசாரிச்சிங்களாமே?"என்றான்.நான் கிட்டப்போய்ப் பார்த்ததில் என்னைக் கடித்த குதிரை அதுதான் என்று

தெரிந்துபோய்விட்டது. "பாய்! இந்தக் குதிரை நல்லாத்தானே இருக்குது? உயிரோடதானே இருக்குது?"
சேணம் எல்லாம் கழற்றிப் போட்டு எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு முன்பிருக்கும் நங்கை போல் இருந்தது.
"ஏன் சாமி"
"நேத்திக்கு இது என்னை கடிச்சிடுச்சுப்பா. குதிரை உயிரோடதான் இருக்கான்னு தினம் பார்க்கச் சொல்லியிருக்கார் டாக்டர்"
"கடிச்சுதா? அதெல்லாம் செய்ய மாட்டானே நம்ம சுல்தான், க்யூன் சுல்தான் ஸாப்கோ காட்டா?" குதிரை "பிஹ’ர்ர்ர்" என்றது.

"என்னா குதிரைங்க இது?" என்று அதன் கழுத்தருகில் சொரிந்து கொண்டே சொன்னான். "ரேக்ளா ரேஸ்ல எல்லர்ம ப்ரைஸ்

வாங்கிருக்கு. க்யுன் சுல்தான்?"
"பிஹ’ர்ர்ர்"
"ஏதோ சௌக்கியமா இருந்தா சரி. அதோ பார் முழங்கையைக் கடிச்சுடுச்சு. தினப்படி ஊசி போட்டுக்க வேண்டியிருக்கு.

குதிரையைக் கட்டுப் படுத்தி வெச்சுக்கக் கூடாதாப்பா?"
"ஊசி போட்டுக்கறியலா?" என்று சுல்தான் போலவே சிரித்தான்.
Kuthirai3 "எதுக்கு? குதிரை கடிச்சதுக்கா? இத பாரு."என்று தன் கையைக் காண்பித்தான்.
"எத்தனை தடவை புல் குடடுக்கறப்ப கொள் கொடுக்கறப்ப சுல்தான் என்னைக் கடிச்சிருக்கான் தெரியுமா? ஊசியா

போட்டுக் கிட்டேன்? க்யூன் சுல்தான்?"
எதற்கும் நான் ரிஸ்க் எடுத்துக் கொள்ளவில்லை.ஆஸ்பத்திரிக்குப் போகும் போதெல்லாம் சிப்பந்திகள் குதிரைக்காரர்

வந்துட்டாரு" என்று பேசிக்கொண்டாலும், எதிர் வார்டிலிருந்து நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து என்னைக் காட்டினாலும்,

வீட்டில் கல்யாணியின் பல உறவினர்கள் பேருக்குப் பேர்"குதிரை கடிச்சுடுத்தாமே " என்று விசாரித்தாலும் மதிக்காமல்

பிடிவாதமாக சிகிச்சைக்குச் சென்றேன்.சில நாட்களில் காயம் ஆறிவிட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பின் என் பெயர்

மாறிவிட்டது 'குதிரைக் கிச்சாமி' என்று.

ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள், ஆனால் நாட்டில் ஒரே ஒரு 'குதிரைக் கிச்சாமி' நான்தான் என்பதில் ஒரு அற்ப

சந்தோஷம்.
(முற்றும்)

Author's note on this story.

This is also one of my much anthologised stories. Published in `Kalaimagal` Deepavali issue 1983 first, its Hindi translation appeared in a Sahithya Academy collection

of Indian short stories. This experience was narrated by my cousin in Bangalore who was actually bitten by a horse. More than the bite the disbelief of the people

that a harnessed city horse can bite, was described humourously by him. That gave me the idea for the story. The descriptions are a mixture of the horsecart stands,

invariable features in front of many municipal hospitals I have seen in Trichy and other places.

A note on Madan the illustrator

My association with Madan the `Inai Aasiriyar` of Vikatan spans more than a decade. He is more than a cartoonist and illustrator. He is a versatile writer, a very well

read thinker and a delightful conversationalist with a glint of humour in his eyes. He makes the whole Tamil nadu laugh but it is difficult to make him laugh though I

have succeeded in extracting a chuckle or two from him occasionally. My collaborative effort with him in `Junior Vikatan` called `Een etarku Eppadi` was a delightful

experience , Madan providing ideal editorial support which created minor history in popularising science in Tamil and got me a national award.

=================


மூன்று கடிதங்கள்

கடிதம்-1

"அன்புள்ள திரு சுஜாதா அவர்களுக்கு,
வணக்கம்.இது ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம் என்பதால் ஒரு சிறு அறிமுகம்.என் பெயர் ஆர் மீனாட்சி

சுந்தரம்.CIWA இணடர் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸை கவனித்துக் கொண்டிருக்கும் 33 வயது

இளைஞன்! என் தந்தை தங்கள் கதைகளைப் பற்றி நிறையச் சொல்லுவர். அவர் பாதுகாத்து வைத்திருந்த'நில்லுங்கள்

ராஜாவே'என்கிற கதைதான் நான் படித்த முதல் சுஜாதா கதை.தொடர்ந்து படித்தும் வந்திருக்கிறேன்.

Kadithangal எப்போதும் தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை.'மீண்டும் மத்யமர்' என்ற பொதுத் தலைப்பின்

கீழ் தாங்கள் எழுதிய பதினோரு கதைகளைப் படிக்கும் வரை.சில கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. தாங்கள் 'மத்யமர்'

என்று குறிப்பிடுவது யாரை? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? தெரியவில்லை.மாத வருமானத்தால் சொல்லவில்லை

நீங்கள் என்பது தெரிகிறது.ஒருவித மனப்பாங்கைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.'மிடில் க்ளாஸ்

மெண்டாலிட்டி' என்று இங்கிலீஷ’ல் சொல்வதற்கு ஈடாக என எண்ணுகிறேன். அந்தத் தகுதியில் நான் ஒரு மிடில்க்ளாஸ்

கணவன்தான்.மனைவியிடம் கோபிக்கும், சண்டை போடும், சந்தோஷமாகப் பேசும் கணவன். டீவி பார்ப்பதில்

ஈடுபாடுள்ளவன். அறிவு ஜ“விப் பசாங்குகள் எதுவும் இல்லாதவன். வைரமுத்துவின் வரிகளுக்கு மயங்குகிறவன்.

பட்டுப்புடவை பாத்திரம், சௌபாக்கியா வெட்கிரைணடர் போட்டிகளில் கலந்து கொள்வேன்.நான் இறந்து போனால் எந்த

சரித்திரமும் எனக்கு இடம் கொடுக்காது. அப்படிப் பட்டவன்தானே உங்கள் மத்யமன்?

ஆனால் நான் சரித்திரத்தில் இடம் பெறுமாறு ஒரு காரியம் செய்துவிட்டேன்.அதை உங்களிடம் சொல்லி எனக்கு உரிய

இடத்தை எடுத்துக் கொள்ளவே ஏன், பிடுஙகிக் கொள்ளவே இந்தக் கடிதம்.இதைப் படித்த பின் நீங்கள் என் கதையை எழுதத்

தீர்மானிக்கலாம்.எனக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய,அதிர்ச்சி என்பதா ,ப்ரச்னை, மனஉளைச்சல் என்பதா?

சங்கடம் என்பதா? அதை நான் சமாளித்ததுதான் இந்தக் கடிதத்தின் விஷயம். தற்கொலையை நாடும் அளவுக்கு சென்ற

தீவிரமானது.

பொதுவாக இந்த வகைக் கடிதங்கள் உங்களுக்கு அவ்வப்போது வரும்.'அவைகளுக்கு நான் பதில் அளிப்பதே இல்லை. மற்ற

பேரிடம் கதை கேட்டு அப்படியே எழுதுவதை நான் விரும்பாதவன். எனக்கு நான் கேட்கும் பார்க்கும் அனுபவிக்கும்

சம்பவங்களின் வினோதக் கலவையைத்தான் எழுத விருப்பம்.வரிக்கு வரி மற்றொருவர் கதையைப் படியெடுக்க எனக்குப்

பிரியமில்லை!'என்று நீங்கள் ஒரு முறை எழுதியிருக்கிறீர்கள்.(நீங்கள் பெரிய பத்திரிகைகளில் எழதியது அத்தனையும்

படித்திருக்கிறேன்.'கணையாழி' போன்ற பத்திரிகைகளை நான் படிப்பதில்லை.) ஆனால் பதில் போடாவிட்டாலும ஒரு நாள்

என்னைப் பார்க்க வருவீர்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.பீடிகை போதும் என எண்ணுகிறேன். இனி 'ஹ’ந்து'

நாளேட்டின் இருபதாம் தேதி மூன்றாம் பக்கத்திலும், தினத்ந்தி. தினகரன்,தினமலர் தினமணி போன்றவைகளில் முதல்

பக்கத்திலும் வெளியான செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்களோ அல்லவோ. `woman gangraped` என்று ஹ’ந்து Today's engagements'

அருகில் வெளி வந்திருந்தது.அந்த சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மனதிலும உடலிலும் கலைக்கப் பட்டவள் என்

மனைவி.

நீங்கள் இந்த அதிர்ச்சிக்கு தயாராக இல்லை தெரியும். அதற்காகத்தான் பலத்த பீடிகை! 'ஒரு எழுத்தாளன் கிட்ட வாழ்க்கை

சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்னு நீங்க எதிர்பார்த்திங்கன்னா ஏமாற்றம்தான்'னு நீங்களே பேட்டில

சொல்லியிருக்கிறீர்கள். அதனால் உங்களிடம நான் விடை கேட்கவில்லை.விடை எனக்குப் புலப்பட்டு விட்டது.

விஷயம் ரொம்ப சிம்பிள் ஸார். என் மனைவியை ரெண்டு பேரோ மூணு பேரோ (சரியாகச் சொல்ல மாட்டேன் என்கிறாள்)

ரவுடிகள் பலாத்காரம் பண்ணிவிட்டார்கள். அவளுடைய ஆபிசில் ஓவர்டைம் பாழாப்போற ஓவர்டைம்

பண்ணிக்கொண்டிருக்கும் போது இந்த கோர சம்பவம் நடந்தது .அப்புறம் என்னுடைய 'மிடில்க்ளாஸ்' மனது இவளை ஏத்துக்க

மறுத்தது.டைவோர்ஸ் வரை போய்,அதே சமயம் பாவம் அவ என்ன செய்வான்னு பச்சாதாபமும் மிஞ்சியது.இதான் என்

தர்மசங்கடம்.

நான் ஒண்ணும் உத்தம புருஷன் இல்லை. ஒவ்வொருமுறையும் அவளைப் பார்ககறப்ப 'அவங்க தொட்ட கன்னம் தானே இது

அவங்க அணைச்ச உடம்பு தானே இது'ன்னு விபரீத எண்ணங்கள்ளாம் முதல்ல தோணும்.சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்ததேன்.

விஜயராகவன்னு மாம்பலத்தில இருக்காரே அவரைப் பார்ததேன். அவர் அதை ஒரு விபத்து போல எடுத்துக்கங்க. கார்ல அடி

படறதில்லையா, ஒரு கார் விபத்தில் அடி பட்டா என்ன செய்விங்க இந்த மாதிரி எடுத்துக்கங்கன்னாரு. முடியலை.

எப்படி ஸார்? திருமணம் என்பது பவித்ரமான உறவு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற அஸதிவாரத்தில அமைஞ்சது.

சிறுவயசிலிருந்தே தேச்சு தேச்சு மனசுக்குள்ள உருவேத்தப்பட்ட எண்ணத்தை ஒரு நாளில் உதறி எறிஞசுட முடியமா? என்

ஒய்ஃப் இதை எப்படி எடுத்துக்கிட்டான்னு கேப்பிங்க. மௌனமா இருந்தா. அதைப் பத்தி பேச்சு எடுத்த போதெல்லாம்

பக்கத்து ரூமுக்குப்போய் கதவை சாத்திக்கிடுவா.இல்லை சாயஙகால வேளைகளில அழுவா.அவ கூட முழுமையா அதை

விவாதிச்சு தீர்வு காண முடியாத ஒரு நிலையில இருந்தேன். நடந்ததை கொஞ்சம் விவரமாவே சொல்றேன்.
உங்களுக்கு ஒண்ணும் இதில சொந்த ஆர்வமோ எட்டிப் பார்க்சிகற கிறுக்குத்தனமோ இருக்காதுனனு எண்ணிக்கிட்டுத்தான்

இந்த அந்தரங்க விவரங்களை உங்களுக்கு(உங்க வாசகர்களுக்கும்) சொல்றேன் .

அவ ஒரு தனியார் மல்ரட்டி நேஷனல் கம்பெனில வேலை பார்க்கிறா.நீங்க இதை எழுதினா பேரை மாத்தித்தான்

எழுதுணும்.அதனால கம்பெனி பேர் குறிப்பிட மாட்டேன். பெரிய கம்பெனி.பம்பாய் பார்சிக்காரங்க ஓனர்ஸ்.அவங்க

தயாரிக்காத அல்லது விற்காத பொருள்கள் இல்லை.இலமாரில இருந்து சோப்பு, ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ், ஸ்கூட்டர்,

கம்ப்யுட்டர் சமாசாரம் அத்தைனையும் விக்கறாங்க.நிறைய டர்ன ஓவர். நல்ல சம்பளம். போனஸ்.

இவங்களுக்கு ஒரு முறை நான் ஆடிட் போறப்போ பேச்சு வாக்கில ஒரு ரிசப்ஷனிஸ்ட் கம் டெலக்ஸ் ஆப்பரேட்டர் வேக்கன்சி

இருக்கறதா தெரிஞசு என் மனைவி சும்மாதானே வீட்டில இருக்கிறா..குழநதை இல்லை.. அது வரை போய்ட்டுவான்னு

சொன்னேன் இண்டர்வியூவில் கிடைச்சுருச்சசு. சம்பளமும் நல்ல சம்பளம்.எளிதான வேலை, ' 'ஒரு நாளைக்கு முப்பது தடவை

ஸ்மைல் பண்ணணும் அவ்வளவுதாம்'பா இனிமையா பேசணும் கூரியர் தபால் வரதையெல்லாம் கையெழுத்து போட்டு

வாங்கிக்கணும்.மூணு நாலு டெலக்ஸ் அனுப்பணும் அப்பப்ப ஜெராக்ஸ ஆப்பரேட்டர் வர€லான்னா மானேஜருக்கு காப்பி

எடுத்துக் கொடுக்கணும். அதுலதான் வந்தது வினை.

வெள்ளிக் கிழமை மாலை வேளையில மானேஜர் ஒரு முக்கியமான ரிப்போர்டடை ஜெராக்ஸ எடுத்துக் கொடுத்துட்டடுப்

போன்னு சொல்லிருக்கார். அன்னிக்குப் பார்த்து பவர்கட்டு ஐந்து மணிக்குள்ள முடிக்க முடியலை.கரணட் வரவரைக்கும்

வெயட் பண்ணிட்டு இருந்துட்டு வேலையை முடிச்சுட்டு புறப்படறப்ப ஏழுமணி.

என் மனைவி கொஞ்சம் தளதளன்னு இருப்பா. அடக்கமா டிரஸ் பண்ணிக்கன்னு நிறைய தடவை சொல்லிருக்கேன்.ரிஸப்ஷன்

ட்யூட்டியில கொஞ்சம் பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்க வேண்டியிருக்கிறதுன்னு திருத்தாம விட்டுட்டேன். அவங்க ஆபிஸ்ல

கேஷ”வல் லேபர் ங்க உண்டு, ஸ்திரமான வேலையில்லாத சின்னப் பசங்க தினக்கூலில.ஆபீஸ் முடிஞ்சப்புறம் க்ளீன் பண்ண

வருவாங்க.அவங்க ரெண்டு பேர் வந்திருக்காங்க. இவ பேப்பர்ங்களை அடுக்கிகிட்டே இருக்கறப்ப அவளை மறிச்சு, நேரா

ரிக்கார்டு ரும்ல தள்ளி கதவைச் சார்த்தி, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அவளை பலாத்காரம் பண்ணிருக்காங்க.மூணாவது

ஒருத்தன் இருந்திருக்கானான்னு அதிர்ச்சியில இவளுக்கு சரியா தெரியலை.வாயைப் பொத்தி மர்ரல முழங்காலை வைத்து

அழுத்தி உடைகளை உயர்த்தி...இதுக்கப்புறம் சொல்ல விரும்பலை. அப்படியே அவளை விட்டுட்டுப் போய்டடாங்க .கடிச்சு

கிழிச்சு எதிர்த்திருக்கா.சாரியெல்லாம் ரத்தம்.

இது நடந்தது ஏழரை மணி இவ போட்ட கூக்குரல் ட்ராபிக் சப்தத்தில் யாருககும் கேட்கலை.கேட்டிருந்தாலும்

மதிக்கலை.பக்கத்திலேயே ஒரு கூரியர் கம்பெனி அங்க மூணுபேர் தபால் பிரிச்சு பைகளைக் கட்டிக்கிட்டு

இருந்திருக்காங்க.அவங்க என்னமோ டீவிலதான் சப்தம் வருதுன்னு கவனிக்கலை.

எட்டு மணி வரை நான் ஆபிஸ்ல இரு•நதேன். அவளை என் மோட்டார் சைக்கிள்ள பிக் அப் பண்ணிக்கும்படி போன்

பண்ணிருந்தா.நான் போறேன் மேசையெல்லாம் சிதறியிருக்கு காப்பியிங் மெழிஷ’னுடைய 'டோனர்' கொட்டி முகமெல்லாம்

கறுப்பு.ரிக்கார்டு ரூம்லருந்து முனல் கேக்கறது.போய்ப் பார்தத..(சில விவரங்கள் விடப் பட்டிருக்ககின்றன -சுஜாதா)
முதல்ல லேடி டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன்.அவங்க எதும் விபரீதமா நடக்கலைன்னுதான் சொன்னாங்க.கேட்ட கேள்வி

எதுக்கும் அவளால பதில் சொல்ல முடியலை அந்த டாக்டர் ரொம்ப கோவிச்சுக்கிட்டாங்க.பாதுகாப்பு இல்லாம அவளை

ஓவர்டைம் பண்ணச் சொன்ன மானேஜருக்கு போன் போட்டுக் கூப்பிட்டடாங்க. எனக்கும் என்ன செய்யறது இந்த மாதிரி

சம்பவத்தை எப்படி அணுகறதுன்னு யோசனையே இல்லை.பிரமிப்பிலதான் இருந்தேன். மனசில இனிமே என்ன? இனிமே

என்ன? ங்கற கேள்விதான் பெரிசா விசுவருபம் எடுத்தது.

"அவங்க வந்து.. அவஙக வந்து.. என்னை .. என்னை.." இவ்வளவுதான் சொல்றா நந்தகுமார்னு மானேஜர் வந்து ரொம்ப வருத்தப்

பட்டார்.உடனே போலிஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தார்.இதுக்கு பப்ளிசிட்டி இல்லாம பாத்துக்ககறேன்னு சொன்னார். ஆனா

நடந்தது வேற .உலகத்தில் உள்ள அத்தனை பத்திரிகைக்காரங்களும் வந்துட்டாங்க.எங்கயோ அவங்களுக்கு மூக்கில

வேர்க்கறது.இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம அவங்களுக்கு அல்வா மாதிரி.அவளைப் படம்ட எடுக்காம

காப்பாத்தறதுக்குள்ளற எனக்கு அப்படியே நரம்பெல்லாம் தளர்ந்து போச்சு.ஒருத்தன் காமிராவைப் பிடுங்கி பிலிமைப் பிச்சுப்

போட்டேன். இவங்களுக்கெல்லாம் சம்பவத்தின் பரபரப்புத்தான் முக்கியமே தவிர அதில இருநத பரிதாபமோ அதனால

எங்களுடைய வாழ்க்கை எத்தனை சிதறிப் போவுது உடைஞ்சு போன வாழ்க்கையை நாங்க எப்படி பொறுக்கி ஒட்டவைக்கப்

போறோம் ங்கற எதைப் பத்தியும் கவலை இல்லாம பெரிசா எட்லைன் ந்யுஸ் போட்டுட்டாங்க.

என்னால முதல்ல செய்ய முடிஞ்சது. கோத்தகிரியில அவ அத்தை வீடு அங்க போய் விலவு எடுததுக்கிட்டு பரபரப்பு

அடங்கியதும் வந்தோம்.
அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச் சொன்னாங்க. நீங்க 'இருள் வரும்

நேரம்'ல எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலை.போலிஸ் ஸ்டேஷன் போய் அவங்களை

தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு

இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.
அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்ததோம் '
என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள்தான்.இந்த சம்பவத்தின் பின்னால் என் மனைவிக்கும்

எனக்கும் என்ன உறவு தொடர்வதுஙகறதுதான் பெரிய ப்ரச்னையாயிருந்தது.நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது?

விதியையா? சமூகத்தையா? எப்படியும் என் மனைவியைக் குற்றம் சொல்ல முடியலை.

இருந்தும் தனி ரூம்ல படுத்துக்க விரும்பினேன்.அவ மனசை அது என்ன பாடு படுத்தியிருக்கும்னு தெரியாமல் கேனத் தனமா

நடந்துண்டேன் .ஆண் என்கிற ஈகோ காயம் பட்டு விட்டது. எதுக்கெடுத்தாலும அவ மேல எரிஞ்சு விழுந்தேன்."பாத்தா வத்தக்

குச்சி மாதிரி இருந்திருக்கான்.மண்டைல ஒரு பேப்பர் வெய்ட்டையாவது எடுத்துப் போடறது.பேப்பர் கத்தியை எடுத்துக் குத்த

வேண்டியதுதானே? பே ன்னு பாத்துக்கிட்டு இருந்தியா.." இப்படி யெல்லாம் அவகிட்ட பேச ஆரம்பிச்சேன்.

லேடி டாக்டர் இசகுபிசகா எதும் நடக்கலை. சேதம் இல்லை முழங்கால்ல கொஞ்சம் சிராய்ப்பு அரை குறையா முயற்சி

பணிணிருக்காங்க ஆளரவம் கேட்டு ஓடிப் போயிருக்காங்கன்னு சொன்னாலும்...
உடல் காயத்தை விட மனக்காயம் தான் அதிகம். துவங்கினது என் உள் மனப் போராட்டம் அவளுக்கு ஆறுதல் சொல்றதுக்கு

பதிலா அவளை எப்ப அணுகறபோதும நான் அவளைப் பார்க்கிற பார்வையே வேற மாதிரி ஆய்டுத்து.
ஒரு மனசு அவளை டீஸ் பண்ணக் கூடாது ஆதரவா,ஆறுதலா ஏதாவது பேசுன்னு சொன்னாலும் மற்றொரு நெருப்பு மனசு

சந்தர்ப்பம் கிடைச்ச போதெல்லாம் அவளை žண்டிக் கொண்டே இருந்தது.
அவளுக்கே ஒரு நாள் தாங்காம"ஆமாம் நான் களங்கப் பட்டுட்டேன் என்னைப் பிடிக்கலைன்னா தள்ளி வெச்சுருங்க .நான்

கோத்தகிரிக்குப் போறேன்,எங்கயாவது" என்று சொல்லிப் புறப்பட்டுப் போய்ட்டா. தனிமையில இருக்கறப்ப மனோகர்னு

ஒருத்தரை சந்திச்சேன் நிறைய படிச்சவர்.அவர் கீதை படிக்கச் சொன்னார். உங்க 'எப்போதும பெண்'புத்தகத்தையும

படிச்சேன்.
அதில சொல்லிருக்ககிற ஒரு கருத்து என்னை பாதிச்சுது.'ஒரு பெண்ணுக்கு மணவறையில் கணவ்ன் கூட நிகழ்வது கூட ஒரு

பலாத்காரம்தான்.அவளை அறியாச் சிறுமியிலிருந்து ஒரு மனைவியாக மாற்றும் செயலில் அடிப்படையாக அவள்

கன்னிமையை உடைக்கும் ஒரு பலாத்காரம் நிகழத்தான் செய்கிறது.அது மெல்ல மெல்ல நிகழ்வதில்லை. கொடூரமாக ஒரு

திரை கிழிக்கப் படும்போது அவள் ஒரு புதிய உலகிற்குள் திணிக்கப் படுகிறாள்.'என்று எழுதியிருந்திங்க.பெண் பெண்மை

என்பதன் மேல் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. கீதையில் பலவிஷயங்கள் எனக்குப் புரியவில்லை. இருந்தும் நிஷ்காம்யகர்மா

என்கிற தத்துவம் மட்டும எனக்கு ஒரு விதமான நிம்மதி தந்தது.
மிகுந்த சிந்தனைக்குப் பின் ,திருவிழாக் கூடடத்தில் இடிபடும்போது என் மனைவி பிறர் மேல் பட்டதில்லையா?

தொடடதில்லையா டாக்டர தொடறதில்லையா தம்பி, அவ கஸ’ன்ஸ் எல்லாம் தொட்டதில்லையா?மூன்று பேர் அவளைத்

தாக்கினதால அவள் உள் மனத்தின் புனிதம் எந்த விதத்தில் பாதிக்கப் படுகிறது? அவள் அழகு குறைந்து விட்டதா? கண்களில்

ஓளி மஙகி விட்டதா? சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை

இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான்.அதனால் அவளுடன் நான் கழித்த அத்தனை

இன்பமான வேளைகளை மொத்தமாக ஒதுககிவிட்டு என்னை நானே வருத்திக் கெகாள்வது விவேகமல்ல.அறியாமை என்று

அவளை கோத்தகிரி போய் திரும்ப அழைத்து, ஒரு நீண்ட மௌனமான நடைக்கு அப்புறம் "போனால் போகிறது இனிமே நான்

அதைப் பத்தி பேசவே மாட்டேன் என் தாய் மேல் ஆணை" என்று பெரிதாகச் சொன்னேன்.
"என்னை மன்னிச்சுடுங்க" என்றாள்.
"பைத்தியமே மன்னிக்க வேண்டியது நீ என்னை.நான்தான் கிறுக்குத்தனமா நடந்துக்கிட்டேன்" என்றேன்.
என் மனைவிக்கு நிகழ்ந்தது களங்கமல்ல ஒரு விபத்து என்ற ஞானோதயம் வரும் வரை நான் ஒரு மத்யமனாக இருந்தேன்.

இப்போது? இதைத்தான் உங்களிடம் கேட்கத் தோன்றியது.

இப்படிக்கு அன்புடன்,
ஆர் மீனாட்சி சுந்தரம்.
* * * * *

கடிதம்-2

சென்னை 18
10-3-97

அன்புள்ள மீனாட்சி சுந்தரம்,

தங்கள் கடிதம் கிடைத்தது. நிச்சயமாகத் தாங்கள் செய்த காரியம் தங்கன் மனைவிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றித்

தங்களுக்கு ஏற்பட்ட விவேகம் தங்களை 'மத்யமர்' அல்ல உத்தமர் என்று காட்டுகிறது எல்லா சாதாரண மனிதர்களிடமும் சில

அசாதாரண குணங்கள் எதிர்பாராமல் வெளிப்படுவதை நான் அறிவேன். அவைகளைச் சிறைப் பிடித்து எழுதுவது ஓர்

எழுத்தாளனின் முக்கிய பணி என்று கருதுகிறேன்.உங்கள் கடிதம் அந்தப் பணியை எனக்கு மிக எளிதாக ஆக்கி விட்டது.

தங்கள் கடிதத்தை அப்படியே,ஓரிரு காட்டமான வரிகளை மட்டும் நீக்கிவிட்டுப் பிரசுரிக்க விரும்புகிறேன்.தங்களிடமிருந்து

ஆட்சேபம் இல்லாத பட்சத்தில். எல்லாக் கணவர்களுக்கும் ஓர் உதாரண புருஷராக அந்தக் கடிதம் உங்களைக் காட்டுகிறது.

அன்புடன்,
சுஜாதா
* * * * *

கடிதம்-3

திரு சுஜாதா என்கிற ரைட்டருக்கு

தங்களுக்கு கடுதாசி எழுதிய மீனாட்சி சுந்தரத்தின் மனைவி பவித்ரா எழுதிக் கொள்வது நீங்கள் என் புருஷனுக்கு எழுதிய

கடிதம் பார்த்தேன். அதில் அவரை ஓவராகப் புகழ்நதி ருந்திங்க. அவர் செய்த காரியம் ஓரு உத்தம புருஷனின் காரியம் என்று

எழுதியிருந்ததைப் படித்தேன்.
அந்தக் கடுதாசைப் பிரசுரம் பண்ணா மத்த புருஷர்களுக்கு அது வழி காட்டியாக இருககும்னும் எழுதியிருந்தீர்கள்

.மன்னிக்கவும்.எனக்கு தமிழ் அத்தனை தெளிவாக வராது.முதல் எட்டு கிளாஸ் நான் கன்னடத்தில் படிச்சேன். அப்புறம்தான்

தமிழ். அத்தனை அழகாக எழுத வராது. அவர் நல்லா எழுதுவார்.
என் புருஷன் உங்களுக்கு என்ன எழுதினாரோ தெரியல்லை. உங்க கடிதம் அகஸ்மாத்தா அவர் ஜோபில இருந்ததை படிக்க

நேர்ந்தது.
அவருடைய கடுதாசியை€ப் பிரசுரம் பண்ணும் பட்சத்தில் என் இந்தக் கடுதாசியையும் பிரசுரம் பண்ணவேண்டும் , அதுவே

என் தாழமையான விநத்தி.
எனக்கு நடந்தது விபத்து என்று என்ன என்னவோ எழுதியிருக்கிறீர்கள்.அவர் என்ன எழுதினாரோ தெரியாது.நடத்நது

இதுதான்.நான் வெள்ளிக்கிழமை ஆபிசில் ஓ.டி பண்ணும்போது இரண்டு பேர் என்னை ரேப் பண்ணப் பார்ததாங்க.நான்

அவர்களை ஆபிஸ் குப்பைத் தொட்டியை எடுத்துக் கவிழத்து அடித்து கூலர்ல போட்டேன். அவர்கள் என்

சொக்காயை(பிளவுசை) கிழிக்க முயற்சி பண்ணார்கள்.பக்கத்தில இருந்த கூரியர் கம்பெனி காரர்கள் சத்தம கேட்டு ஓடிவந்து

அவங்களில் ஒத்தனை பிடிச்சாங்க.மத்தவன் ஓடிப் போய்ட்டான்.நான் சுதாரிததுக் கொண்டு ஒரு தம்ளர் தணணி குடிச்சுட்டு

என் புருசனுக்கு போன் போட்டு வரவைழைத்தேன்.அவர் வந்ததும் பூமிககும் விட்டத்துக்கும் எகிறினார். கூப்டு

மேனேஜரை.லேடி டாக்டர் கிட்ட காட்டணும் .போலிஸ் கம்பளெயிண்ட் கொடுக்கணும் என்றெல்லாம் பெரிசாக சப்தம

போட்டார்.அந்த ராத்திரியிலேயே எல்லா பிரஸ்காரங்களையும் கூப்ட்டனுப்பிச்சார் .போட்டோ எல்லாம் எடுக்க

விட்டார்.ஒண்ணுமே விபரீதமா நடக்கலைன்னு சொன்னாலும் அவர் கேட்கவில்லை.'எங்கெல்லாம்

தொட்டான்.என்னவெல்லாம் செய்தான்?'என்று அசிங்கமாக எல்லார் முன்னாலும் கேள்வி கேட்டார் மானேஜர் நந்தகுமார்

வந்ததும் பெரிசாக சண்டை போட்டார்.
எனக்கு அப்போதுதான் சந்தேகம் வந்தது .ஒரு வேளை இது எல்லாமே அவர் சூழ்ச்சியா இருககுமோ என்று கூடத்

தோணிடிச்சு.அவ்வளவு வெறுப்பேத்தினார்.ஒரு முறை கோபத்தில் கேட்கக்கூடக் கேட்டுட்டேன்.என்னை டிவோர்ஸ்

பண்ணணும்னு குதித்தார். ஏதோ மறு கல்யாணத்துக்கு அடிபோடறார்னு நான் எதும் பேசாம கோத்தகிரிக்கு -எங்க அத்தை

வீட்டுக்குப் போய்ட்டேன்.
சின்ன விஷயத்தைப் போய் இப்படி பெரிசு படுத்திறாரே என்று எனக்குப் புரியவில்லை.
அப்புறம் திடீர் என்று ஒரு நாள் கோத்தகிரிக்கு வந்தார்.வந்து' என்னை மன்னிச்சுரு நான் செய்தது பூர்த்தி எல்லாம் தப்பு.

உனக்கு நேர்ந்தது ஒரு விபத்துதான் அதற்கான மனப் பக்குவம் எனக்கு இது வரை இல்லை.சுஜாதா புக்ஸ் படிச்சேன்

தெளிஞசுட்டேன்'னு என்ன என்னவோ சமாதானம் சொல்லி வீட்டுக்கு பிடிவாதமாக கூட்டி வந்து இனிமே அந்த பேச்சையே

எடுக்க மாட்டேன்னு கைல அடிச்சு அம்மா படத்தின் மேல சத்தியம் பண்ணிச் சொன்னார்.மெட்ராஸ் திரும்பினதும்தான்

அவருடைய மனசு மாறினதுக்கு காரணம் புரிஞ்சுது.
எங்க ஆபிஸ் மேனேஜர் நந்தகுமார் ரொம்ப நல்லவர். அவர் எனது மன வருத்தத்துக்கு நெகிழ்ந்து போய் மேலிடத்துக்கு

சிபாரிசு பண்ணி,பெரிசா லெட்டர் போட்டு ஏழு லட்ச ரூபாய் 'எக்ஸ்கிரேஷ’யா பேமெணட் ஃபர் மெணட்ல் அகனி'ன்னு

காம்பென்சேஷன் சாங்ஷன் வாங்கி எங்க எம்டி ஆதித்யா தஸ்து‘ர் கையெழுத்துப்போட்டு அருமையான ஒரு லெடடரும் என்

பேருக்கு செக்கும் வந்தது.
அதான் அவர் மனமாற்றத்துக்கு காரணம்
ஆகவே அவருடைய லெட்டரைப் போடுவதா இருந்தா இதையும் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

இப்படிக்கு
எம். பவித்ரா
(முற்றும்)

Author's note on this story

I wrote a series of twelve stories twice in `Kalki` under the common title மத்யமர் கதைகள் & மீண்டும் மத்யமர் கதைகள் This was the last of the

second series This is an illustration of the technique of the `letter narration` There are advantages and disadvantages in this method.Reader participation is very high

but we cant have too much of descriptive passages as these will make the letters sound phony. As a matter of fact the first letter is almost a verbatim reproduction of

an actual letter I received; the incident was woven into it and the other two letters are imaginary. Many readers felt that they were all real and commented `this man

has no time perhaps and hence has sent some of his correspondence as a story` There could be no better tribute :-))

====================


முதல் மனைவி
சிறுகதை சுஜாதா

கல்லு‘ரியிலிருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்து விட்டாள்.போதாக்

குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும அவள மேல் வாரி இறைத்துவிட வீட்டு வாசலை

அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு

சென்று விட்டாள்.பூட்டிய வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக் கொண்டிருந்தது.கோபம் இப்போது அவள்

பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக் கொண்டதால் ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகியிருந்தது.
'ராஜலட்சுமி கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் ப்ளாட்ப்ரஷர் விலகும். பால் வரா விட்டால் என்ன? மேனகா

கொஞ்சம் லேட் பண்ணால் என்ன? டெலிபோன்ஒலித்தால்என்ன? மேனகா சற்றே பயத்துடன் சைக்கிளிலிருந்து இறங்கினாள்.
அவள் பாண்ட்டும் பட்டனில் அலட்சியமாக இருந்த சட்டையும் ராஜலட்சுமியின் கோபத்தை இன்னும் அதிகரித்தன.
"எப்பம்மா வந்தே?"
"போன் அடிக்கிறது கதவைத் திற" என அதட்டினாள்.
மேனகா "ஈஸ’ மம்மி"
"சரிபோடி கதவைத் திற முதல்ல அப்புறம் பெரியவாளுக்கு உபதேசம் பண்ணு"
"லுக் அட் திஸ்! நான் என்ன உபதேசம் பண்ணேன்"
கதவைத் திறந்து போனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் அடிப்பது நின்று போனது.
"சே!" என்று சோபாவில் விழுந்தாள்.
"ரிலாக்ஸ் மம்மி. முதல்ல ஈரப் புடவையை மாத்தலாமா?"
அத்தனை கோபத்திலும் மேனு அழகாக இருப்பதை கவனிக்க முடிநத்து. சடையின் கருநாகம் போன்ற வளர்த்தி

பயமுறுத்தியது. கல்யாணம் பண்ண வேண்டுடம். நல்ல கணவனாகப் பார்தது என் கணவனைப் போல இல்லாமல்.
போன் மறுபடி ஒலிக்க மேனு எடுத்தாள்.
"..."
"ராங் நம்பர்" என்றாள்.
எதிர் போன் மறுபடி ஏதோ கேட்க மேனகா "ஆமாம்..நம்பர் கரெக்ட்தான் உங்களுக்கு யாரு வேணும்"
"..."
"மிஸஸ் ராமச்சந்திரன் னு யாரும் இல்லை இங்கே"
"இரு" என்று அவளிடமிருந்து ராஜலட்சுமி போனைப் பிடுங்கிக் கொள்ள,
"யாரும்மா மிஸஸ் ராமச்சந்திரன்?"
ராஜலட்சுமி போனை எடுக்கும்போது அவள் கரம் நடுங்கியது.
"ராமச்சந்திரன்ங்கறது உங்கப்பா பேரு"
"ஹலோ யாரு?"
"மிஸஸ் ஏவி ராமச்சந்திரன் வீடுங்களா அது? நம்பர் கொடுத்தாங்க"என்று கேட்டது. நடுத்தர வயதுப் பெண்குரல்.
"ஆமாம் நீங்க யாரு?"
"நான் எம் ஆர் ஆஸ்பிட்டலருந்து மேட்ரன்பேசறேன்"
"என்ன விஷயம்?"
"உங்க ஹஸ்பண்ட் இங்கே அட்மிட் ஆகி போன ஒருவாரமா நினைவு இல்லாம படுத்திருக்காரு.
அட்மிஷன் ரிஜிஸ்தர்ல் அட்ரஸ•ம் போன் நம்பரும் இருக்குது. சார்ஜஸ் யாரும் எதும் கட்டலே.
அதுக்குத்தான்"
"அவருக்கு என்ன?"
"த்ராம்பாஸ’ஸ். நினைவில்லாம கிடக்கிறார். கேட் ஸ்கான்எடுக்கறதுக்கு எழுதிருக்கார் டாக்டர் ஆனா யாரும் பணம்

கொடுக்காததனால.."
ராஜலட்சுமியையே மேனகா உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க
எம ஆர் ஆஸபத்திரி தெரியாதா? பூந்தமலலி ஹைரோடில ஈகா தியேட்டர் தாண்டினவுடனே திரும்பினிங்கன்னா.."
"ரூம் நம்பர் சொல்லுங்க"
"பதினாலுல படுத்திருககார் வரீங்களா? கேஷா கொண்டு வந்தா நல்லது"
"எத்தனை கொடுக்க வேண்டியிருக்கும்?"
"ஒரு ஆயிரத்து எழுநு‘த்து சொச்சம் பாக்கி"
"சரி வரேன்" என்றாள் ராஜலட்சமி
"யாரும்மா?"
"உங்கப்பாடி"
"என்னவாம்"
"ஆஸபத்திரில பேச்சு மூச்சில்லாம படுத்திருக்காராம்"
"அதனால"
"பணம் பாக்கியிருக்காம்.. டிஸ்சார்ஜ் வாங்கிட்டு"
"என்னம்மா பேத்தறே? அவன் யாரு? அவனைப் போய் நீ என்ன பார்க்கறது?"
"அவன்லாம் பேசாதேம்மா. என்ன இருந்தாலும் உன் அப்பா அவர்"
"நோ மம்மி நோ அந்தாளு உன்னை விட்டு எத்தனை வருஷம் ஆச்சு"
அப்போது மேனு மூன்று வயதுக் குழந்தை
"அவன் மூஞ்சிகூடத் தெரியாதும்மா. உன்னைத் தனியா விட்டுட்டு யாரவ? அவ பேரு என்னவோ சொன்னியே யாரு அவ?"
"புனிதவல்லி"
ராஜலட்சுமி ஈரப புடவையை மாற்றிக்கொண்டு தலையை அவசரமாக வாரிக்கொண்டு பர்ஸ’ல் இருக்கும் பணத்தை எண்ணி

செக் புத்தகத்தை எடுத்துக்கொண்டாள்.
"என்னம்மா நான் சொல்லச் சொல்ல காது கேக்கலையா?"
"என்ன?"
"அங்கே போகப் போறியா?"
"ஆமாம் நீயும் வரே"
"நோ வே. இந்த ஜன்மத்தில் நடக்காது"
"மேனு அப்புறம் விதண்டாவாதம் பண்ணலாம் இப்போ என்கூட வந்தே ஆகணும். நீ வேணும்னா பார்க்க வரவேண்டாம்"
"மம்மி உனக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா"
பவுடர் போட்டுக் கொண்டு நெற்றிப் பொட்டை விஸ்தாரம் பண்ணிக் கொண்டு "பாரு உன் அப்பா இல்லை. என் கணவன்

இல்லைன்னாலும் ஒரு ஸ்ட்ரேஞ்சர்னு வெச்சக்கலாமே"
"மம்மி யு ஆர் அன்பிலீவபிள். பாரத நாரி!என்ன இப்படி ஒரு மதர் இண்டியா வேஷம். பதினஞ்சு வருஷமா எட்டிப் பார்ககாத

பன்னாடைக்கு"
"அதுக்கு முன்னாடி பதினஞ்ச வருஷம் பழகிருக்கேனே"
"இது பைத்தியக்காரத்தனம். நான் பரத்துக்கு போன் பண்ணிச் சொல்லப் போறேன்"
"எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். வரப்போறியா நான் தனியா போகணுமா?"
ஆட்டோவில்போகும்போது மழைவிடாமல்அவள் கால் ஓரத்துப் புடவையை நனைத்தது.
சின்ன பள்ளங்களில்எல்லாம் துள்ளித் துள்ளி அந்த ஆட்டோ செல்ல மழை இரைச்சலின் இடையே மேனு புலம்பிக் கொணடே

வந்தாள்.
"இந்த மாதிரியும் ஒரு ஆள்! இந்த மாதிரியும் ஒரு மனைவி"
"பேசாம வா முதல்ல அவரைப் போய் பார்ககலாம் என்ன ஸ்திதின்னு"
"அந்தாளு போயாச்சு. காலி க்ளோஸ்!"
எதற்காக அவரைப் பார்க்கப் போகிறேன்? என்னைப் பாடு படுத்தியதற்கு பகவான் கொடுத்த தண்டனையை கண்கூடாக

ஊர்ஜிதமாகப் பார்ப்பதற்கா? இல்லை இன்னா செய்தாரை நாண வைப்பதற்கா? ஏன்தான் இப்படிப் படபடப்பாக பதினைந்து

வருஷம் காணாத கணவனை நோக்கிச் செல்கிறேன்?
"இந்த லெட்டர் யாரு எழுதிருக்கா?"
படிச்சப் பாத்தியே கடைசில என்ன எழுதிருக்கு? புனிதவல்லின்னு தானே"
"யாரு இந்த புனிதவல்லி?"
"யாராயிருநதா உனக்கென்ன"
"ஃப்ரெண்டா?"
"இப்போதைக்கு அப்படித்தான்"
"அப்புறம்?"
"கல்யாணம் பண்ணிக்க சான்ஸ் இருக்கு"
"இப்படி கூசாம நேரா ஆணி அடிச்சாப்பல தாலிகட்டின பெண்டாட்டிகிட்ட சொல்றியே பிராமணா.. இது நியாயமா? நான்

என்ன குறை வெச்சேன் உங்களுக்கு"
"ஒரு குறையும் இல்லை ராஜி"
"பின்னே எதுக்கு இவ?"
"அது வந்து ஒரு விதமான தேவையாய்டுத்து ராஜி. உனக்கு சொன்னா புரியாது உனக்கு எந்த விதமான குறையும்இல்லாம.."
"உங்கப்பாவுக்கு தந்தி கொடுத்து வரவைழையுங்கோ"
"வரவழைச்சா போச்சு.எனக்கு பயமில்லை"
"எனக்கு புகலிடம்இல்லை தைரியம் இல்லை படிப்புஇல்லை சாமர்த்தியம் இல்லை ஒரு வேலை பார்க்கத் தெம்பு

இல்லேங்கறதாலதானே இப்படி அழிச்சாட்டியமா"
"பி ரீஸனபிள் இதனால எந்த விதத்தில நீ பாதிக்கப் படறே? உன்னண்ட கறை இருக்கணும்னு கட்டாயம்இல்லை. பலபேர்

ரெண்டு பெண்டாட்டி கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா தெரியுமோல்லியோ பெருமாளே ஸ்ரீதேவி பூதேவின்னு

"
"எனக்கு சந்தோஷம் கிடையாது இதில"
"இப்ப யாரு கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னா? ஒருபேச்சுக்கத்தானே சொன்னேன்.
அசடு போ மூஞ்சி அலம்பிண்டு பிளளையார் கோயிலுக்கு போயிட்டு வா"
"தயவு பண்ணி எனக்கு துரோகம் பண்ணிடாதிங்கோ எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை அண்ணா வீட்டுல எனக்கு

வாழ்வு இல்லை. ஒண்டியா என்னால எதும் யாரையும் எதிர்கக முடியாது. ப்ளீஸ் என்னைக் கைவிட்டுடாதிங்கோ"
"சே அபபடி நடக்காது. எழுந்திரு. காலை விடு முதல்ல"
**

மேனாக ரிஸப்ஷனில் இருப்பதாகச் சொன்னாள். "எனக்கு யாரையும்பார்க்கவேண்டாம். சரியா அரைமணிதான்

காத்திருப்பேன்"என்றாள்.
"எங்கேயும்போயிடாதே செல்லம் ப்ளீஸ்! இன்னிக்கு மட்டும அம்மாவுக்கு ஒத்தாசையாஇரும்மா"
"அழாத போ"
பதினாலாம் எண் அறையை மெல்ல அடைந்தாள் ராஜலட்சுமி. வெண்மை சக்கரத் திரை லேசாக ஃபேன் காற்றில்

அசைந்துகொண்டிருக்க,ட்ரிப் கொடுத்து மார்வரை போர்ததி அந்த ஆசாமி படுத்திருந்தான். வாயில் குழாய்

சொருகியிருந்தது. அறையில் வேறு யாரும் இல்லை. ராஜலட்சுமி படுக்கையில் கால்மாட்டை அணுகினாள். கண்­ர் இயல்பாக

வடிந்தது. ராமச் சந்திரனின் முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான தாடி இருந்தது. ஊசிக்காக பொத்தல் பண்ண பல

இடங்களில் கரு ரத்தமாக இருந்தது. வாய் திறந்திருந்தது. மூச்சு மட்டும் கேட்டுக் கொண்டிருக்க கண்கள் மூடியிருந்தன.
'இந்த முகமா இந்த முகமா இதுவரை நான் பிரிந்த கணவன்?'
"நீ சிவப்பா நான் சிவப்பா சொல்லு"
"நீங்கதான் இதிலென்ன சந்தேகம்."
"சின்ன வயசில கடுக்கன் போட்டுண்டு காது தொள்ளைக்காதா போயிருக்கும்.வைர கனம் தாங்காம. எங்கப்பா பாபநாசம்

மைனர்னு பேரு.ஆயிரம் வேரில நிலம் ஒழிச்சே கட்டினார்"
"வந்துட்டிங்களா?" என்று குரல் கேட்கத் திரும்பினாள்.ஒரு நர்ஸ் விரைவாக உள்ளே வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்.
"இவர்தான்.. இவர்தான்"
"அவங்க சம்சாரமா நீங்க?"
"ஆமாம்மா"
"ராஜலட்சுமி உங்கபேரு?"
நர்ஸ் சார்ட்டைப் பார்தது கையை எடுத்து நாடி பிடித்து கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள்.
"இப்போ இவருக்கு எப்படி இருக்கு?"
"டாக்டர் சொல்வாரு. ஆமா ஒரு வாரமா இந்த மாதிரி போட்டுட்டு போயிட்டிஙகன்னா எப்டிங்க? யாருன்னு

தெரியும்?கேட்ஸ்கான் எடுக்கணும்னு ந்யுரே என் எஸ் அனத்தாறாரு"
"இவருக்கு எப்படி இருக்கு?"
"அதான் பாக்கறிங்களே பெட்ஸோர் வராம பாத்துக்கிட்டு இருக்கோம். அவ்வளவுதான்"
"பேசறாரா?"
"மாரைச் சொறிஞ்சா எப்பவாவது முழிச்சுப்பாரு. அந்தம்மா யாரு முதல்ல வந்தாங்களே"
பதில் சொல்லவில்லை.
"பேசாம டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருங்க . இங்க ஒரு நாளைக்கு இருநு‘த்தம்பது ஆகுதில்லை"
"ராமு சார்" என்று வலுக் கட்டாயமாக ராமச்சந்திரனை ஆட்டினாள் நர்ஸ்.திடுக்கிட்டு விழித்துக் கொண்டு பார்த்தான்.
"நான் வந்திருக்கேன்" என்றாள். "தலையணை மாத்திரலாமா?" கண்கள் கலங்கியிருந்தன.எலும்பாக இருந்த கையைப்

பிடித்தாள்.
"ராஜி வந்திருக்கேன்" என்றாள்
கண்கள் அவளை அடையாளம் தேடின. கண்டு கொண்டனவா கண்டு கொண்டபின் துக்கப் பட்டனவா.. எதும் தெரியாமல்

மறுபடி கண்மூடிக் கொண்டான்.
"பேசுவாரா?"
"இல்லிங்க பேச்சு மூவ்மெண்ட் எதும் இல்லை. லம்பார் பங்ச்சர் எடுத்தப்ப கட்டி கட்டியா ரத்தம்.
"ஆகாரம்?"
"எல்லாம் ட்யுப் வழியாத்தான். எஸ் என் வந்தா கேட்டுருங்க டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வீட்டுக்கு எடுத்துட்டு ஒரு நைட் நர்ஸைப்

போட்டு வெச்சுக்கறதுதான் நல்லது"
"அவங்க யாரும் வல்லையா?"
"யாரு? வந்து அட்மிட் பண்ணதோட சரி. þஒருசிவ்த்த ஆளு அந்தம்மா கூட வந்திருந்தாரு என்னவோ அவங்களுக்குள்ளயே

பேசிக்கிட்டாங்க'அவளை வரச்சொல்லி ஒப்படைச்சுரு'ன்னு திருப்பித் திருப்பி வாதாடிக்கிட்டிருந்தாங்க. அவங்க கிட்ட

கொஞ்சம் கடுமையாக் கூட இருக்க வேண்டியிருந்தது. பேரு என்னவோ சொன்னாங்களே ராமு ராமுன்னு கூப்பிட்டுக்கிட்டே

இருந்தாங்களே?"
"புனிதவல்லி"
"ரெண்டு சம்சாரமா? ராமு சார், பெரிய ஆளு நீங்க" என்று ராமச்சந்திரனின் கன்னத்தை லேசாக நர்ஸ் தட்ட அதற்கேற்ப தலை

ஆடியது.
"நீங்க மூத்தவங்களா?"
"ஆமாம்"
"எத்தனை நாளா இப்படி?"
ராஜலட்சுமி சட்டென்று முகத்தை மூடி விசும்பி விசும்பி அழுதாள்."
என் எஸ் வர்ற நேரம் அழுவாதிங்க கோவிப்பாரு"
கண்களைத் துடைத்துக்கொண்டு "கீழே என் பெண் மேனகான்னு.. வரச்சொல்றிங்களா?"
"வார்டு பாய் கிட்ட தகவல் சொல்லி அனுப்பறேன்.டிஸ்சார்ஜ் வாங்கிடடு போயிருங்க செலவு குறையும். எனக்கென்னவோ

அதிக நம்பிக்கையா தெரியலிங்க. நெறைய ரெஸ்ட் எடுத்தா செலப்ப சரியாகும். பிரெட் ஏதாவது வேணுமா சொல்லுங்க"
"இதுதானா எங்கப்பா?"
திடுக்கிட்டுத் திரும்ப மேனகா நின்று கொண்டிருந்தாள்.
"இதானா அந்தாளு?"
"சத்தம் போடாதிங்கம்மா. மற்ற ரூம்கள்ள பெஷண்டுங்க இருக்காஙக இல்லை? பாப்பா நீ இவரு மகளா?"
"அப்டின்னு சொல்லித்தான் தெரியும். மம்மி பாத்தாச்சில்லை..போக வேண்டியதுதானே? அப்றம் ஆடடோ பஸ் எதும்

கிடைக்காது"
"இரு மேனு டாக்டர் வரப்போறாராம் அவரைப் பாத்து"
"அவரைப் பாத்து?"
"என்ன விஷயம்னு கேக்கணும் யாராவது பொறுப்பேத்துக்கணும்லே?"
"மம்மி இதில நாம தலையைக் கொடுக்கறது நல்லதில்லை.நான் கீழே ஆபிஸ்ல விசாரிச்சேன் முதல் மூணு நாளைக்கு

பேமெண்ட் பண்ணிருக்கா.அதுக்கப்புறம் யாரும் வரலை. பாக்கி மட்டும் ஆயிரத்து எழுநு‘று ரூபா இருக்கு.அதைக்

கொடுத்தாத்தான் டிஸ்சார்ஜ் பண்ணுவா"
"பணம் பெரிசில்லை மேனு"
"அந்த பொம்பளை வந்திருந்தாங்களாம்மா?"
"சொன்னனே.. முதநாள் மட்டும் வந்து ரெண்டு பேத்துக்குள்ள ஏதோ வாக்குவாதம் பண்ணிக்கிட்டாங்க அதுக்கப்றம் யாரும

வரலை"
"அவங்க அட்ர்ஸ் இருக்குமா"என்று மேனகா கேட்டாள்.
"ரெஜிஸ்தர்ல இல்லை"
"ரெஜிஸ்தர்ல நம்ம அட்ரஸ் போன் நமபர் எல்லாம் கரெக்டா அவா யாரோ கொடுத்திருக்காம்மா.ரொம்ப க்ளெவரா

பண்ணியிருக்கா.எனக்கு அந்த புனிதவல்லி எங்கே தங்கிருக்கான்னு தெரிஞ்சாகணும்"
; "மைலாப்புர்ல எங்கயோ இப்ப அதுக்கென்ன?"
"அதுக்கென்னன்னா? இந்தளை டிஸ்சார்ஜ் பண்ணி குண்டுகட்டா அவ வீட்டு வாசல்ல கொண்டு வெச்சுட்டு

வரவேண்டாமாம்மா?"
"என்ன மேனு?"
"ஆமாம்மா சரியா கேட்டுக்கோ இவனை வீட்டுக்கு கீட்டுக்கு அழைச்சுண்டு வர்றதா எதாவது யோசனை இருந்தா

கைவிட்டுரு !முதல்ல இபபடி திருட்டுத்தனமா நம்ம விலாசத்தை கொடுத்துட்டு அவா பொறுப்பில இருந்து கழட்டிக்க

முடியாது"
"மேனு இந்த சமயத்தில் இதெல்லாம் பத்தி ஆர்க்யு பண்ண வேண்டாம்னு தோண்றது"
"பேச்சே கிடையாது.சிஸ்டர் இந்தாளு எங்கம்மாவை எப்படி ட்ரீட் பணணியிருக்கார் தெரியுமா? என் அண்ணா பரத்

சொல்லியிருக்கான்.அப்போது நான் கையில குழந்தை. மழையில நிஜமாவே தமிழ் சினிமாவில வர்றா மாதிரி வாசல்ல தள்ளி

கதவைச் சாத்தி யிருக்கார். ஒரு மெடிக்கல் ஷாப்பில ராத்திரி மழை நிக்கற வரைக்கும் காத்திருந்தோமாம் ராத்திரி சாப்பாடே

இல்லை. இவங்க அண்ணா வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியிருக்காங்க அவங்க சம்சாரம் பால்கனியில் இருந்தே திருப்பி

அனுப்பியிருக்காங்க இதெல்லாம் இமாஜின் பண்ணிப் பார்க்க முடியாது உங்களால. வாங்க மம்மி போகலாம்"
"அப்படியா? ராமு சார் அப்பபேர்ப்பட்ட ஆளா நீ" என்று பத்திருந்தவன் கன்னத்தை நர்ஸ் தட்டுவதற்கேற்ப தலை மறுபடி

ஆடியது.
"எந்த நியாயத்தின் பேர்ல நாங்க இவரை உள்ள சேர்ததுக்க முடியும் சொல்லுங்க-"
நர்ஸ் "இப்போ இந்தாளு இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய நிலையில் இல்லை ஒரு மூட்டை மாதிரிதான்.பிளாட்பாரததில்

விட்டாலும் படுத்திருப்பார்.அப்படியே இருப்பார்"
"காது கேக்குமா?" மேனாக சார்ட்டைப் பார்ததாள் கத்தையாக காகிதங்களில் பத்து நாள் சரித்திரம்

எழுதியிருந்தது.ஸெரிப்ரல் த்ராம்பாஸ’ஸ், எம்பாலிஸம் என்றெல்லாம் எழுதியிருந்தது.
"இல்லை கேக்காது" .நர்ஸ் திடீர்என்று மௌனமாகி சைகை மூலம் பெரிய டாக்டர் வருவதைக் காட்டினாள்.

பெரிய டாக்டருக்கு அதிகம் வயசாகவில்லை.முப்பத்தைந்து இருககலாம் போல. வெள்ளைக் கோட்டின்

பையருகே"ஜி.ஆர்.கோபிநாத்"என்று எழுதியிருந்தது "ஹலோ அட்லாஸ் ஸம்ஒன் என்னம்மா எல்லாரும் இந்தாளை த்ராட்டில

வுட்டுட்டுப் போயிட்டிங்க?"
"இவங்க முதல் சம்சாரம் டாக்டர்"
"யாராயிருந்தாலும் தினப்படி யாராவது பொறுப்பேத்துக்கணும் அண்டர்ஸ்டாண்? நீங்க டாட்டாரா?"
மேனகா தலையசைத்தாள்.
"லுக் யங் லேடி, யுர்ஃபாதர் இஸ் ரியலி ஸ’க்.கண்ட்ரோல் பண்ணாத டயப்படிஸ், ஹைப்பர் டென்ஷன், ஆர்ட்டிரியல் திக்கனிங்,

த்ராம்பாஸ’ஸ் ஆகி ப்ளாட் க்‘ளட் ஆகியிருக்கு அஃபேஸ’யா இருககு எல்லாம் சேர்ந்து ஒரு பக்கமே பாரலைஸ்

ஆகியிருககு.நிறைய க்ளாட்ஸ் இருக்கும் போல இருக்கு அதைக் கரைக்கத்தான் தொடர்ந்து மருந்து கொடுததுக்கிட்டு

இருக்கம் ஒரு ஸ’.டி.ஸ்கான் எடுக்கணும் எந்த அளவுக்கு டாமேஜ்னு தெரியணும். ..யாரு பொறுப்புன்னு பார்த்தா அட்மிட்

பண்ணவங்க ஆளையே காணம்ங்கறாங்க.ரொம்ப வினோதம்"
"நான் சொல்றேன் டாக்டர்"
"மேனு சும்மாரு.டாக்டர் இவர் உயிருக்கு ஆபத்தா?"
"அப்படி இல்லை பெட்ஸோர் இல்லாம பாத்துக்கிட்டு வேளாவேளைக்கு ஃபீட் பண்ணா பத்துநாள்ள சில ஃபாகல்ட்டிஸ்

எல்லாம் திரும்ப பெற சான்ஸ் இருக்கு. எழுந்து நடக்க முடியாட்டாலும் ரைட் ஹாண்ட் கண்ட்ரோல் வரும்னு நம்பிக்கை

இருக்கு"
"டாக்டர் திஸ பாஸ்டர்ட் ட்ரீடடட் மை மதர் லைக் ஷ’ட்" என்று ஆரம்பித்த மேனகாவைத் திரும்பி நிதானமகாப் பார்த்து"லுக்

இந்தாள என்னைப் பொறுத்தவரையில ஒரு பேஷண்ட். இவர் பர்ஸனல் லைஃப்ல எப்படி இருந்தார்னு எனக்கு அக்கரை

இல்லை கொலைகாரனா இருந்து பெயில்ல வந்தாலும் இதே ட்ரிட்மெண்ட் தான் கொடுப்பேன்.எனக்க இவர் ஒரு பல்ஸ் ஒரு

மூச்சு ஒரு எக்ஸ்ரே ஒரு ஸ்கான் இமேஜ் ஒரு ஸ’ண்ட்ரோம் அவ்வளவுதான்"
"அந்த ஸகான என்னவோ சொன்னிங்களே அதை எடுக்க எத்தனை பணமாகும்?"
"ஆபிஸ்ல கேளுங்கோ சொல்வா நா€ளைக்கு எடுத்துரலாம்.இவரை இன்னம் பத்து நாளாவது வெச்சுக்கிட்டா நினைவு வர

சான்ஸ இருக்கு.இப்பவே நிறைய இம்ப்ரூவ்மெண்ட் மாரைப் பிராண்டினா முழிச்சுப்பார் பாருங்க"
டாக்டர் "ராமசசந்திரன் வேக் அப் வேக் அப் ராமச்சந்திரன் .. யார் வந்திருக்கா பாருங்க " என்று மூர்க்கத்தனமாக அசைத்தார்.
"பததுநாள் கழிச்சு அவரால பேச முடியுமா?" என்றாள் மேனகா.
"பேச்சு வரதுக்கு கொஞ்ச நாள் ஆகலாம்"
"சொல்றதைப் புரிஞ்சுப்பாரா?"ராமச்சந்திரன் கண் விழித்து விழிகள் உருண்டன. "இப்பவே அரசல் புரசலா புரியும்.என்ன

ராமச்சந்திரன் இது யாரு சொல்லுங்கோ? உங்க டாட்டர்"
"அவர் பதினஞ்சு வருஷமா பாத்ததில்லை டாக்டர்"
"அப்டியா? எங்கயாவது அமெரிக்காவில இருந்தாளா?"
"இல்லை, அசோக் நகர்ல" என்றாள் மேனகா
இப்போது மேனகாவை உற்றுப் பார்தத டாக்டர்"ஸாரி பர்னஸனல் ட்ராஜடி போல இருக்கு சரியானப்புறம் இந்தாளை

உலுக்கிரலாம் கவலைப்படாதிங்க" என்றார்.
நர்ஸ் அவர் போனதும் "இண்டியாவிலயே இவர்தாங்க பெரிய ந்யுரோ ஸர்ஜன். என்ன யங்கா இருக்கார் பாருங்க"
மேனகா அதை கவனிக்காமல்"மம்மி போகலாமா?"
"இல்லை. ராத்திரி நான் இங்கயே இருக்கேன் நீ போய் மாற்றுப் புடவையும் டாய்லெட் செட்டும் கொண்டு வந்துரு கார்ததால

காலேஜ“க்கு போன் பண்ணிச் சொல்லிரு நாலு நாளைக்கு வரமாட்டேன்னு"
அவள் சொல்வதில் கவனமில்லாமல் மேனகா தன் தாயையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்து "திஸ் லேடி இஸ்

அன்பிலீவபிள்"என்றாள்"சிஸ்டர் இந்தாள் சூட்டுத் தழும்பு இருககு எங்கம்மா புஜத்தில"
"மேனு ஜாஸ்தி பேசாம போறியா இப்ப?"
மேனகா படுத்திருந்த ராமச்சந்திரனைப் பார்த்து "பாருய்யா பாரதப் பண்பாடு! சட் யு ஆர் டிஸ்கஸ்டிங்" விருட்டென்று

புறப்பட்டுச் சென்றாள்.
போனதும் நர்ஸ் "இந்த வயசில புரியாதுங்க"என்று தன் வயிற்றைத் தடவிக் கொண்டாள்.

தினம் காலை மேனகா ஆட்டோ ரிக்ஷாவில் அவிஷ்கார் ரெஸ்டாரண்ட்டிலிருந்து அம்மாவுக்கு சாப்பாடும மாற்று உடையும்

கொண்டு கொடுத்து விட்டுத்தான் காலேஜ் போவாள். மாலை திரும்ப வந்ததும் காபி டிபன் வாங்கிக்கொடுப்பாள்.தாய்க்கும்

மகளுக்கும் அதிகம் பேச்சே இல்லை. ராஜலட்சுமிதான்"இன்னிக்க முழிச்சு முழுசா என்னைப் பார்த்தார்" என்பாள்.

"அடையாளம் தெரிஞ்சாப்பல இருந்தது கண்ணுல தண்ணி வந்தது"
"மருந்தோட ரியாகஷ்னா இருக்கும். மம்மி உன்னை ஒண்ணு கேக்கணும்"
"என்ன?"
"இவர் நிஜமா பிழைச்சு எழுந்து நடமாடறார்னு வெச்சுக்கோ என்ன செய்யறதா உத்தேசம்?"
"என்ன செய்யறதுன்னா?"
"எங்க தங்கப் போறார் எங்க அன்பான அபபா? பரத்துக்கு எழுதினேன்
அவனும் நம்பவே இல்லை"
"நம்ம கூடத்தான்"
"நோ வே நான் ஹாஸ்டல் போயிருவேன். ஐ ஜஸ்ட் காண்ட் ஸ்டாண்ட் திஸ் ரோக்"
"அதெல்வாம் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல பிழைச்சு எழுந்திருக்கட்டும்.
"அந்தப் புனிதவல்லிகிட்டருந்து தகவல் உண்டா?"
"இல்லை.அவா கைகழுவிட்டான்னு தோண்றது"
"சக்கையா உறிஞ்சுட்டு இந்தாளை கொட்டை துப்பறாப்பல துப்பிட்டா அதைப் பொறுக்கி வெச்சுண்டிருக்கே மம்மி நீ என்ன

நிருபிக்க விரும்பறே-"
"ஒண்ணுமில்லை மேனு.ஒண்ணுமே நிருபிக்க விரும்பலை"
"இவர் உன்னைப் படுத்தினதெல்லாம் மறந்து போச்சா?"
"இல்லை"
"பின்னே எதுக்காக?"
"ஏதோ ஒரு அனாதைக்கு செய்யறதா ஒரு மனிதாபிமானமா வெச்சுக்கலாமே. அதோட பழைய பந்தம்னு ஒண்ணு அது

என்னவோ எங்க தலை முறையில அழியாத பந்தம்னு தோண்றது"
"இன்க்ரெடிபிள் லேடி"என்று அவள் அருகில் வந்து க்னனத்தோடு ஒட்டித் தேய்த்து விட்டுச் சென்றாள் மேனகா.

டாக்டர் கோபிநாத் எதிர்பார்த்தபடியே எட்டாம் நாள் ராமச்சந்திரனுக்கு முழு நினைவு வந்தது வலது கையை அசைக்க

முடிந்தது.கண்களில் அடையாளம் தெரிந்தது.
"என்னைத் தெரியறதா?"
தலையை ஆட்டினான்.
"பேச மாட்டாரா?"
"பேச்சு வரதுக்கு இன்னும் மூணு நாலு நாள் ஆகும்"
அபபோதுதான் உள்ளே வந்த மேனகாவைப் பார்த்து டாக்டர்"மேனகா நான் சொன்ன வாக்கை

காப்பாததிட்டேன்.உங்கப்பாவுக்கு முழு நினைவு வந்துடுத்துது என்ன என்னவோ கேக்கணும்னியே என்ன வேணா கேட்டுக்க

தி மான் இஸ் ல்யுஸ’ட் நௌ.
"சிஸடர் இன்னிக்கு வார்டு பாயை ஷேவ் பண்ணச் சொல்லுங்க"
மேனகா தன் தகப்பனாரை கண்கொட்டாமல் பார்த்தாள்.
"பேசறாரா?"
"இல்€லா புரிஞ்சுக்கறார். இவ யாரு தெரியறதா?" கலங்கிய கண்கள் அவளை ஏறிட்டுப் பார்த்து அடையாளம் தேடின.
"இவ மேனகா! அப்போ மூணு வயசு. உங்க பொண்ணு மேனகா.. மேனகா"
ராமசசந்திரனின் கண்கள் தன் மகளை மெதுவாக நிரடின.
மேனகா படுக்கையருகே வநது மிக அருகில் நின்றாள்.
"சொன்னியாம்மா? எட்டு நாளா நீ இவருக்கு மூத்திரம் பீ வாரினதை சொன்னியாம்மா?
உன்னை நடுததெருவில துரததி விட்டதுக்கு எப்படி எங்களை யெல்லாம் வளர்த்தே .
சொன்னியாம்மா?எப்படி ஆளாக்கினே, எப்படி நீ வேலைக்குப் போப்ச் சேர்ந்து எங்களை படிக்க வெச்சே சொல்லும்மா

உறைக்கட்டும் சொல்லு"
"மேனு அதெல்லாம் வேண்டாம்"
ராமச்சந்திரனின் கை மெதுவாக அசைந்து உயர்ந்து மேனகாவின் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைக் காட்டியது.
"என்ன சொல்றார்?"
"நோட்டு வேணுங்கறார் போல இருக்கு"
"எதாவது எழுதணுமா?"
ராமச்சந்திரன் தலையை அசைக்க மேனகாவிடமிருந்து பேனாவையும காகிதத்தையும் வாங்கி அவன் மடியில் ராஜலட்சுமி

வைத்தாள் ராமசசந்திரன் விரலிடுக்கில் பேனாவை வைக்க அவன் மெல்ல எழுதினான்:-
"புனிதவல்லி எங்கே?"

(முற்றும்)

=============================

நிஜத்தைத் தேடி
சிறுகதை சுஜாதா

கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர்

எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.பழக்கப்பட்ட மௌனம்.கிருஷ்ணமூர்த்தி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க சித்ரா குக்கர்

சப்தம் வரக் காத்திருக்கும் நேரத்தில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள்.மர கேட்டைத் திறக்கும் சப்தம்

கேட்டது.ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய ஒருவன் கையில் தட்டுடன் காலில்

செருப்பின்றி தோட்டத்தில் நடந்து வந்தான்."யாரு?" என்றான்.சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக்

கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: "ஊருக்குப் புதுசுங்க.வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து

போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க .எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்" அவன் வைத்திருந்த தட்டில்

சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

"பாத்தியா விமலா! இந்தக் குழந்தைங்க படற அவஸ்தையை" என்பதுடன் கதையை நிறுத்திவிட்டு சித்ராவும் எட்டிப்

பார்த்தாள்.

அவன் முகத்தில் மூன்று நாள் தாடி. கண்களில் தேவைக்குப் போதுமான சோகம் "என்னவாம்" என்றாள்.

அவன் "ஊருக்குப் புதுசு வேலை தேடி வந்தேங்கம்மா" என்று துவங்கி மறுபடி அத்தனையும் சொன்னான்.

மனைவியின் மரணம் என்பது உடனே கேட்டவனை உலுக்கிவிடக்கூடிய சோகம். உடனே உள்ளே போய் பணம் எடுத்துக்

கொடுக்கவேண்டியதுதானே? கிருஷ்ணமூர்த்தி அபபடிச் செய்யவில்லை. செய்யமாட்டான்.எதையும் விசாரிப்பான்.

சித்ராவுக்குத் தெரியும்.

"வீடு எங்கே" என்றான்

"இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க" "சரி அட்ரஸ் சொல்லு"

"போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்" என்றாள் சன்னமாக "இரு"

"நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்!காலைல இறந்துட்டா" "சரிதாம்பா,அட்ரஸ் என்ன?

சொல்லேன்!"

அவன் சற்றே யோசித்து "மூணாவது கிராஸ்"என்றான் "மூணாவது க்ராஸ்னா?எச்.எம்.ட்டி லே அவுட்டா?சுந்தர் நகரா? இல்லை

கோகுலா காலனிக்குள்ளயா?"

"சொல்லத் தெரியலிங்களே,சினிமா தியேட்டர் பக்கததில"
"அவனோட என்ன வாக்குவாதம்?"
"இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர்யா?"
"என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?"

"எனக்குத் தெரியும். நீ சொல்லு"
அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் "பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் கா€லைல இறந்துட்டா"

"சரிப்பா.எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?"
"என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன்,என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே.

காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும்.பிணம் கிடக்கு அங்கே!"
"அட்ரஸ் சரியா சொல்லு தரேன் "
"அதான் சொன்னேனே"
"சரியா சொல்லு"
"அய்யோ" என்றான் ."வேண்டாம் ஸார்.என்ன நீங்க"
சித்ரா எதிர்பார்த்தாள்."என்ன ஒரு மனிதாபிமானமில்லாத ஆசாமி அய்யா நீ" என்று திட்ட ஆரம்பிப்பான் என்று நிச்சயம்

எதிர்பார்த்தாள். அவன் அப்படிச் சொய்யாமல் திடுதிப்பென்று அழ ஆரம்பித்தான் . தட்டைக் கை மாற்றிக்கொண்டு

மௌனமாக அழுதான்."வரேன் ஸார்" என்று திரும்பி நடந்தான். போகும்போது வாசல் கேட்டைத் தாளிட்டுவிட்டுச் சென்றான்.

கிருஷ்ணமூர்த்தி இந்தச் செயலை எதிர பார்ககவில்லை "போய்ட்டான்" என்றான். "கூப்பிடுங்க அவனை!" என்றாள் சித்ரா.
"எதுக்கு? எல்லாம் பாசாங்கு. தெரியுமோல்லியோ?"
"ப்ளீஸ். அவனைக் கூப்பிடுங்கோ. கூப்ட்டு எதாவது கொடுத்து அனுப்பிடுங்கோ" கிருஷ்ணமூர்த்தி சிரித்து வெளியே

பார்த்தான்.சற்று தூரத்தில் அவன் தெரிந்தான்.இன்னும் அழுது கொண்டே சட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே

சென்று மறைந்தான். "அவன் சொல்றது உண்மையா இருந்தா பளிச்சுன்னு அட்ரஸ் சொல்லியிருப்பானோ இல்லியோ? ஏன்

தயங்கணும் ? அட்ரஸ் சரியா சொல்லிருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனோ?"என்றான் "அவன்தான் ஊருக்குப்

புதுசுங்கறானே.சரியா அட்ரஸ் சொல்லத் தெரியலையோ என்னவோ" "சேச்சே உனக்குத் தெரி‘யாது சித்ரா, இது பெரிய்ய

ரேக்கெட்.அவனைப் பார்த்தான மனைவி செத்துப் போனவன் மாதிரியா இருந்தது? திருதிருவென்று முழிச்சானே"
"எனக்கென்னவோ அப்படிப் படலை.எதுக்கு அழுதான்?"
"அதுவும் அவனுடைய நாடகத்தில ஒரு பகுதி"
"ஏதாவது கொடுத்திருக்கலாம், பா..வம்"
"மறுபடியும் மறுபடியும் அசட்டுத் தனமா பேசறியே. வெளி உலகத்தில எத்தனை பொய் இருககு தெரியுமா? எவ்வளவு ஏமாத்து

வேலைகள்? வீட்டுக்குள்ளயே இருக்கறவ நீ. ரொமபப் பித்தலாட்டம் நடக்குது தெரியுமா?"
"எனக்கு அவன் மூஞ்சியைப் பார்த்தா பொய் சொல்றவன் மாதிரி தெரியலை" "உனக்கு அந்த அறிவு போறாது"
"சரி போதாதுன்னு வெச்சுக்கலாம் அவன் பொய் சொல்றான்னே வெச்சுக்கலாம்.ஒரு ரூபா ரெண்டு ரூபா கொடுத்தா என்ன

தேஞ்சா போய்டுவோம்?எவ்வளவு செலவழிக்கிறோம் கன்னா பின்னான்னு"

"அது வேற விஷயம். வீடு தேடி வந்து ஆளுங்களை முட்டாள் அடிக்கிறவனுக்கு நாம ஹெல்ப் பண்ணணுமா என்பதுதான்

ப்ரச்சனை. இப்ப அவன் நேர வந்து'ஸார் நான் ஒரு ஏழை, அடுத்த வேளை சோத்துககு காசில்லை'ன்னு யோக்கியமா வந்து

கேட்டிருந்தா ரெண்டு ரூபா என்ன அஞசு ருபா கூட கொடுப்பேன் அதை விட்டுட்டு அனியாயத்து•கக பெண்டாட்டி

செத்துப்போனதா சரடு விட்டுட்டு சாவுன்ன உடனே கேள்வி கேக்காம தந்துருவாங்கன்னு ஒரு கதையை ஜோடிச்சு... என்ன ஒரு

பித்தலாட்டடம் பாத்தியா இதை எப்படி நாம என்கரேஜ் பண்ண முடியும்? சொல்லு."

சித்ராவுக்கு எத்தனையோ சொல்ல வேண்டும் போலிருந்தது அவன் முகத்தில் பொய்யில்லை என்று சொல்ல வேண்டும்

நியாயமாகவே அவனுக்கு இருந்த சோகத்தில் புதுசாக சரணடைந்த வீட்டின் விலாசத்தை சொல்வதில் கழப்பம்

இருந்திருக்கலாம் என்று, நீங்க செஞ்சது எனக்கு கட்டோடு பிடிக்கவில்லை என்று , சொன்னால் வாக்குவாதம் வரும் சண்டை

வரும் எக்கேடு கெட்டுப்போ என்ற சாப்பிடாமல் வெளியே போய்விடுவார் குக்கர் பெருமூச்சுவிட்டது. சித்ரா உள்ளே

சென்றாள்.

கிருஷ்ணமூர்ததி செய்தித் தாளில் ஆழ்ந்தான். நியுஸ்ப்ரிணட் வார்த்தைகளில் அவன் கவனம் நிலைக்கவில்லை.. தான்

செய்தது சரிதான் என்பது அழுத்தமாக ஏன் இவளுக்குப் புரியவில்லை? சுளித்துக் கொண்டு உள்ளே சென்றதிலேயே

ஏமாற்றத்தைக் காட்டினாளே அவளுக்கு என்ன தெரியும். இங்கிருந்து பேசினான்-

"இப்படித்தான் ஒரு தடவை திருப்பதிக்கு போறேன்னு ஒரு அம்மா மஞ்சள் புடவையோட வந்து அஞ்சு ருபா வாங்கிண்டு

போனாளே! என்ன ஆச்சு? தியேட்டர்ல பார்க்கலை நாம?"
"ஆமாம்"
"அப்புறம் அனாதைப் பள்ளிக்கூடம் நடத்தறோம்னு நோட்டீசு ரžது புஸ்தகம் எல்லாம் அடிச்சுண்டு ஒருத்தன் வந்தானே என்ன

ஆச்சு?"
"என்ன ஆச்சு" என்றாள் உள்ளிருந்து
"அந்த மாதிரி தெருப் பேரே இந்த ஊர்ல இல்லைன்னு கண்டு பிடிச்சுக் காட்டினேனே இல்லையா?" "ஆமாம் ஞாபகம் இருக்கு"
"அப்படி யெல்லாம் சுலபமா ஏமாறக்கூடாது பத்து ரூபாய்க்காக பெத்த தாயையே செத்துப் போனதா சொல்லிடுவாங்க. இந்த

உலகத்தில எத்தனை பொய் இருக்கு தெரியுமா சித்ரா?" சித்ராவிடமிருந்து பதில் வரவில்லை
"சித்ரா?"
பதில் இல்லை
கிருஷ்ணமூர்த்தி பேப்பரை மடித்து வைத்துவிட்டு சமையலறைப் பக்கம் சென்றான்.சித்ரா அடுப்படியில் அழுது

கொண்டிருந்தாள். திடுக்கிட்டான்.
"இப்ப எதுக்காக அழறே?"
அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
"எதுக்கா இப்ப அழுகைன்னு கேக்கறேன்" என்று அதட்டினான் "ஒன்றுமில்லை"
"பொய் சொல்லாதே நான் அவனை விரட்டினதுக்காகவா?"
"இல்லை..இல்லை" விசம்பல்களுக்கிடையே சொன்னாள்."எனக்கென்னவோ அவன் பொய் சொல்லலைன்னு தோணித்து

அவன் திடீர்னு அப்படி விக்கி விக்கி அழுததை நினைச்சுண்டேன் யாரோ ஒரு ஜ“வன் ஏதோ ஒரு துக்கம் அதை எனக்கும்

கொஞ்சம் கொடுத்துட்டுப் போய்ட்டாப்போல ஆய்டுத்து"
"எல்லாம் பொய்னு எத்தனை தடவை சொல்றது"
"எப்படித் தெரியும் உங்களுக்கு" என்று தன்னியல்பாகக் குரலை உயர்த்திக் கேட்டாள். அவன் அவளை உக்கிரமாகப்

பார்த்தான்.
"எப்படித் தெரியுமா ? சொல்றேன். அனுபவம்டி .வெளில எனக்கு ஏற்பட்ட அனுபவம். சித்ரா நீ எல்லாத்தையும் இமோஷனலா

பார்க்கறே அதான் உங்கிட்ட தப்பு. நான் ப்ராக்டிக்கலா பார்ககறேன்"

"சரி, நீங்க சொல்றதுதான் சத்தியம். நான் அழலை" என்றாள். "ஆனா" "என்ன சொல்லு. மனசில நினைச்சிண்டிருக்கிறதை

சொல்லிடு" "நீங்க சொல்றாப்போல நிறையப்பேர் பொய் சொல்றா ஏமாத்தறா தப்பிப்போய் இவன் சொன்னது மட்டும் நிஜமா

இருந்து தொலைச்சுடுத்துன்னா.. அவ்வளவு துக்கத்தில இருக்கிறவனை வாசல்ல நிக்கவெச்சு கேள்வி கேட்டு மடக்கி அவனும்

சொல்லத் தெரியாம முழிச்சு காசும் கொடுக்காம துரத்திட்டமே அது தப்பில்லையா? எதுக்காக கேள்வி கேட்கணும் அவனும்

பொய் சொல்றான்னா எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ரெண்டு ரூபாய் கொடுத்திருந்தா இத்தனை.." "மறுபடியும் மறுபடியும்

அதையே சொல்றியே ரெண்டு ரூபாய் பெரிசில்லை எனக்கு சித்ரா ப்ரின்சிப்பிள் அதான் முக்கியம்!"

"சரி" என்றாள் சுருக்கமாக. சற்று நேரம் மனைவியையே பார்த்தான்."ஆல்ரைட் உனக்கு இன்னும் சமாதானமாகலை.ஒண்ணு

செய்யறேன் அவன் என்ன சொன்னான்? தியேட்டர் பக்கத்தில மூணாவது கிராஸ்னுதானே? தியேட்டர் கிட்டத்தில்தான்

இருக்கு மூணாவது கிராஸ் போய் அங்க இருக்கானான்னு விசாரிச்சுண்டு வந்துடலாம் வா! அப்பதானே உனக்கு நிம்மதி

ஆகும் ? வா காரை எடுத்துண்டுபோய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துரலாம்" "வேண்டாம். நீங்க சொன்னது எனக்கு கன்வின்ஸ்

ஆய்டுத்து.நான் ஏதோ பைத்தியக் காரத் தனமா அழ ஆரம்பிச்சுட்டேன்."
"இல்லை நீ கன்வின்ஸ் ஆகலை. நான் சொன்னது சரின்னு உனக்கு இன்னும் புரிபடலை" "நான் வரலை! எனக்கு நிறைய வேலை

இருக்கு"
"நீ வரலைன்னாக் கூட நான் போய்ப் பார்க்கத்தான் போறேன்"
"எதுக்காக விதண்டாவாதம் மறங்க"
"இல்லை இந்த கேஸ’ல யார் சரின்னு பார்த்தாகணும் நீயா நானா"
"நீங்க சொன்னதுதான் சரி ஒப்புத்துண்டுட்டேனே"
"நீ இன்னும் மனசார ஒப்புததுக்கலை. உனக்கு ப்ரூஃப் வேணும்தானே நான்
போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்"
"இது என்ன பிடிவாதம் நீங்க அங்க போய் அவன் சொன்னது நிஜம்னே தெரிஞ்சா என்ன செய்யப்போறிங்க"
"தோல்வியை ஒப்புத்துண்ணடு பத்து ருபா அல்லது பதினஞ்சு ரூபா கொடுத்துட்டடு வந்துருவேன் ஆனா அப்படி நடக்காது

லைஃப்ல நிறைய பார்த்துட்டேன் சித்ரா"
"அவ்வளவு ஷ்யுரா இருந்தா எதுக்குப் போகணும்"
"உனக்காகத்தான் சித்ரா நீ அருவியா அழுத பாரு? அது தப்புன்னு ஸ்தாபிக்கிறதுக்கு" "எனக்கு இப்ப சிரிப்பு வரது"
"அப்புறம் சிரிக்கப் போறது யாருன்னு சொல்றேன்"

கிருஷ்ணமூர்த்தி ஷெட்டை திறந்து பெரிய கேட்டைத் திறந்து காரைக் கிளப்பி žறிப் புறப்பட்டான் தியேட்டர் ஒரு மைலுக்குள்

இருக்கும். நிச்சயம் போய்ப் பார்த்து விடவேண்டும் மூணாவது கிராஸ் என்று தானே சொன்னான் ? என்னை என்னவென்று

நினைத்துக் கொண்டாள் கருணை இல்லாதவன் என்றா? இவளுக்கு என்ன தெரியும் கேள்வி கேட்காமல் காசை சமர்ப்பிக்க

நான் என்ன முட்டாளா? அழு மூஞ்சி இப்படித்தான் ஒரு தடவை...

தியேட்டருக்கு அருகில் மூன்றாவது கிராஸ் இருந்தது. அதில் திரும்பியதும் வெறிச் சென்ற அந்த சிறிய தெரு பூராவும்

தெரிந்தது. தெருவின் நடுவில் ஒரு சட்டி வைக்கப்ப்டடு அதனுள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது.பச்சை மூங்கில்கள்

காத்திருந்தன.ஓரத்தில் தலையில் கை வைத்துக்கொண்டு அவன் மண்ணில் உட்கார்ந்திருந்தான். கிருஷ்ணமூர்த்தி சற்று

நேரம்தான் தயங்கினான். காரை ரிவர்ஸ் செய்தான் .žறிப் புறப்பட்டான், திரும்பவும தன்வீட்டை நோக்கி.

"என்ன ஆச்சு?" என்றாள் சித்ரா அசுவாரஸ்யமாக "நான் சொன்னது சரியாப்போச்சு அவன் சொன்ன மூணாவது க்ராஸ்

முழுக்க விசாரிச்சுப் பார்த்துட்டேன் ஒண்ண்ணும் இல்லை"
"அப்படியா? அப்பா! எத்தனை பொய்!" என்றாள் சித்ரா.

(முற்றும்)

Author's notes on this story?
This was written in June 1980.Still many people remember this story essentially because of its implied male dominance. Coupled with this " the depiction of a guilt

feeling associated with a wrong decision, the husband's stubborn refusal to say `I could be wrong` and the simple genuine emotions of the wife make this a significant

story" so wrote a reviewer Some times the writer feels the urge to revise, sharpen, or edit a story when he reads it after a long time
In this story I didnt feel it even though there is a slight shift in the viewpoint somewhere about two thirds of the story. Some of the feedback I received in this web

page suggested a kind of FAQ on short story writing. I' d like to have your views on this. Sujatha

A note on the illustrator

Mr Maniam Selvam who has illustrated this short story is the leading Illustrator of Tamil Nadu. You can see his drawings in almost all the Tamil periodicals. He is the

son the late Maniam who was a great artist and added a dimension of joy to kalkis serials like 'Ponniyin Selvan'. the son is a very versatile artist with a mix of skills like

craftsmanship imagination perspective knowledge and beautiful lines.

=====================


திமலா - சுஜாதா

"உங்களைப் பார்க்க உங்கள்..." என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு "எத்தனை முறை

சொல்லியிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று" வெட்டினான்.
கோபக் கதவு திறந்தது
"நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி"
"ஓ நித்யா! நீயா?"
"உள்ளே வரலாமில்லையா?"
"தாராளமாக.உனக்கு யார் தடை செய்ய முடியும்? அருகே வா! முத்தம் தருகிறேன்"
நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாக தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில்

எழுத்துக்கள் அதி விரைந்தன.சுவற்றில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று 'ஆத்மா அண் கோ'வின்

அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக் காட்டின. ஆத்மா டச் போனில் "ந்யுயார்க்" என்று கூப்பிட்டு விட்டு "உட்காரேன்

நித்யா" என்றான்.
நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.
"நியு யார்க் நியு யார்க்!"
"நியுயார்க் ஸர்"
"எத்தனை வேண்டுமாம்?"
"இருபது மிலியன்"
"பத்தொன்பதுக்கு தீர்த்துவிடு"
"நிக்ஸ் ஸர்"
"வாங்குவது யார்?"
"ராத்சைல்டு"
"அந்தக் கழுகா? சரியாக ஒரு நிமிஷம் பார் அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ"
"சரி"
Thimala Image ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ""பிஸ’ பிஸ’ பிஸ’. இந்த

சமயத்தில் வந்தாயே?"என்றான்
நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில் கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பை

அதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸ’ஜன் அளவை அதிகரிததுக் கொண்டான். துல்லியமாக சிந்திக்க முடிந்தது.

அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன."க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா நீ

நிற்கிறாயே என்னவேண்டும் சொல்"
"நான் யார் தெரியுமா உனக்கு?"
"என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ ந்யுயார்க் பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது

செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு. என்ன சொன்னே நித்யா"
"ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்.
"என்னவேண்டும? சொல்லவே இல்லையே"
"ஆத்மா,எனக்கு நீ வேண்டும்"
"நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே"
"என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்"
"பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்"
"ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்"
"ராத்திரிதான் வருகிறேனே"
"வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய். து‘ங்கி விடுகிறாய்.காலை எழுந்து நான்

காண்பது காலிப் படுக்கை"
"தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?"
"அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ"
"ஹலோ டோக்கியோ"
நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.
"என்ன நித்யா இது?"
"ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே ஞாபகம்

இருக்கிறதா?"
"அதற்கென்ன?"
"அனுமதி கிடைததிருக்கிறது" என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது அவனிடம் காட்டினாள் அதில் கம்பயுட்டர்

அச்சில்

திமலா நிர்வாகம்
உங்கள் வேண்டுகோள்- '
20-2-2080 அனறு காலை
10-16 உங்களுக்காக
ஒதுக்கப் பட்டிருக்கிறது
நேரந்தவறாமல் வரவும்
இந்த அட்டையையும்
கொண்டு வரவும்
உங்கள் பார்வையாளர் எண் 164396
(இது செயற்கைக் காகிதம்)

ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு "அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம்

போய்வா" என்றான்
நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் "ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும். ஒரு மணி

நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும்

உடைத்து.."
"இரு இரு எப்போது போகவேண்டும்"
"நாளை காலை 10-16"
"ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ஃப்ரீயா?"
அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலிததது.
"நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் "
"ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது"
நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள்."முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு

ஜப்பான்காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு" "ஸாரி கிடைக்கவில்லை" என்றது குரல்.
"போய் உன் தலையைத் தின்னு"
"ஸாரி தலை கிடையாது"
"இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக்

கொண்டிருந்தாய.தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்"
நித்யா பதற்றத்துடன் " ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டுபேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே

பேச்சு.அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!"
"கூட யாரையாவது அனுப்பட்டுமா?"
நித்யா அழ ஆரமபித்தாள்
"நித்யா என்ன இது? இந்த நு‘ற்றாண்டில் யாரும் அழுவதில்லை"
மேலும் அழுதாள்.
"இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்துகொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும்

என்று நான் சொல்லவில்லையா?"
"ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?"
"ஒன்று செய்யலம் திமலா எவ்வளவு து‘ரம்?"
"நு‘ற்றம்பது கிலோ"
"நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்"
"முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும் . நன் போகிறேன்.உனக்கு வாழ்க்கைப் பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக்

கட்டிக்கெண்டிருக்கலாம் ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா"
"ஸாரி பதில் இல்லை"
ஆத்மா சிரித்தான்
Thimala Image "சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று

நினைக்கிறேன்.எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்"
"அப்படி எல்லாம் பேசாதே நித்யா"
"பின்னே என்ன?"
"அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு"
"முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம்,என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.ஒரு

வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும்

பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை" "இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது எனக்கு"
"ஒரு முறை வந்துபார்.உன் மனம் மாறிவிடும் கணவன் மனைவியாகப் போவது பெரும் பாக்கியம் என்கிறார்கள்"
"இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம் ஹலோந்யூ யார்க் என்ன ஆச்சு?" நித்யா டச்போனைப்

பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள் ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை. ஆத்மா அதைப்

பொறுக்கிக்கொண்டு
"கோபம் கூடாது என் மனைவியே"என்றான்.
"நான் அனி உன் மனைவி இல்லை"
கம்ப்யூட்டர் குறுக்கிட்டது "ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது"
"என்ன?"
"வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்"
நித்யா முகம் மலர்ந்தாள் "வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க"என்று கூவினாள்
"மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக

வந்தனமும்"என்றது கம்ப்.
ஆத்மா சிரிதது" திருப்திதானே? நாளை வருகிறேன். முததம் உண்டா?"
நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்

மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகிவிட்டாள்.ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.தன்னை

மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸ’ன்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக்

கொண்டாள். டச்போனை எடுத்து வானடாக்ஸ’யை அழைத்தாள்.ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள்.

நிறைய சமயமிருக்கிறது
திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!
கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம் ஏன், விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.
நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை கணவன் மனைவி உறவுக்கு இந்த நு‘ற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப்

பிடிக்கவிலலை.அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது.கணவன்

மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள். அவள் ஜ“ன்களில் கோளாறு என்று

ஆத்மா சொல்லியிருக்கிறான் . இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது.எனக்கு ஆத்மா ஒருவன் போதும,

அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும் மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸ’ வந்து

வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.
நித்யா ஏறிக் கொண்டாள் "எங்கே" என்றான் டாக்ஸ’ ஓட்டி
"முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு திமலா போகவேண்டும் பத்தே காலுக்குள்.உன்னிடம்

பூஸ்டர் இருக்கிறதா?"
"இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டித்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?"
"அதிகப் படியாக ஐந்து நிமிஷம்"
"சரி"
டாக்ஸ’ நழுவியது.
அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.
"ஒரு நிமிஷம்" என்று சொல்லி அதிவேக லிஃப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள்.
எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான் "ஹலோ லண்டன்! ஸ•ப்ராமெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன்

வேண்டும்.ஹலோ நித்யா"
"நேரமாகிறது கிளம்பு கிளம்பு"
"ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹ’யர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?"
"நாசமாப் போச்சு. திமலா!"
"ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா? இன்னும அரை மணி இருக்கிறதே இதோ வந்துவிட்டேன்"
ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை

அதிகரித்தது. கடவுளே! போக்கு வரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.
"டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்"
"கவலைப் படாதீர்கள் ஃப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன பூஸ்டர் வைத்திருக்கிறேன் . திமலாவில்

எந்த ப்ளாட்பார்ம்?"
"புரிய வில்லை"
"உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?"
"மஞ்சள்"
"பத்தாவது ப்ளாட்பார்ம்"
வான டாக்ஸ’ அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின் வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது.

ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவனை உரசிக் கொணடாள்

திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது. அப்பாடா!
ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.
நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.'திமலாவுக்கு வரவேற்கிறோம்' என்று ஸோடியம் ஒளிர்ந்தது. நித்யா வேகமாக

நடந்தாள். நீண்ட சதுர இயந்திரங்கள் 'உங்கள் அனுமதிச் žட்டை செருகுங்கள் ' என்றன.
செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு" நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம்

எண் கன்வேயரில் செல்லவும்"
சற்று தூரம் நடந்தார்கள்.ஒன்பதாம் எண் கன்வேயருக்கு ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச்

பளிச்சிட்டது.
'இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்' என்றது ஒலிபெருக்கி
ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ்

என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.
முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது.மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து ...கோபரம்

தெரிந்தது. நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரதான வாசல் திறந்திருந்தது .

அவர் இங்கிருந்தே தெரிந்தார் நித்யா துள்ளினாள். "பார் ஆத்மா, அவர்தான்!"
வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.
மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.
"அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!"
"உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்'என்று குரல் மேலே ஒலித்தது.
அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து "அர்ச்சனை உண்டா? என்ன மொழி?" என்றார்.
"தமிழ்" என்றாள் நித்யா
அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார்.மெலிதான இசை பரவியது.
துல்லியமான க­ர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-

"குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம் வினை ஓயுமே"

Thimala Image "சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ žனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி

திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூடட்ருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா... பூலோக

தெய்வம்..பிராžனமான கோயில். நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்.."
கற்பூர ஒளியில் ஆத்மா "த்ரில்லிங்!"என்றான்

Author's Note on this story

This is one of my early science fiction stories. I have written about forty of them. The basic requirement for a `soft` SF like this is a concept called `cognitive

estrangement` You can create an estranged world but it should have some recognizable contemporary emotion in it. The Science in science fiction is essentially used

to create new rules of interaction it need not be accurate Hard SF fantasizes a lot; for example in Yarby's Dune stories the new concept is `Moisture is wealth` not gold

not silver.

A man possessing a glass of water is a very rich man Moisture is sought and wars are waged If you are new to this genre I would recommend the stories of Ursula La

Guin. Clifford Symack. Ray Bradbury. Brian Aldiss .Theodore Sturgeon and Douglas Adams the delightful British author SF stories are more challenging and more

difficult to write It is like playing a new game forming your own rules The only thing more difficult to write is humour We will see an example in the next story

============================

வாஷ’ங் மெஷ’ன் சிறுகதை
சுஜாதா

இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை.ஸவேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும் போது,அவள் žருடைக்கு இஸ்திரி போட

வேண்டியிருக்கும் போது, வாசல் மணி அழைக்கும்போது ஃபோன் தொணதொணக்க "ஃபோனையாவது எடுக்கக

கூடாதா?காலைல எத்தனை காரியம் ஒருத்தி செய்ய முடியும்"என்று ஹாலில் பேப்பரில் மறைந்திருந்த கணவனைக்

கேட்டாள்.

Washing Machine "உங்களுக்குத்தான்"
"இல்லைன்னு சொல்லிடு" என்றான் சதீஷ்
"காலை வேளையில பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை"
"பொய் சொல்ல வேளை பார்க்கக் கூடாது சாவித்ரி"
மீண்டும் கதவு மணி ஒலிக்க கணவன் பெரிய மனது பண்ணி திறக்க சம்மதித்து "சாவித்ரி பேப்பர்க் காரன்" எல்லாக்

காரியமும் சாவித்ரியைச் சுற்றித்தான் "இன்னிக்கு இல்லைப்பா, ஏம்பா உம் பொஞ்சாதியை வீட்டு வேலைக்கு வரச்

சொன்னேனே" "ஆறு வூட்ல செய்றாம்மா.சி.ஐ.டி காலனில் ஒரு வூட்டை விட்டபறம் ஒண்ணாந்தேதி
வர்றதா சொன்னாங்க"
"ஒண்ணாந்தேதியா? அ து வரைக்கும் எப்படிப்பா சமாளிப்பேன்"
"என் தங்கச்சி அல்லாட்டி தம்பி சம்சாரத்தை வேணா கேட்டுப் பார்ககறேன் பேப்பர் இல்லிங்களா?" "இருக்குப்பா எடுத்து

பார்த்து போட எனக்கு எங்க அவகாசம்?"
"அய்யா?"
"அய்யாவா "என்று ஏளனமாக"அய்யா பேப்பர் போட்டுட்டா மழை வந்துரும்பா இருக்கற பேப்பரை சரியா மடிச்சு வெச்சாலே

பாக்யம்"
சதீஷ் ஸ்போர்ட்ஸ் பேஜை முடித்துவிட்டு குறுக்கெழுத்துப் பக்கத்தை நாலாக மடித்துக்
கொண்டான் "என்ன என் தலையை உருட்டியாறது"
"அய்யா எல்ப் பண்ணுவாரான்னு கேக்கறான் பண்ணுவாரே கெடியாரத்துக்கு சாவி
கொடுப்பார்ன்னேன்"
எல்லாமே செல்லமான கோபங்கள்தான் .சாவித்ரிக்கு இந்த அதிகாலை டென்ஷன் பிடிக்கும் ஆனால் வேலைக்காரி வராத

தவிப்புத்தான் "டூ மச்"
"உனக்கு வேலைக்காரி வரலைன்னா எம்மேல பாயற"
"உங்க மேல யார் பாஞ்சா? கொஞ்சமாவது ஒத்தாசை பண்ணா சரி இன்னிக்கு லீவுதானே?" "இல்லை ஆபிஸ் போகணும். வீடு

பெருக்கணுமா"
"அதெல்லாம் வேண்டாம், மேசை மேல இருக்கற லெட்டர்ங்களை ஒழுங்கா பொறுக்கி வெச்சா போதும் என்னால எல்லா

காரியமும் பண்ண முடியாது.பாத்திரம் தேய்க்க முடியறது. துணி தோய்க்கறிதுதான் பெரிய உபத்திரவம்"
அவனுக்கு இரண்டாம் வேளை காப்பி கொடுக்க சதீஷ் சோபாவில் இடம் மாறி உட்கார்ந்துகொண்டு "லெட்மி ஸ“ ஒரு

நாளைக்கு எத்தனை துணி ஆறு துணியா?"
"பதினெட்டு துணி"
"மூணுபேருக்கா?"

"ஆமாம், உங்க டீஷர்ட் டென்னிஸ் ஷர்ட் வாக்கிங் போன ஷர்ட் ஆபிஸ் ஷர்ட்..ஸாக்ஸ்.. ஸ்வேதாவோட யூனிஃபாரம்,அப்புறம்

அவ சுடிதார்,அப்றம் நைட்டி உங்க நைட் ஷர்ட் ரெண்டு செட் புடவை உள்பாவாடை பாடி ரவிக்கை கணக்கு என்ன வரது?"
"கொஞ்சம் கொஞ்சமா தவணை முறைல தோய்க்கிறது"
"அப்படி பண்ணித்தான் மொத்தம அம்பது துணி சேர்ந்திருக்கு"
"இதுவரை யார் தோச்சுண்டிருந்தா"
"எல்லாம் வேலைக்காரிதான்.அப்பப்ப கூடைல போட்டுருவோலம் .செட்செட்டா தோச்சு மொட்டை மாடில உணர்ந்திருவா"
"அவ வரலையாக்கும்"
"ஆமாம் , அதான் ப்ராப்ளம்"
"சாயங்காலத்துக்கள்ள சால்வ் பண்றேன்"
"என்னால தோய்க்க முடியும். யாராவது ஒத்தாசை செய்தா போதும். தோச்சதை பிழிஞ்சு உணத்தினா போதும்.ஏதாவது"
"எல்லாத்து•ககும் ஒரு வழி பண்றேன்"
சதீஷ் போனை எடுத்து டெலிபேலான் டைரக்டரியின் மஞ்சள் பக்கங்களைப்
புரட்டி'சங்கர் எம்போரிய'த்துக்கு போன் செய்தான்
"ஒரு வாஷ’ங் மெஷ’ன் எத்தனை இருக்கும்"
"ஸார் டோண்ட் ஒர்ரி எபவுட் தி ப்ரைஸ் சார்.அட்ரஸ் சொல்லுங்க எங்க சேல்ஸ்பர்ஸன் வந்து டெமோ பண்ணுவார்.அப்றம்

விலை பேசலாம். அதுவும் எங்க இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம்ல இனிஷ’யல் பேமெண்ட் சிக்ஸ அண்ரட் கொடுத்தாபோதும்

பாக்கியை முப்பத்தாறு.." "அதெல்லாம் வேண்டாம் இருக்கறதுக்குள்ளயே நல்ல மெஷ’ன் அனப்புங்க டவுன் பேமெண்ட்"

போனை வைத்துவிட்டு "வாஷ’ங் ப்ராப்ளம் சால்வ•டு.அப்புறம் என்னவேணும் டிஷ்வாஷர்? வீடு பெருக்க வாக்வம் க்ளீனர்?"
"நான் அதெல்லாமா கேட்டேன்.கொஞ்சம் எ ல்ப் பண்ணா போதும் நானே எல்லாக் காரியமும செய்துக்கறேன்னுதானே

சொன்னேன்.வாஷ’ங் மெஷ’னை எல்லாம் எனக்கு இயக்கத் தெரியாது"
"கத்துக்கலாம்மா"
என்றாள் ஸ்வேதா
"நீ கத்துக்கயேன் அம்மாவுக்கு எல்பா இருக்கும்"
"நோ வே நான் வாஷ’ங் மெஷ’ன் இல்லைப்பா கம்ப்யுட்டர்"
"மெஷ’ன் னா பயப்படக்கூடாது எதுக்கும் அவன் வருவான் எப்படி இயக்கறதுன்னு சொல்லித்தருவான்"

கணவன் ஒரு குட்டித்து‘க்கம் போடச் சென்றதும் சமையலை முடித்துவிட்டு சற்று நேரம் தமிழ ‘க்கத் தொடர் பார்த்தாள்.அதில்

யாரோ பாட்டிலைத திறந்து விஷம் குடிக்குமுன் கண்ணயர்ந்தபோது சதீஷ் ஓசைப்படாமல் அவளைப் பின்னாலிருந்து

அணுகி அணைத்துக் கொள்ள முயன்ற போது திடுக்கிட்டு எழுந்தாள்
"எதுக்காக நீ கஷ்டப் படணும்"என்று கணவன் பரிவுடன் அவைள அணைத்துக் கேட்டான். "இந்த முறை ஹாலிடே ரிசார்ட்

என்ன ஆனாலும் சரி, போயே ஆகணும் ஒவ்வொரு வருஷமும் தவறிப் பேய்ட்றது"

பரவால்லைங்க ஆபிஸ் வேலை முக்யமில்லையா?" "என்ன பெரிய ஆபிஸ் தட்டுக் கிடறது? நான் உழைக்கிறேன்னு எங்கிட்ட

எல்லா வேலையையும் கொடுத்துட்டடு மற்ற விபி எல்லாம் டார்ஜிலிங் கொடைக்கான்லனு குழந்தை குட்டியோட

போய்டறாங்க"
"அதனாலென்ன"

"எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு சாவித்ரி கடுமையா உழைக்கிறே உனக்கும் ஒரு ரெஸ்ட் வேண்டாமா? வேணும்னா ஒரு

பதினஞ்சு நாள் மாயவரம் போய்ட்டு வாயேன்" "வேண்டாங்க ஸ்வேதாவுக்கு பாடம் சொல்லித்தரணும்.மேலும் எங்க அம்மாவே

எதுக்கு வந்தே எதுக்கு வந்தேன்னு தொணதொணத்து மாப்பிள்ளை கஷடப்படுவார்னு துரத்தி அனுபிபிருவா. எனக்கு எதும்

வேண்டாம் உனக்கு ஒரு ரெஸ்ட் வேண்டாமான்னு கேக்கறிங்களே பரிவோட அதுபோதும் எனக்கு"என்றாள்

"உன்னை ம்யுசியத்திலதான் வெக்கணும்"என்றுஅவளைப் பின்பக்கத்திலிருந்து அணைத்து "அழகான ம்யுசிய•ம்

பிறவி.என்ன கொஞ்சம் தலைக்க டை போட்டு ப்யுட்டி பார்லர்ல போய் திருத்தம் பண்ணிக்கிட்டு வந்தா ஸ்வேதாவை உன்

தங்கையான்னு கேப்பாங்க எல்லாரும். சாவிதிரி நீ ஏன் உன் தோற்றத்தைப் பற்றிக் கவலைப் படறதே இல்லை?" "யாருக்காக

நான் அலங்காரம் பண்ணிக்கணும்?"
"எனக்காகத்தான்"
"நீங்க இந்த வெளி அலங்காரத்தினாலதான் எம்மேல அன்பா இருக்கிங்களா?" "சேச் சே நீ என்ன ரூபத்திலயும் எனக்கு

அழகானவதான். என்று அவளை மறுபடி முத்தமிட்டுவிட்டு 'இன்னும் ஒரு காப்பி 'என்ற போது போன் மணியடித்தது "சாவித்ரி

ஆபீஸ் போறேன்.அந்த வாழிஷங் மெஷ’ன் காரன் சேல்ஸ்மன் வருவான் காட்டச் சொல்லு.எனக்காகக் காத்திருக்க

வேண்டாம்.கொஞ்சம் லேட்டாகும் ஆபிஸ்ல" என்றான் போகும் போது கூட அவளை இன்பமாக மோளில் அழுத்திவிட்டுத்தான்

சென்றான்.

சாயங்காலம் அந்த இயந்திர் கொ•டுவரப் பட்டது.வெளிர் நீலத்தில் ஒரு நெற்குதிர்க் குழந்தைபோல் இருந்தது பளபளவென்று

இரண்டு மூடிகள். அருகே விதவிதமான குழாய் இணைப்புக்கள் தண்­ருக்காக. டை கட்டின இளைஞன் நாயை"இந்த டாக்

கடிக்கங்களா"என்று கை சொடக்கினான். டோன அவனை மாதிரி பார்த்தது."கட்டிப் போடறிங்களா?" என்றவனைப்

பார்த்துவாலாட்டியது "நான் ஒரு நாய் நேசன்" என்றான் அவன் "நீங்க எதுவுமே செய்யவேண்டாம் மிஸஸ் சதீஷ் குமார் இந்த

துணிகளை இந்த ச்சூட்டுக்குள்ள போட்டு இந்த பட்டனைஇமுக்கினா போதும் இந்த விளக்கு எரியும்.ஃபஸ்ஸ’ லாஜிக்

மைக்ரோப்ராஸஸர் கண்ட்ரோல் ஆறு வாஷ’ங்ப்ரொக்ராம்.பதினெட்டு காம் பினேஷன் அஞ்சு கேஜி துணிபோடலாம். ரம்பா

வீட்டிலகூட இதே மாடல்தான்.உங்க துணிங்களுக்கு தகுந்தாப்பல டைமிங்ஸை தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு முதல்ல

ரின்சிங், வாஷ’ங்,ஸ்பின் ட்ரையிங்,பை டைரஙகஷனல் ரெண்டு டரைக்ஷன்லயும் பண்ணிட்டு இந்தப் பாருங்க ,வெளிய வரப்ப

ஏறக்குறைய காஞ்ச நிலையில வரும்.எடுத்து ஒரு உதறு உதறிப் போட்டுக்கலாம் அவவளவுதான் பட்டன் உடையாது,

ப்ரைட்னஸ் போகாது. அதும் 'டிஜிட்'னு ஆப்டிக்கல் ப்ரைட்டனர் சேரத்திங்கன்னா.."

"என்ன விலை"
"பதினஞ்சாயிரம்.கூட ஒரு வால்கிளாக் இலவசமா தரோம்"
சாவித்ரி அந்த விந்தை இயந்திரத்தை அவன் இயக்க ஆர்வத்துடன் பார்த்தாள் அதிலிருந்து ஆரோக்கியமான சப்தங்கள் வர

சற்று நடுங்கிவிட்டுத் தானே நின்றது யுவன் விற்பனை விற்பன்னன்.தன் டையை தோளில் போட்டுக் கொண்டு முக்கால் வாசி

உலர்ந்த பளிச்சென்ற துணிகளை வெளியே எடுக்க சாவித்ரிக்கு ஹைடெக் யுகத்தில் பிரவேசிப்பதில் பெருமையாக இருந்தது

சாயஙகாலம் சதீஷ் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமாகிவிட்டது. அதற்குள் சாவித்ரி வாஷ’ங் மெஷ’னைப்

பழகிவிட்டாள்.வீட்டின் பின் முற்றத்தில் பளபளவென்று எல்லாத் துணிகளும் காற்றில் ஆட அலாவுதீனின் ஜ“னி போல

அருகில் நின்றது மாடல் நம்பர் டிஆர்ஏ 934. "டெக்னாலஜி இருக்கறப்ப வீட்டு வேலையெல்லம் பெரிய சுமையே அல்லை

சாவித்ரி சப்பாத்தி மெஷ’ன் வந்துடுதது ரெடிமிக்ஸ் இட்லி மாவு வந்துடுதது எது வேணும் சொல்லு" "எதும் வேணாம் இந்த

வாஷ’ங் மெஷ’னைவிட எனக்கு ஒண்ணுதாங்க பெரிசு" "என்ன" அருகில்வந்து களைத்துப் போன முகத்தை நிமிர்த்தினான்.

"உங்க அன்புப் பெண்டாட்டி கஷ்டப் படறாளேன்னு பரிவா ஒரு வார்த்தை சொல்றிங்களே அது போதுங்க எட்டு ஊருக்கு

உழைப்பேன்"

"அன்புக்கு என்ன சாவித்ரி?நமக்கு எத்தனை வருசமாச்சு கல்யாணமாகி"
"தை வந்தா பதினஞ்சு"
"இன்னைக்கும் அப்படியே இருக்கே" என்று அவள் மூக்கு நுனியை விரலால் தொட்டான் சதீஷ் "கிவ் மி எ கிஸ்"
"பாக்கித் துணியை தோச்சுட்டு வந்துர்றேன்"
சாவித்ரி உள்ளம் பொங்ககி நிறைந்த சந்தோஷத்தோடு வாஷ’ங் மெஷ’னில் போடுவதற்கு கணவன் கழற்றிப் போட்ட

சட்டையை எடுத்துச் சென்றாள்
கணவனின் சட்டை என்பதே ஒரு கிறக்கத்தை ஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள் முதுகுப் பக்கத்தில் லேசான

பர்ஃப்யும் வாசைன.
நம் விட்டில் இந்த வாசனை கிடையாதே!

(முற்றும்)

Author's note on this story
When I started writing this story I didn't have a clue how it was going to develop and end. Popular writers often have to work to deadlines I had a pending request

from `kalki` magazine to send a story I opened the day's newspaper and saw an ad for a washing machine; the link to the urban housewife was immediately

established and after that the story wrote itself I AM NOT RECOMMENDING THIS METHOD TO BEGINNERS Dont forget this method is employed by a person who has

37 years of writing and reading at the back of his mind including such great masterpieces like Katherine Mansfield's. `Bliss`

======================


யாகம் - சிறுகதை

சிகாகோவின் ஓ-ஹேர் விமான நிலையத்தில் ப்ளேனைத் தவறவிட்டு நாற்காலியில் உட்கார்ந்த போது அருகில் குடுமி

சாஸ்திரியை முதலில் கவனிக்கவில்லை.காசு போட்டுவிட்டு நாற்காலிக் கைப்பிடியிலே இருந்த குட்டி டெலிவிஷனில் ந்யுஸ்

பார்த்தேன்.எப்படி இன்னும் ஐந்து மணிநேரத்தைப் போக்குவது என்று கொட்டாவி விட்டு விட்டு மூக்கைத் திருப்பியபோது

சந்தன வாசனை கற்பூர வாசனை அடித்தது.பக்கத்தில் பார்த்தால் சாஸ்திரிகள்.அமெரிக்கன் தான். இருந்தாலும் வைதிக

சாஸ்திரிபோலக் குடுமி. அதை புதன்கிழமை-புதன்கிழமை சவரம் போலும்.பஞ்சக் கச்சம் கட்டிக் கொண்டு முரட்டு வேஷ்டி

கையால் செய்ததாக இருக்க வேண்டும்.கோடிக்கரைத் துண்டைப் போட்டுக் கொண்டு மாராப்பை மூடிக்கொண்டு

மன்னார்குடி ராஜகேபால சுவாமி கோவிலில் இருந்தால் நம்பக் கூடிய ஆசாமி. சிகாகோவில் என்னைப் பார்த்துச் சிரித்தான்

கொஞ்சம் பழுப்பேறிய புஸ்தகத்தில் சமஸ்க்ருததில் படித்துக் கொண்டிருநதான். என்னை மணி என்ன என்று கேட்டான்.

சொன்னேன்.
"நீங்கள் பாரத தேசமா?" என்றான். ஆங்கிலத்தில்தான்.'இண்டியா'என்ற பதம் உபயோகிக்க வில்லை.
"ஆம்"
"பெயர்?"
சொன்னேன். "நீங்கள்?"
"என் பெயர் மிட்சல். அது பூர்வ ஜன்மத்துப் பெயர். இப்போது பாரத்துவாஜன்"
"இஸ்கான் இயக்கமா?"
"சேச்சே அவர்கள் யாவரும் போலிகள்"(ஃபோனி என்ற வார்த்தையை உபயோகித்தான்)"நாங்கள் தீவிர நோக்கம் உள்ளவர்கள்

'பேக் டு தி வேதாஸ்', வேதங்கள் என்னும் சொத்தைப் பற்றி பாரத தேசத்தவரான உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ரிக்,

தைத்திரியம், சாம, அதர்வ வேதம்" "தைத்திரியம் இல்லை யஜூர்" என்றேன்.
"தைத்திரியம் என்பது யஜூர் வேதத்துக்கு வேறொரு பெயர்"என்றான் எனக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. "எனககு

சம்ஸ்க்ருதம் தெரியாது நான் ஒரு கம்ப்யுட்டர இன்ஜினியர். உங்கள் நாட்டில் பயிற்சிக்காக வந்திருக்கிறேன்
" அவன் சிரித்து" நான் உங்கள் நாட்டுப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்".
"ஆச்சரியம். இதை ஒரு முழு வட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.எங்களுக்கு வேதமும் உபநிஷத்தும் உபயோகமில்லாமல்

போய்விட்டது. அவைகளை நீங்கள் பிடித்துக் கொண்டு விட்டீர்கள்"
அவன் புன்னகையுடன் என்னைப் பார்த்தான்."நீங்கள்தான் இழந்து விட்டீர்கள்"
"இல்லை .அவையெல்லாம் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. படிக்கலாம் அவ்வளவுதான்" "யார் சென்னார்கள்? எங்கள்

'பேக் டு த வேதாஸ்'இயக்கத்தில் நடை முறையிலும் வேதங்களின் படி எல்லாமே செய்து கொண்டிருக்கிறோம்"
"இயலாதது"
"நீங்கள் வேதங்களைப் படிக்காமல் எப்படிச் சொல்ல முடியும்?"
"படித்த வரையே சொல்லலாம். இம்பாஸ’பிள். வேதங்கள் முழவதும் யாகங்கள் யக்ஞங்கள்தாம்"
"வேதம் முழுதும் என்று சொல்வது தப்பு. வேதம் என்றால் அறிவு.ரிக் வேதம் பல தெய்வங்களுக்குரிய பிரார்த்த€னைப்

பாடல்களைச் சொல்வது.ஸாம வேதம் இசைப் பொருளை உணர்த்துவது.யஜூர் வேதம்தான் நீங்கள் சொல்கிற மாதிரியாக

விதிகளை உணர்த்துவது இதிலும் கிருஷ்ணயஜூர், சுக்லயஜூர் என்று இரு வகை உண்டு.அதர்வண வேதம் மாந்திரிக

வசியக் கிரியைகளைக் கூறுகிறது." அதன்பின் ரிக் வேதத்தில் எத்தனை மண்டலம் எத்தனை சூக்தங்கள் என்று அவன்

தீவிரமாக எனக்கு சொல்லத் துவங்கியபோது எனக்குச் சிரிப்பு வந்தது.என்ன ஒரு வினோதமான அபத்தம்.கம்ப்யுட்டர் படிக்க

வந்த இந்திய அந்தணனுக்கு அமெரிக்க குடுமி சாஸ்திரி வேதங்களைப் பற்றி ஓஹேர் விமான நிலையத்தில் அத்தனை

நவீனங்களுக்கு மத்தியில் ஃபைபர் நாற்காலியில் காசுபோடடு டெலிவிஷன் யுகத்தில். "யாகங்களை நடை முறையில் நடத்த

முடியாது என்று சொல்வது தப்பு. நாங்கள் எங்கள் வேத புரியில் வாஜஸநேயி ஸம்ஹ’தையில் உள்ள நாற்பது பகுதிகளிலும்

உள்ள அத்தனை யாகங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.அக்னிஹோத்திரம் சாதுர்மாஸ்ய்ம் எல்லாம் செய்கிறோம்."
"வேதபுரியா?"
"ஆம். இங்கிருந்து நாற்பது மைல் து‘ரதில் உள்ளது அதுதான் எங்கள் தலைமைச் செயலகம்" அவன் மறுபடி என்னை மணி

கேட்டான். மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்து"இன்னும் நாலரை மணி உள்ளது.உங்களுக்கு இஷ்டமிருந்தால் நான்

அழைத்துப் போகிறேன். உங்களுக்கு இஷ்டமிருந்தால்தான்!"
நான் சற்று நேரம் யோசித்தேன். போய்த்தான் பார்ககலாமே. இந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டிருப்பதை விட இது

பராவயில்லை. என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாம்" "என்ன சிரிக்கிறீர்கள்?"
"நான் ஒரு பிராமணன். என்னைப் போன்றவர்கள் இந்திய்க்காடுகளில் செய்யவேண்டிய வேலைகளை ஜெட் வேக நாட்டில்

அமெரிக்கரான நீங்கள் செய்கிறீர்கள்"
"தப்பு சிரேளத யாகங்களில் நான்கு வகையான புரோகிதர்கள் பங்கெடுக்க வந்தனர்.ஹோதர், உத்காதர்,அத்வரியு,பிராமணர்

என்று"
அவனுடைய அமெரிக்க சம்ஸ்க்ருதம் வேடிக்கையாக இருந்தாலும் அவன் என்னைவிட அதிகம், மிக அதிகம் வேதம்

படித்தவன் என்பது சுலபமாகத் தெரிந்தது. ஆர்வமான கண்கள். எதையும் தீரக் கற்றுக்கொண்டுவிடும் அமெரிக்க ஆர்வம்.

அவனிடம் வார்த்தை விடக்கூடாது என்று தீர்மாநினத்தேன். இருந்தும் என்னதான் செய்கிறார்கள் பார்த்துவிடலாம் என்று

தோன்றியது."வருகிறேன்" என்றேன்.
"எங்கள் புருஷமேதத்தில் கலந்துகொள்ள உங்களுக்கு இச்சைதானே"
"ஆம்" என்றேன்.
அவன் உற்சாகமாக"வாருங்கள்" என்றான்.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தோம் மூடுபனி விலகியதால் நிமிஷத்துக்கு பத்துப் பதினைந்து ப்ளேன்கள் ரன்வேயில்

அசௌகரியமாக இறங்கிக்கொண்டிருந்தன.
எக்ஸ்ப்ரஸ்வே யில் கார்ச்சங்கிலி தொடுவானம் வரை தெரிந்தது.
"இதிலிருந்தெல்லாம் விலகத்தான் வேதபுரி" என்றான்.அவன் கார் ஏர்போர்ட்டிலிருநது அரைமைல் து‘ரத்தில் எட்டாவது

அடுக்கில் பார்க் பண்ணியிருந்தது.காவிக் கலரில் பிடிவி என்றும் ஓம் என்றும் எழுதியிருக்க žட் கவர்கள் கூட காவி

வண்ணத்தில் இருந்தது.கொஞ்ச நேரம் ஊர்ந்து எக்ஸ்ப்ரஸ் பாட்டையை விட்டு விலகிவிட்டோம்.குறுகிய மௌனமான

பாதையில் அமெரிக்காவில் கூட இம்மாதிரியான பாதைகள் உள்ளனவா என்று ஆச்சரியப்படும்படியாக இருந்தது.குலுங்கிக்

குலுங்கி பாதையில் ஆரண்யத்தில் புகுவது போலத் தோன்றியது.அவன் பேசிக்கெர்ண்டே ஓட்டினான்." உணவு,

நடைமுறைகள் அத்தனையும் வேதகாலம்தான்.வேதங்களில் உள்ள கருத்துக்கள் மனித நாகரிகத்தின் மகோன்னதமான

கருத்துக்கள்.இப்போது இவர்கள் சொல்லும் Big bang தத்துவத்தை ரிக்வேதம் சொல்லியிருக்கிறது. இருளை மூடி இருள் இருந்தது

என்றும் மகாப்ரளயம் ஏற்பட்டு தவம் மூலமாக ஒரு ஏகவஸ்து என்றும் .." "இந்த மாதிரி கவைக்கு உதவாத புத்தகங்களால்தான்

எங்கள் நாடு žரழிந்து பிற்போக்காக இருக்கிறது.அதையெல்லாம் கொளுத்திப் போட்டிருந்தால் நாங்கள் உருபட்டிருப்போம்.

எங்களுக்கு உங்களிடமிருந்து வேண்டியது வேதம் இல்லை டாலர்"என்றேன். அவன் மனம் புண்பட்டுவிட்டது போலும்

அதன்பின் அவன் மௌனமாகவே வந்தான். சற்று நேரத்தில் 'வெல்கம் டு வேதபுரி'என்றும் 'ஸ•ஸ்வாகதம்' என்றும்

ஆங்கிலத்திலும் சம்ஸ்க்ருதத்திலும் போர்டு போட்டு உறுதியாக கம்பி வேலி போட்டு அடரத்தியான காட்டுப் பிரதேசம்

தெரிந்தது.பாதை இன்னும் குறுக சிற்சில மான்கள் துள்ளியோடின.து‘ரத்தில் குடிசைகள் தெரிந்தன.எங்கிருந்து இவர்களுக்கு

ஓலை கிடைத்தது என்று ஆச்சரியமாக இருந்தது.நாங்கள் இறங்கி நடக்க கொஞ்சம் சதுரமான பர்ணசாலை போன்ற

இடத்தில் புகைந்து கொண்டிருந்த செஙகற்களால் சிறகு விரிந்த பறவை வடிவத்தில் ஒரு இடம் அமைந்திருக்க அதைச்

சுற்றிலும் அக்னி சதா எரிந்துகொண்டிருக்க,அதில் நெய்,ஆம்,நெய் ஊற்றிக்கொண்டு சிற்சில வெள்ளைக்கார

செம்பட்டைத்தாடி முனிவர்கள் ஓம் ஓம் என்று மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தார்கள்.
"அக்னி சயனக் கிரியை"என்றான் என்னுடைய அமெரிக்க பாரத்வாஜன்! சற்று மேற்புறம் நோக்கியதில் வெளிர் மஞ்சளில்

புடவை அணிந்த வெள்ளைக்கார ஸ்திரீகள் நின்று கொண்டிருக்க அவர்களுக்கு மிக அருகே ஐந்து பசுக்களின் தலைகள்

வரிசையாக வைக்கப் பட்டிருந்தன.அவைகளின் நெற்றியில் குங்குமம் இட்டிருக்க வேதகோஷம் உச்சஸ்தாயியில் இருந்தது.

"அசுவினி இந்திர தேவர்களுக்கு பலி" என்றான்.அந்த இடத்தைக் கடந்து சென்று ஆசிரம நிழலில் மரத்தடியில் இருந்தவரிடம

சென்று"மஹாப்பிரபு! அழைத்து வந்திருக்கிறேன்" என்றான்.
"நல்லது என்ன பெயர்?"என்றார் அந்த ரிஷ’.பூனைக்கண் செம்பட்டைத் தாடி டெக்ஸஸ் வகை ரிஷ’. கமண்டலம் ருத்திராட்சம்

சடாமுடி நீவல்.. எனக்கு எந்த இடத்தில் எந்த தேசத்தில் இருக்கிறோம் என்கிற குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
"சங்கர நாராயணன்" என்றேன்.
"அந்தண குலமா?"
"ஆம்"
"மிக நல்லது! பிங்கலை இவனை அழைத்துப்போ "என்க அந்தப் பெண்களில் ஒருத்தி புன்னகையுடன் என் அருகில் வந்து

"வாருங்கள்" என்றாள். ப்ரா அணியாததால் முலை குலுங்குவது வேதகாலமோ கம்ப்யூட்டர் காலமோ இதமாகத்தான் இருந்தது.

பிங்கலை என்னை மற்றொரு நாலாபுறமும் திறந்த இடத்துக்கு அழைத்துச் சென்று சிவப்பாகத் துண்டும் வேட்டியும்

கொடுதது "அணிந்து கொள்ளுங்கள்" என்றாள்.
"எதற்கு?"
"உங்கள் நவீன உடை யாகத்துக்குப் பொருந்தாது"என்றாள்.
"அணிவித்து விடுவீர்களா?" என்றேன்.
"ஓ அதற்கென்ன என்று என் அருகில் வந்து என்மேல் பட்டு என் சட்டையை நீக்கினாள்.
கழுத்தில் மஞ்சள் பூக்களால் மாலையிட்டு நெற்றியில் திலகமிட்டாள்.
"என்ன யாகம்?" என்றேன்.
"பாரத்வாஜன் சொல்லவில்லை? பசிக்கிறதாய் இருந்தால் பழங்கள் உண்ணலாம்"
"சொல்லவில்லை. என்னயாகம்"
"புருஷமேதம்"
"அப்படியென்றால்?"
அவள் என்னை நமிர்ந்து பார்த்து "ப்ரஜாபதி சொல்லவில்லை?"என்றாள்.
"இல்லையே ஏன்?"
"புருஷமேதத்தில் நு‘ற்றி எண்பத்து நான்கு வகை உண்டு!யஜூர் வேதத்தில் முப்பதாவது பகுதியில் உள்ளது இன்றைக்கு..

நீங்கள் பாடகரா?"
"இல்லை என்?"
"பிராமணரா?"
"ஆம்"
"புரிகிறது .புரோகிதருள் சிறநதவனாக ஆக பலியிடப் போகிறார்கள்"
"வெயட் எ மினிட் ! என்ன சொன்னாய்? பலியா?"
"அமாம், உன்னை பலியிடப் போகிறார்கள் புருஷமேதம் என்பது அதே. அரசர்களுக்கு வீரனை துறவிகளுக்கு

சூத்திரனை,இருளுக்கு கள்வனை, காமத்துக்கு விபச்சாரியை,சொர்க்கத்திற்கு வழுக்கைத் தலையனை என்று இபபடி யஜூர்

வேதத்தில் நியதிகள் இருக்கிறது"
"யு மஸ்ட் பி ஜோக்கிங்" என்றேன் சிரித்துக் கொண்டே.
"இல்லை" என்றாள். என் கையைப் பின்பக்கத்தில் கட்டினாள்."அழைத்துச் செல்லுங்கள்" என்றாள்.
ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்.

(முற்றும்)

Author's Note on this story

one of the themes of Science Fiction is placing an ancient ritual in modern settings. Authors like Brian Aldiss have used this theme effectively, I would recommend a delightful collection called `Untouched by Human Hands` Ira Levin's novel ` Rosemary's Baby` is also of this type This short story occured to me while waiting for a delayed flight in Chicago I did meet a person like the one in the story and was talking to him more or less in the same lines. The `Vedapuri` idea suddenly occured. I kept the plot in my mind and wrote it only after I did some reading on Vedic rituals.

Incidentally, this short story was made into a humourous play by my friend Ram of Los Angeles and staged in LA recently to an appreciative audience

========================================================================

சுஜாதாவின் சிறுகதை நுணுக்கங்கள்

"Read Literature for the pleasure of it , Ernest Hemingway once told an interviewer adding "whatever else you find will be the measure of what you brought to the reading". The literary form short story is usually defined as a brief fictional prose narrative often involving one connected episode. The short story is a concentrated form, dependent for its success on feeling and suggestion. When readers understand the ways an author uses language to create a fictional world the story's unity has an ever greater impact. Extracts from 'The Story and its Writer' by Ann Charters. The following short story is a mixture of the real and fictional .Please read this story as Nabakov suggests "the first time for pleasure ;bring out your scientific coolness when you study it the second time. ...focusing on 'getting there '.See how the author invents and shapes the narrative by using elements of fiction".

சீட்டு

ஒரே சிறுகதையால் உலகப் புகழபெற்றவர் என்றால் அமெரிக்காவைச் சேர்நத ஷர்லி ஜாக்ஸன் தான்(1919-1965) அவர் எழுதிய 'லாட்டரி' என்னும நிசமாகேவ சிறிய சிறுகதை பலமுறை தொகுக்கப்பட்டு பலமொழிகளில் பெயர்க்கப்பட்டு நாடகமாக டெலிவிஷனாக ஏன் பாலே நடனமாகக்கூட நடிக்கப்பட்டு பல கோணங்களில் விவாதிக்கப் பட்ட இந்தக் கதை முதலில் 1948ல் வெளிவந்த போது அமெரிக்க நாடே பலவிதங்களில் கண்டனம் தெரிவித்து அதை பிரசுரித்த நியுயார்க்கர் பத்திரிகையை கண்டபடி திடடினார்கள் கதை என்ன?

ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண நிகழச்சி நடைபெறுகிறது அன்றுதான் அந்த கிராமததின் புராதன வழக்கப்படி வருடாந்திர லாட்டரி நடைபெறவேண்டும அதிகாலையிலேயே கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக எதிர்பார்க்க இன்று லாட்டரி யார் பெயருக்கு விழப்போகிறது என்று விவாதங்களிடையே ஒரிருவர் இந்த பழக்கம் இன்னும் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கிளப்ப பழைய மனிதர்கள்' சும்மாரு காலம் காலமாக வரும் பழக்கம்' என்று அதட்ட இறுதியில் மைதானத்தின் நடுவே ஒரு ஸ்டூலில் ஒரு கருப்புப் பெட்டி வைக்கப் படுகிறது. நடுவர் நியமிக்கப் படுகிறார் . அகர வரிசைப்படி கிராமத்தின் ஒவ்வொரு குடுமபத்தற்கும் ஒரு பிரதிநிதி வந்து அந்தப் பெட்டியிலிருந்த சீடடு எடுத்து பிரிக்காமல் காத்திருக்கிறார்கள் எல்லோரும் எடுத்த பின் அவரவர் சீட்டை பார்ததுக் கொள்கிறார்கள் வெள்ளைச் சீட்டு கிடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.ஒரே ஒரு சீட்டில் மடடும் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது அது இந்த வருடம் திருமதி ஹட்சின்ஸனுக்கு வருகிறது "சீக்கிரம் முடித்து விடுங்கள் "என்கிறார் கிராமத்துப் பெரியவர் நடுவே ஒரு கற்குவியல். ஆளுக்கொரு கல் பொறுக்கிக் கொள்கிறார்கள் சீட்டு விழுந்த அபாக்கியப் பெண்மணி "இது அனியாயம்"என்று கதறி மைதான நடுவே வந்து நிற்க முதல் கல் வந்து அவள் மண்டையில் படுகிறது அதன் பின் அவர்கள் அவளை கல்லடித்துக கொல்கிறார்கள்

முற்றிலும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி முடிவைக் கொண்ட இந்தக் கதை ஆயிரக கண்க்கான வாசகர்களை சங்கடம் பண்ணியது. இந்தக்கதையின் ஆழக்கருத்து என்ன என்று பலபேர் யோசித்திருக்கிறார்கள் ஆசிரியையே கேட்டபோது "என்ன என்று விளக்கம் கூறுவது? கதையில் என்ன சொல்ல வேண்டும என்று நினைத்தேன் என்று விளக்குவது கஷ்டம். ஒரு மூர்க்கத்தனமான புராதனப் பழக்கத்தை தற்காலத்தில் என் சொந்த கிராமததில அமைத்து வாசகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி இனறைய தினங்களின் அர்த்தமில்லாத வன்முறைகளையும் அவவரவர் வாழ்க்கையில் உள்ள மனிதாபிமானமற்ற செயல்களையும் சுட்டிக் காட்ட முயற்சித்தேன்" என்றார்

' பாலம் 'என்கிற கதை எழுதியபோது எனக்கு சிறிய அளவில் இந்த மாதிரியான ஒரு எதிர் விளைவு ஏற்பட்டது .குறிப்பாக கோவையிலருந்து ஒருவர் ' அந்தக்கதையைப் படிதததும் உன்னையே கொல்ல வேணும் போலிருக்கிறது வரவா" என்று எழுதியிருந்தார்.

š இப்பதிவை மின்னஞ்சலிட